For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Tamil New Year : சித்திரையை ஏன் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

|

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடுகிறோம். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில் தான். சித்திரை முதல் நாளில் நமது குலதெய்வத்தை வழிபடலாம். குல தெய்வ வழிபாட்டின் மூலம் நம் குடும்பம் வாழையடி வாழையாய் தழைக்கும். நம் இஷ்ட தெய்வ வழிபாடு இருந்தாலும் முதலில் குல தெய்வத்தை வணங்கினால் தான் சகல சௌபாக்க்யங்களும் நம்மை தேடி வரும். வாழ்க்கை செழிப்புடன் அமையும். இப்போது உள்ள சூழ்நிலையில் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாதவர்கள் வீட்டிலேயே குல தெய்வ படத்தை வைத்து வணங்கலாம். அன்றைய தினம் பஞ்சாங்கம் படிப்பதன் மூலம் நிறைய நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை.

தமிழகம், கேரளாவில் சூரியனின் நகர்வை அடிப்படையாக வைத்து மாதப்பிறப்பு கணக்கிடப்படுகிறது. கர்நாடகா, ஆந்திராவில் சந்திரனை அடிப்படையாக வைத்து மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் மாதம் சித்திரை மாதம். இளவேனில் காலத்தில் மாதம் பிறக்கிறது. கிழக்கு திசையில் தொடங்குகிறது சித்திரை. தை மாதம் சூரியன் வடக்கு நோக்கி நகர்வார். ஆடி மாதத்தில் சூரியன் தெற்கு நோக்கு நகர்வார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அலற வைத்துள்ளது. எந்த பண்டிகை கொண்டாட்டங்களும் இன்றி மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டுள்ளன. மக்களின் பிரார்த்தனைகள் வீடுகளுக்கு உள்ளேயே முடிந்து விடுகிறது. ஏன் இப்படி இந்த பாதிப்பு எப்போது முடியும் என்று பலரும் கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் தமிழ் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. சித்திரை வருடப்பிறப்பை வடநாட்டில் பைசாகி என்றும் ,மேஷ சங்கராந்தி என்றும் குறிப்பிடுவர். கேரளத்தில் விஷூ என்றும் கொண்டாடுகிறார்கள். வீட்டிலேயே தமிழ் புத்தாண்டினை எளிமையாக கொண்டாடலாம். அன்றைய தினம் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பஞ்சாங்கத்திற்கு பூஜை

பஞ்சாங்கத்திற்கு பூஜை

புதுவருட பிறப்பன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளித்து புது ஆடைகளை அணிந்து அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர், விநாயகர் நவக்கிரகங்கள், குல தெய்வம் ஆகியவைகளுக்குப்பூஜை செய்து வழிபட வேண்டும்.

பஞ்சாங்கம் படித்தல்

பஞ்சாங்கம் படித்தல்

சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் பலவித பலன்கள் கிடைக்கும். விரதத்தைப்பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப்பற்றிச் சொன்னால், செல்வச்செழிப்பும் கரணத்தைப் பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும். அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும். யோகத்தைப்பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கனி காணுதல்

கனி காணுதல்

சித்திரை வருடப்பிறப்பன்று பலரது வீட்டிலும் கனி காணுதல் நிகழ்ச்சி நடைபெறும். பூஜை அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மங்கள பொருட்களை காணச்செய்வதே கனி காணுதல் ஆகும். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார்கள் . இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை கைநீட்டம்

சித்திரை கைநீட்டம்

புதுவருட தினத்தில் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை மாதம் முதல் நாள் கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளை ஆசிர்வாதம் செய்து அன்பளிப்பாகப் பணம் தருவதே கை நீட்டமாகும். புத்தாண்டு தினத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர் வைத்திருப்பார்கள்.

சார்வரி வருடம்

சார்வரி வருடம்

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு உலகம் முழுவதும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த நேரத்தில் வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்கள் ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ் புது வருட நாளில் அவரவர்களின் இஷ்ட தெய்வம், குல தெய்வத்தை வணங்கி நோய் பாதிப்பு நீங்க பிரார்த்தனை செய்வது நல்லது. கனி காண வசதியில்லாதவர்கள் வீட்டில் குலதெய்வ படத்தில் கண் விழிக்கலாம் ஆண்டு முழுவதும் நன்மைகள் நடைபெறும்.

நேர்மறையாக பேசுங்கள்

நேர்மறையாக பேசுங்கள்

புது வருட பிறப்பு நாளில் நல்ல செயல்களை மட்டுமே செய்யுங்கள். நேர்மறையாக பேசுங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். இந்த ஆண்டு அனைவரும் குடும்பத்தோடு வீட்டிற்குள் இருப்பதால் சுவையான சைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இதுபோல ஒற்றுமையோடு ஆண்டு முழுவதும் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

History, Importance and Significance of Tamil New Year | Why Do We Celebrate Tamil Puthandu?

Why do we celebrate tamil puthandu? Read on to know more about the history importance and significane of tamil new year.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more