For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா?

|

இந்து மதம் என்பது மாபெரும் பழமையான வரலாற்றைக் கொண்டது, இது வேத பாரம்பரியத்தில் வலுவான வேர்களைக் கொண்டுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, இந்து மக்களின் வாழ்க்கை தார்மீக, நெறிமுறை மற்றும் ஆன்மீக பரிந்துரைகள் மற்றும் வேத இலக்கியங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

Hindu Beliefs on Love and Love Making

இந்து மதத்தின் அனைத்து புராணங்களிலும் காதலைப் பற்றியும், காமத்தைப் பற்றியும் பல குறிப்புகள் உள்ளது. இவற்றின் மீதான புராணங்களின் மீதான பார்வையானது மிகவும் ஆழமானது அதேசமயம் வித்தியாசமானதும் கூட. இந்த பதிவில் காதல் மற்றும் காமம் பற்றி இந்து மதத்தில் நிலவும் நம்பிக்கைகள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் மீதான இந்து மத நம்பிக்கைகள்

காதல் மீதான இந்து மத நம்பிக்கைகள்

ஒரு மதத்தின் நம்பிக்கைகளும், அணுகுமுறைகளும் பலகாலமாக சோதிக்கப்பட்டதாகவும், பல தலைமுறையினரின் அனுபவத்தின் மூலமும், ஞானத்தின் மூலமும் வகுக்கப்பட்டதாகும். அவை இந்த கொள்கைகளை சோதித்து, அவற்றின் மரபுகளை சந்ததியினரிடமிருந்து பயனடையச் செய்தன. நமது பாரம்பரியம் காதல் மற்றும் காமத்தை எவ்வாறு கருதுகிறது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

இந்து மதம் காதலையும், காமத்தையும் வெறுக்கிறதா?

இந்து மதம் காதலையும், காமத்தையும் வெறுக்கிறதா?

பொதுவாக அன்பும், காமமும் மனித வாழ்க்கையுடன் ஒருங்கிணைந்தவை ஆகும், இவை மனித நடத்தைகளை ஆளக்கூடிய ஒரு வகையான உயிரியல் தூண்டுதல்கள் ஆகும். எனவே, அவை ஒருபோதும் இந்து பாரம்பரியத்தில் அருவருக்கத்தக்க அல்லது அவமதிப்புக்கான செயல்கள் அல்ல. ஆனால் காதல் மற்றும் காமத்தை நிர்வகிக்க வேண்டிய சில விதிமுறைகளை இது பரிந்துரைத்துள்ளது.

வாழ்க்கையின் நான்கு நோக்கங்கள்

வாழ்க்கையின் நான்கு நோக்கங்கள்

தர்மம் (நீதி), அர்த்தம் (செல்வம்), காமா (ஆசையை நிறைவேற்றுவது) மற்றும் மோட்சம் (விடுதலைக்காக உழைப்பது) என்பன வாழ்க்கையின் நான்கு முக்கிய நோக்கங்கள் என்று இந்து மதமும், புராணங்களும் கூறுகிறது. எனவே செல்வம், மோட்சம் போன்ற பிற நோக்கங்களைப் போலவே, ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றுவது இந்து மதத்தில் சமமான மற்றும் விகிதாசார முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. ஆகையால், ஒரு நபர் தனது வாழ்க்கைத் துணையுடன் திருமணத்திற்குப் பிறகு சரியான வழியில் அன்பையும், காமத்தையும் அனுபவிக்க தார்மீகரீதியாகவும், நெறிமுறைரீதியாயாகவும் முழு உரிமை உண்டு.

MOST READ: இந்த விரல் நீளமா இருந்தா உங்களுக்கு புற்றுநோய் வரவே வராதாம் தெரியுமா?

வாழ்க்கையின் நான்கு நிலைகள்

வாழ்க்கையின் நான்கு நிலைகள்

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் பிரம்மாச்சார்யா (மாணவர்), க்ருஹஸ்தா (வீட்டுக்காரர்), வனப்பிரஸ்தா (சமூக சேவகர்) மற்றும் சன்யாசா (சந்நியாசி) ஆகிய நான்கு திட்டவட்டமான நிலைகளை கடந்து செல்கிறது என்று பாரம்பரியம் கூறுகிறது. தொடர்ச்சியான இந்த கட்டங்களில், ஒரு நபர் கல்வியில் ஈடுபடுவதன் மூலம் நீண்ட ஆயுளுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார், பின்னர் திருமணம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தை வளர்க்கிறார், பின்னர் ஓய்வு பெற்ற பிறகு சமுதாயத்திற்கு சேவை செய்கிறார், பின்னர் உண்மையைத் தேடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

அனுமதிக்கப்படாத பருவம்

அனுமதிக்கப்படாத பருவம்

பிரம்மச்சாரிய மற்றும் சன்யாசா நிலைகளில் உள்ளவர்களுக்கு காதலும், காமமும் அனுமதிக்கப்படுவதில்லை. மனிதன் தனது வாழ்க்கைத் துணையுடன் திருமணம் செய்து கொண்ட பிறகு க்ருஹஸ்தா கட்டத்தில் இருக்கும்போதுதான் ஒழுங்குபடுத்தப்பட்ட உடலுறவில் ஈடுபட முடியும்.

திருமணத்தை நிர்வகிக்கும் விதிகள்

திருமணத்தை நிர்வகிக்கும் விதிகள்

சமூகத்தின் சில பிரிவுகளால் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் பலதார மணம் நடைமுறையில் இருந்த போதிலும், பொதுவாக, இந்து மதம் பலதார மணத்தை ஊக்குவிக்கவில்லை. இந்து மதத்தின் முக்கிய அம்சம் சரியான சடங்குகள் மற்றும் நடைமுறைகள் மூலம் திருமணமான ஒரு வாழ்க்கை துணையுடன் உண்மையுடன் இணைக்கப்படுவதுதான். இந்த வாழ்க்கைத் துணையுடன், ஒரு நபர் காதலையும் காமத்தையும் அனுபவிக்க முடியும், ஆனால் மற்ற நபர்களை மரியாதையுடனும் பயபக்தியுடனும் பார்க்க வேண்டும், ஒருபோதும் காமக்கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது.

நிறைவேற்றுவதில் மிதமான தன்மை

நிறைவேற்றுவதில் மிதமான தன்மை

ஒழுங்குபடுத்தப்பட்ட சமநிலை என்பது இந்து மதத்தில் பல கருத்துகள் மற்றும் சித்தாந்தங்களின் அடிப்படையாகும். வாழ்க்கைத் துணையுடன் ஒரு இன்பமான காதல் மற்றும் பாலியல் செயலில் ஈடுபடுவது ஒருபோதும் விமர்சிக்கப்படுவதோ அல்லது தடைசெய்யப்படுவதோ இல்லை என்றாலும், மதம் எப்போதுமே வாழ்க்கையின் மற்ற முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதை இழந்துவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தை வலியுறுத்துகிறது, வாழ்க்கையின் மற்ற முக்கிய அம்சங்களிலிருந்தும் இத்தகைய ஈடுபாட்டை புராணங்கள் ஆதரிக்கிறது.

MOST READ: இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...!

காமம் பற்றிய நம்பிக்கைகள்

காமம் பற்றிய நம்பிக்கைகள்

மதம் பாலினத்தை முக்கியமாக ஒரு தெய்வீக செயலாகவும், பூமியில் மனித தலைமுறையை இனப்பெருக்கம் செய்வதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒரு வழிமுறையாக கருதுகிறது. ஆகவே, தனக்கும் சமூக அமைப்பின் நல்ல நலன்களுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு வரம்பைத் தாண்டி சுய திருப்திக்காக ஒருபோதும் இதனை துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது அல்லது தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்று புராணங்கள் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hindu Beliefs on Love and Love Making

Hinduism is a very ancient tradition that has its strong roots in the Vedic heritage.
Story first published: Tuesday, October 15, 2019, 11:45 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more