For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம நடிகர்கள் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க தெரியுமா? இதோ பார்த்து தெரிஞ்சிக்கங்க...

தென்னிந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கக் கூடிய 10 நடிகர்கள் யார் என்பது பற்றி தான் இந்த பட்டியலில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

By Mahibala
|

நமக்குப் பிடித்த நடிகர்களின் படங்கள் ரிலீஸானால் முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும். தன்னுடைய ஹீரோவின் பிறந்த நாள் வந்தால் தன்னுடைய பாக்கெட்டில் இருக்கும் பணத்தை போட்டு நற்பணி மன்றம் நடத்த வேண்டும், நமக்குப் பிடித்தவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது தான் ரசிகனிள் அதிகபட்ச ஆசையாக இருக்கும்.

top highest paid south indian actors

ஆனால் ஹீரோவின் சம்பளம் பற்றி மட்டும் தெரியாது. அப்படி உருகி உருகி நேசித்து உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கும் ரசிகர்கள் உங்களுக்குப் பிடித்த ஹீரோக்கள் படங்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற குள்வியை மட்டும் எப்போதும் கேட்டதில்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தால் அது தவறில்லை. அதனால் எந்தெந்த நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குறாங்கனு தெரிஞ்சிக்கலாம் வாங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நானி

நானி

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரும் அதிகமாக இளைஞர்களைக் கவர்ந்தவரும் ஆன நானி ஒரு திரைப்படத்துக்கு ஐந்து கோடி ரூபாய் வீதம் சம்பளம் வாங்குகிறார்.

MOST READ: மோடியும் வனமகனும் - வைரலாகும் இந்த வனமகன் யார்? தெரிஞ்சிக்கணுமா?

ரவி தேஜா

ரவி தேஜா

ரவி தேஜா தன்னுடைய சமீபத்திய திரைப்படங்களின் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தைப் பிடித்திருக்கும் ஆக்ஷன் ஹீரோ. இவரும் ஒரு படத்துக்கு ஆறு கோடி (6 கோடி) ரூபாய்க்குக் குறையாமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

நாகர்ஜூனா

நாகர்ஜூனா

மகனும் மருமளும் பிஸியாக நடித்து வரும் வேளையில் கூட, தெலுங்கு சினிமாவில் நாகர்ஜூனாவுக்கு இன்னும் கொஞ்சம் கூட மவுசு குறையாமல் தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவருடைய ஃபிட்னஸ் தான். இன்றைய இளம் ஹீரோக்களை விட அதிகமாகவே சம்பளம் வாங்குகிறார். ஒரு படத்துக்கு கிட்டதட்ட 7 கோடிக்கும் மேல் வாங்குகிறார்.

வெங்கடேஷ்

வெங்கடேஷ்

தெலுங்கு சினிமாவில் எல்லோரையும் கவர்ந்த கமர்ஷியல் ஆக்சன் ஹீரோவாக வலம் வருபவர் வெங்கடேஷ். இவர் ஒரு திரைப்படத்துக்கு குறைந்தபட்சம் 8 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார்.

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

என்.டி.ராமா ராவின் மகனான் பாலகிருஷ்ணா ஒரு படத்துக்கு ஒன்பது கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறாராம்.

அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன்

தெலுங்கில் நம்பர் ஹீரோவாக இருக்கும், பெரும் இளைஞர் பட்டாளத்தை ரசிகர்களாகக் கொண்டிருக்கும் அல்லு அர்ஜூன் கிட்டதட்ட ஒரு படத்துக்கு 13 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

MOST READ: அட நம்ம ஜெனீலியாவா இது?... அந்த அழகோட ரகசியம் இதுதானாமே!

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் மகேஷ் பாபு ஒரு படத்துக்கு கிட்டதட்ட 22 முதல் 25 கோடி ரூபாய் வரையிலும் சம்பளம் பெறுகிறார்.

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸ் தான் தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். பாகுபலிக்குப் பிறகு, பிரபாஸின் மவுசு எங்கேயோ போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு படத்துக்கு கிட்டதட்ட 30 கோடி ரூபாய் வாங்குகிறாராம். இது தமிழ்நாட்டில் கமல்ஹாசன் வாங்குகிற சம்பளம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது வந்து தலைய காட்டினாலும் ஸ்கீரின்ல மாஸ் காட்டவார். அதனால தான் அவர் சூப்பர் ஸ்டார். ரஜினி ஒரு படத்துக்கு 60 முதல் 70 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

விஜய்

விஜய்

ரஜினிக்கு அடுத்தபடியாக குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் என எல்லோர் மனதையும் கவர்ந்து, தன் வீட்டில் ஒருவராக நினைக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் உயர்ந்திருக்கும் கமர்ஷியல் ஹீரோ என்றால் அது விஜய்யைத் தவிர வேறு யாராக இருக்க முடியும். விஜய்க்கும் ஒரு படத்துக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளமாகக் கொடுக்க தயாரிப்பாளர்கள் நீ, நான் என போட்டிப் போட்டு வருகிறார்கள்.

அஜித்

அஜித்

தலன்னா சும்மாவா. விஜய்க்கு நிகராக ஃபேன் பாலோயர்ஸ் இருக்கிற நடிகர் அஜித். அவருக்கு ஒரு படத்துக்கு 35 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.

கமலஹாசன்

கமலஹாசன்

கமலஹாசன் ஒரு படத்துக்கு குறைந்தபட்சம் 25 முதல் 30 கோடி ரூபாய் வரையிலும் சம்பளம் கேட்கிறாராம்.

சூர்யா

சூர்யா

சூர்யா சிங்கம் வரிசைப் படங்களுக்குப் பிறகு பெரிய அளவில் ஹிட் கொடுக்காவிட்டாலும் கூட, ஓரளவு முன்னணியிலேயே இருப்பதால், ஒரு படத்துக்கு 22 முதல் 25 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருகிறார்கள்.

MOST READ: கணவன் மனைவி ஒற்றுமை ஏற்பட... செல்வம் பெருக இதை முக்கியமா செய்யுங்க

விக்ரம்

விக்ரம்

அர்ப்பணிப்போடு பணியாற்றுவதில் தமிழ் சினிமாவில் எப்போதுமே விக்ரமுக்கு தனி இடமுண்டு. அவருக்கும் ஒரு படத்துக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என்றால் அது நிச்சயம் விஜய்க்குப் பிறகு சிவகார்திகேயன் தான். இவரும் படத்துக்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கிறாராம்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இளைஞர்கள் மத்தியில் பேரன்பை தன்னுடைய படங்களின் மூலமும் தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் பெற்றிருப்பவர் விஜய் சேதுபதி. கடின உழைப்புக்குப் பின் உயரத்தைப் பார்த்தவர். கிட்டதட்ட 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க முன்வருகிறார்கள் இவருக்கு.

MOST READ: விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை சூப்பரா சிம்பிளாக செய்வது எப்படி?

கார்த்திக், தனுஷ், சிம்பு

கார்த்திக், தனுஷ், சிம்பு

கார்த்தி மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்கள் அவ்வப்போது வந்தாலும் தங்களுக்கான படத்தேர்வு, நடிப்பு ஆகியவற்றில் தங்களுக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர்கள் தான் தனுஷ், கார்த்தி மற்றும் சிம்பு. இவர்கள் தலா ஒரு படத்துக்கு 8 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

top highest paid south indian actors

The South Indian film industry is absolutely huge, featuring a great number of films of Tamil, Telugu, Kannada and Malayalam languages made every year. Many of these movies are made with whopping budgets like "Bhahubali" and "Robot". Crores of rupees are spent on making these movies and for actors.
Story first published: Wednesday, August 28, 2019, 15:04 [IST]
Desktop Bottom Promotion