Latest Updates
-
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம்
ஒவ்வொரு ராசிக்காரர்களிடமும் மறைந்திருக்கும் திறமைகள் என்னென்ன தெரியுமா?
ஒவ்வொரு ராசியின் குணாதிசயங்களைக் கொண்டு, ஒவ்வொரு ராசிக்காரர்களிடம் மறைந்திருக்கும் திறமையைக் காண ஜோதிடம் உதவுகிறது. இப்போது ஜோதிட சாஸ்திரத்தின் படி, உங்கள் ராசிப்படி உங்களிடம் மறைந்திருக்கும் திறமை என்னவென்பதைக் காண்போம்
ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை மறைந்திருக்கும். அதை ஒவ்வொருவரும் உணர்வதற்கு சிறிது காலம் தேவைப்படும். ஆனால் அப்படி மறைந்துள்ள திறமை தான் நம்மை மற்றவர்களை விட வித்தியாசப்படுத்துகிறது. சில நேரங்களில் மக்களால் தங்களிடம் மறைந்துள்ள திறமைகளை கண்டுபிடிக்க முடியாது மற்றும் அதை அறிய நிறைய முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதை கண்டுபிடிக்கும் போதெல்லாம், அந்த சிறப்பான திறமை முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களை தந்து, அதில் சிறந்து விளங்க உதவும்.

நீங்கள் உங்களின் மறைந்திருக்கும் திறமை என்னவென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறீர்களா? அதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் ஜோதிடம் அதற்கு பெரிதும் உதவி புரியும். ஒவ்வொரு ராசியின் குணாதிசயங்களைக் கொண்டு, ஒவ்வொரு ராசிக்காரர்களிடம் மறைந்திருக்கும் திறமையைக் காண ஜோதிடம் உதவுகிறது. இப்போது ஜோதிட சாஸ்திரத்தின் படி, உங்கள் ராசிப்படி உங்களிடம் மறைந்திருக்கும் திறமை என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைவருக்கான குணங்களை கொண்டவர்கள். இவர்கள் ஒரு அணியை சிறப்பாக வழிநடத்துவதால், மக்கள் இவர்களை முழுமையான நம்பியிருப்பார்கள். இவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் தைரியமானவர்கள் மற்றும் எந்த முடிவையும் விரைவாக எடுப்பார்கள். இந்த ராசிக்காரர்களிடம் மறைந்துள்ள திறமை மக்களை சிறப்பாக வழிநடத்துவதாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் மறைந்துள்ள திறமை, இவர்கள் பெரிய சமையல்காரர். ருசியான, சுவையான ஒன்றை சமைக்கும் போது அவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் புதுமையாகவும் இருக்கிறார்கள். எனவே உங்கள் வீட்டில் ரிஷப ராசிக்காரர்கள் இருந்தால், அவர்களை இன்று இரவு சமைக்க சொல்லிப் பாருங்கள். உங்களை அசர வைத்துவிடுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் மறைந்துள்ள திறமை என்றால் அது இவர்கள் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுந்தாளர். உங்களின் வார்த்தைகள் மூலம், மற்றவர்களுக்கு ஒரு விஷயத்தை எளிதில் புரிய வைப்பீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் ஒரு சிறந்த சிகிச்சையாளர். யாரேனும் மனதளவில் கலங்கி இருந்தாலோ அல்லது காயப்பட்டிருந்தாலோ, அவர்களின் மன வலி/வேதனையை ஆறுதல் வார்த்கைளால் குணப்படுத்தும் திறன் கொண்டவர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மேடையில் சிறப்பாக செயலாற்றுவார்கள். நீங்கள் மேடையில் ஏற விரும்பாத மிகவும் கூச்ச சுபாவமுள்ளவராக இருக்கலாம். ஆனால் அதுவே உங்களின் மிகச்சிறந்த திறமை. ஒருமுறை நீங்கள் மேடை ஏறினால், மக்கள் உங்களை முடிவில்லாமல் பாராட்டுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்துவார்கள். எனவே ஒரு பெரிய வேலைக்கு சிறந்த திட்டம் தேவைப்பட்டால், அதை சரியாக செய்யக்கூடிய ஒரே நபர் நீங்கள் தான். ஏனெனில் நீங்கள் ஒரு சிறந்த திட்டமிடுபவர்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே சிறந்து வாதாடக்கூடியவர். ஆனால் இது இவர்களுக்குத் தெரியாது. இந்த ராசிக்காரர்களின் வசீகரமான ஆளுமை இவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மற்றவர்களை நம்ப வைப்பதை எளிதாக்குகிறது. நல்ல பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஒப்பந்தத்தை முடிப்பதில் நீங்கள் புத்திசாலி.

விருச்சிகம்
உள்ளுணர்வு மற்றும் டெலிபதி உணர்வு காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு சிறந்த புலனாய்வாளர். ஒருவர் தங்களின் உண்மையான குணத்தை வெளிப்படுத்தும் முன்னரே இந்த ராசிக்காரர்கள் அவர்களை சரியாக அறிவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நேர்மையின் சிறந்த ஆதாரமாக உள்ளனர் மற்றும் இதுவே இவர்களின் ஒரு நல்ல ஊக்கமளிக்கும் பேச்சாளராக்குகிறது. இந்த ராசிக்காரர்கள் எப்பேற்பட்ட சலிப்பான சூழ்நிலையையும் எளிதில் மாற்றுவார்கள். சொல்லப்போனால் இவர்கள் ஒரு நிகழ்ச்சியை சிறந்து தொகுத்து வழங்குபவராக இருப்பார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களின் மறைந்துள்ள திறமை இவர்களின் வேலை நெறிமுறைகள் தான். இந்த திறமையால் தான் இவர்கள் தங்கள் இலக்கை எளிதில் அடைகிறார்கள். எனவே தான் இந்த ராசிக்காரர்கள் எந்த துறையிலும் வெற்றிகரமாக இருக்கிறார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புரட்சிகளுக்காக சிறப்பாக செயல்படும் நபர். ஏனெனில் இவர்கள் வேறு உலகம் அல்லது சமூகத்தை கனவு காண்பார்கள். அங்கு யாரும் தங்களைத் தாங்களே என்று தீர்மானிக்க முடியாது. மேலும் சமூகத்தைப் பார்த்து பயப்படாத இவர்களின் குணம் உங்களை இப்படிப்பட்ட நபராக்குகிறது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் ஒரு கலைஞர்கள். மேலும் இவர்கள் கற்பனையாளர் மற்றும் மிகவும் ஆக்கப்பூர்வமானவர். இவர்களின் கலைப் படைப்புகள் தான் வாழ்வில் இவர்களை பெரிய முன்னேற்றத்தை அடைய வைக்கும்.



Click it and Unblock the Notifications