Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
உங்க ராசியை சொல்லுங்க... நீங்க எந்த ஆரோக்கிய பிரச்சனையால அதிகமா கஷ்டப்படுவீங்கன்னு சொல்றோம்..
எந்த ராசிக்காரர் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார் என்பதை அறிய முடியும். இப்போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அது ஒருவரின் எதிர்காலம் ஆகட்டும், நிதி நிலை, திருமண வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை என்று வாழ்வின் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம்.

ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியையும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஆளுகின்றன. இந்த ராசிகள் ஒவ்வொன்றும் ஒருவரின் குணாதியங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனத்தை வெளிப்படுத்துவதோடு, ஒருவரின் ஆரோக்கியத்தைப் பற்றியும் கூறும். குறிப்பாக எந்த ராசிக்காரர் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார் என்பதை அறிய முடியும். இப்போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் அடிக்கடி தலைவலி பிரச்சனையால் அவதிப்படுவார்கள். ஆனால் இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை திறம்பட கையாள்வதன் மூலம் தலைவலி வருவதைத் தடுக்கலாம்.

ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் அடிக்கடி தொண்டையில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். இவர்கள் இஞ்சி டீ மற்றும் பிற மூலிகை டீயை அடிக்கடி குடிப்பதன் மூலம், இப்பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

மிதுனம்
புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்கள் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் மற்றும் இவர்கள் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் ஆரோக்கியமாக இருக்க போதுமான ஓய்வு எடுத்து நோயெதிர்ப்பு சக்தியைப் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்கள் செரிமான பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். இந்த செரிமான பிரச்சனைக்கு காரணமாக இருப்பது மன அழுத்தமாக இருக்கும். இவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதன் மூலம், மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.

சிம்மம்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் அச்சமற்றவர்களாக மற்றும் பரந்த மனத்தைக் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அதிகப்படியான அன்பு மற்றும் அக்கறை, அவர்களை எளிதில் மனதளவில் எளிதில் காயமடையச் செய்து, மனநல ஆரோக்கியத்தை பாதிக்கும். மன ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க தினமும் தியானம் செய்வது நல்லது.

கன்னி
புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் வேலையின் பின் ஓடிக் கொண்டே இருப்பதால், இவர்கள் சரியாக சாப்பிடமாட்டார்கள். இதன் காரணமாக இவர்கள் அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள்.

துலாம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்கார்கள் அதிகம் அவதிப்படும் ஆரோக்கிய பிரச்சனை என்றால், அது சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பைப் பிரச்சனை தான். எனவே இவர்கள் சிறு அறிகுறிகள் தோன்றினாலும், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

விருச்சிகம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் அவதிப்படும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை என்றால், அது உடல் வறட்சி. எனவே இந்த ராசிக்காரர்கள் நாள் முழுவதும் போதுமான அளவு நீரைக் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் வறட்சியை ஏற்படுத்தும்.

தனுசு
குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்கள் அதிகம் கஷ்டப்படும் ஓர் ஆரோக்கிய பிரச்சனையெனில், அது முதுகு தொடர்பான பிரச்சனைகள் தான். ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இதைத் தவிர்க்க, தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, உட்கார்ந்து வேலை செய்யும் போது அடிக்கடி எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்.

மகரம்
சனியை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்கள் எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டு. ஏனெனில் இவர்கள் முழங்கால் மூட்டு வலியால் தான் அதிகம் அவதிப்படுவார்கள்.

கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி. இந்த ராசிக்காரர்கள் கை அல்லது கால்களில் அடிக்கடி காயங்களை சந்திப்பார்கள். எனவே எந்த ஒரு விஷயத்தை செய்யும் போதும் சற்று கவனமாக இருங்கள்.

மீனம்
குருவை அதிபதியாக கொண்ட மீன ராசிக்காரர்கள் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டிருப்பதால், எளிதில் சளி, காய்ச்சலால் அடிக்கடி அவதிப்படுவார்கள். எனவே இவர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், எளிதில் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications