Just In
- 54 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 16 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 17 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 20 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
பருவமழைக்காலம் வந்துவிட்டது, முழு நாடும் இப்போது கொளுத்தும் வெயிலில் இருந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், பருவமழை பல உடல்நலச் சிக்கல்களைக் கொண்டுவரும் என்பது மறுக்க முடியாது. வயிற்று வலி முதல் சுவாச பிரச்சனைகள் வரை, பல நோய்கள் மற்றும் தொற்றுகள் மழைக்காலத்தில் ஏற்படும்.
ஜூலை மாத பலன்கள் ஒவ்வொரு ராசிக்காரரின் ஆரோக்கியத்திலும் என்னென்னெ மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என்று கணித்துள்ளது. ஜோதிடக் கணிப்புகள் அவர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் பாதிப்புகளை எவ்வாறுத் தடுக்கலாம் என்று கணித்துள்ளது. உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஒரு நல்ல திருப்பத்தைக் காணும். அலுவலக வேலை உங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும், ஆனால் நீங்கள் அதை சமாளிக்க முடியும். சில சிறிய தோல் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்
செய்ய வேண்டிய வேலை அதிகமாக இருக்கும், அது பெரும்பாலும் குழப்பமாக இருக்கும். பொறுமையுடன் எல்லாவற்றையும் சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள். சிறுநீர் தொற்று ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், அதிகப்படியான பால் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

மிதுனம்
ஆடம்பரச் செலவுகள் அதிகமாக இருக்கும். அலுவலகச் சூழல் நன்றாகவும் சுமுகமாகவும் இருக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உங்கள் உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
MOST READ: ஜூலை மாதம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம்... சந்தோஷமா இருங்க...!

கடகம்
உணர்ச்சிரீதியாக நீங்கள் தாழ்வாக உணரலாம், ஆனால் நிதிரீதியாக உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. பணி வாழ்க்கையும் நன்றாக இருக்கும். வயிற்றில் ஏற்படும் தொற்றுகள் உங்களை தொந்தரவு செய்யலாம். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும் மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும்.

சிம்மம்
உங்கள் வருமானம் நன்றாக இருக்கும் என்பதால் நீங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் காரணங்களுக்காக மட்டுமே இந்த மாதம் பயணங்கள் செய்ய வேண்டியிருக்கும். வயிற்றுப் பிரச்சனைகள் இந்த மாத இறுதியில் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.

கன்னி
சூரியன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த மாதம் புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. சிறிய தலைவலியைத் தவிர இந்த மாதம் உங்களை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நன்றாகவும் வைத்திருக்கும்.

துலாம்
இந்த மாதம் அடிவயிற்றில் வலியைக் கொண்டு வரலாம், இது சரியாக கண்டறியப்படாமல் இருக்கலாம். ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருக்க திரவங்களையும் குடிக்கவும். நீங்கள் கீட்டோ உணவையும் முயற்சி செய்யலாம்.
MOST READ: இந்த பொருட்களை தெரியாம கூட தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க... இல்லனா உயிருக்கே ஆபத்தாகிடும்...!

விருச்சிகம்
இது உங்களுக்கு சாதகமான மாதம் மற்றும் வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றியை எதிர்பார்க்கலாம். மன அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் கூட இருக்கலாம், ஆனால் அது சரியாகிவிடும். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

தனுசு
உங்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி பின்னடைவுகள் உங்களை தொந்தரவு செய்யலாம்; சந்தை இழப்புகள் உங்களை பாதிக்கலாம். சில பழைய நோய்கள் மீண்டும் வரலாம், எனவே நிறைய உடல் பயிற்சிகளை செய்ய முயற்சி செய்யுங்கள்.

மகரம்
உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து நிறைய ஊக்கத்தைப் பெறுவீர்கள். முன்னோர்களின் பணப் பலன்களையும் இந்த மாதம் எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி, பூர்வீக சொத்துக்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வயதானவர்களுக்கு கால் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

கும்பம்
இது மாணவர்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். நீங்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல் போகலாம் என்பதால் சில பொறுப்புகளும் ஏற்படலாம். கோபத்தை நிர்வகியுங்கள், உங்கள் எரிச்சல் அளவுகள் உண்மையில் அதிகமாக இருக்கலாம்.
MOST READ: உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!

மீனம்
குரு தனது சொந்த வீட்டில் இருப்பதால், வாழ்வின் அனைத்து வகைகளிலும் நன்மை பயக்கும். வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆரோக்கியத்தில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். எனவே சரியான நேரத்தில் தூங்குங்கள், ஓய்வெடுங்கள் மற்றும் அதிக வேலை செய்ய வேண்டாம். சில சிறிய இருமல் மற்றும் சளி அல்லது காது தொடர்பான கோளாறுகள் சிறியதாக இருக்கலாம்.