Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
2023-ல் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கும்? யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் தெரியுமா?
2023 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கப் போகிறது என கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவரது ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் ஒருவரது ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் ஒருவரால் எந்த ஒரு செயலிலும் சிறப்பாக செயல்பட்டு, வெற்றிகரமான முடிவைப் பெற முடியும். ஒவ்வொரு ஆண்டும் கிரக நிலைகளைப் பொறுத்து ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் அந்த ஆண்டில் எப்படி இருக்கும் என்பது கணித்து கூறப்படுகிறது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டில் 12 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. கீழே 2023 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கப் போகிறது என கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! 2023-ல் உங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது. இந்த ஆண்டில் ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும். சிறுசிறு பிரச்சனைகளை அவ்வப்போது சந்திப்பீர்கள். மன அழுத்தம் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். டைபாய்டு, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் ஆரோக்கியத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்படும். இந்த ஆண்டில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தேவையற்ற கவலைகளை மனதில் இருந்து தூக்கி எறியுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! 2023-ல் உங்கள் ஆரோக்கியம் சாதகமாக இருக்காது என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். கிரகப் பெயர்ச்சிகள் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ஜூன் முதல் நவம்பர் வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்திற்காக நிறைய பணத்தை செலவழிக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! 2023-ல் உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கூற வேண்டுமானால், வயிறு தொடர்பான நோய்கள் வர வாய்ப்புள்ளது. உங்களின் அலட்சியத்தால் ஆரோக்கியம் பாழாகும். ஏற்கனவே உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் விபத்துக்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். ஆண்டின் நடுப்பகுதியில் ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் அக்டோபர் மாதத்திற்கு பின் மீண்டும் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! 2023-ல் உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தால், பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அலட்சியமாக இருந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மே மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் இதயம் அல்லது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அவ்வப்போது மருத்துவரை அணுகி உடல் ஆரோக்கியத்தை சோதித்துக் கொள்ளுங்கள். ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின்னர் ஆரோக்கியத்தில் சில முன்னேற்றத்தைக் காண்பீர்கள். முக்கியமாக இந்த ஆண்டில் உண்ணும் உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூற வேண்டுமானால், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே உங்கள் உடல் சில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதைப் புரிந்து கொண்டு ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள். வயிற்று பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை இந்த ஆண்டில் சந்திக்கலாம். இது தவிர குடலில் சில பிரச்சனைகளையும் சந்திக்கலாம். ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஆரோக்கியத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்டின் இறுதியின் உணவுகளால் ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! 2023-ல் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூற வேண்டுமானால், ஆண்டில் முதல் சில மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும், ஆனால் ஏப்ரல் முதல் உங்கள் சிரமங்கள் தொடங்கும். சமநிலையற்ற உணவுப்பழக்கம் மற்றும் ஒழுங்கற்ற வழக்கத்தினால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இருந்தால் ஆண்டு முழுவதும் நல்ல ஆரோக்கியத்தை பெறுவீர்கள். வேலையுடன் ஓய்விலும் சற்று கவனம் செலுத்த வேண்டும். சிறந்த ஆரோக்கியத்திற்கு யோகா, தியானம் போன்றவற்றை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டில் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். அலட்சியமாக இருந்தால், உங்களுக்கு கடுமையான நோய்கள் வரலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆண்டின் இறுதியில் நீங்கள் அனைத்து ஆரோக்கிய பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! 2023-ல் நீங்கள் சிறு ஆரோக்கிய பிரச்சனையை சந்தித்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த ஆண்டில் வயிறு மற்றும் பெருங்குடல் தொடர்பான சில பிரச்சனைகள் வரலாம். இது தவிர, கண் நோய்கள் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் உங்களுக்கு மிகவும் பலவீனமாக இருக்கும். மன அழுத்தம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அக்டோபர் மாதத்திற்கு பிறகு உடல்நிலை சீராகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டில் உங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது தவிர பழைய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இந்த ஆண்டில் உங்களுக்கு வயிறு சம்பந்தமான சில பெரிய நோய்கள் வர வாய்ப்புள்ளது. ஒருவித அல்சர் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சீரான உணவுடன், லேசான உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டில் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூற வேண்டுமானால் மார்பு பகுதிகளில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். சிறுசிறு பிரச்சனைகள் உங்களை பலவீனப்படுத்தும். எனவே நல்ல ஓய்வு மற்றும் ஆரோக்கிய உணவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும். தாமதமாக சாப்பிடுவது, இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்காக அதிக பணத்தை செலவிட நேரிடும். கண்கள், தோள்பட்டை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். ஏப்ரல் மாதத்திற்கு பின் கவனமாக இருக்க வேண்டும். படிப்படியாக உடல்நல பிரச்சனைகள் குறையும். இருப்பினும், அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆண்டின் இறுதியில் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டில் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூற வேண்டுமானால், ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரோக்கியத்தில் கடுமையான சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு பிரச்சனைகளை சந்தித்தாலும், உடனே மருத்துவரை அணுக முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால், பெரிய செலவை வைத்துவிடும். ஏப்ரல் மாதத்தில் கண் வலி, பல் வலி, வாய் புண்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். கால்கள், தோள்கள் அல்லது மூட்டுக்களில் கடுமையான வலியை சந்திக்கலாம். ஆனால் அக்டோபர் மாதத்திற்கு பின் இவை அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications