Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்... பாத்து பழகுங்க
சிலரை நாம் மோசமானவர்கள் என்று கூற காரணம் அவர்கள் கடுமையாக நடந்து கொள்பவராகவும், கிண்டல் செய்பவர்களாகவும், வார்த்தைகளால் காயப்படுத்துபராகவும் இருப்பார்கள்.
அனைவரும் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அனைவராலும் அது முடிவதில்லை. சிலரை நாம் மோசமானவர்கள் என்று கூற காரணம் அவர்கள் கடுமையாக நடந்து கொள்பவராகவும், கிண்டல் செய்பவர்களாகவும், வார்த்தைகளால் காயப்படுத்துபராகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மனது காயப்படுமே என்று தங்கள் விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்தி வைக்க மாட்டார்கள்.

இவ்வாறு நடந்து கொள்ள ஒரு தனி ஆளுமை தேவை. மற்றவர்களின் மனது காயப்படுமே என்று நீங்கள் விளக்கு இருப்பவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக இந்த ஆளுமை கிடையாது. இப்படி நடந்து கொள்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள், அதேசமயம் முட்டாள்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள். மற்றவரின் மனது காயப்படுவதை பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்த குணம் சிலருக்கு அவர்கள் பிறந்த ராசியின் மூலம் வரலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி மற்றவர்களின் மனதை காயப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்கள், உங்களை நன்கு புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஆனால் அவர்கள் உங்களின் உணர்ச்சிகளை சிதைக்க துளியும் தயங்க மாட்டார்கள். மிகவும் புண்படுத்தும் விதமாக என்ன சொல்வது என்பது அவர்களுக்கு இயல்பாகவே தெரியும். இவர்கள் தங்களையும், மற்றவர்களையும் கடுமையாக விமர்சிப்பதால் இவர்கள் அனைவர்க்கும் கடுமையானவர்களாகவும், கசப்பானவர்களாகவும் தெரிவார்கள். கடுமையாக நடந்து கொள்வதும், கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதும் இவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்களாகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கலகலப்பானவர்களாகவும், தாராள மனம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களை பொதுவாக நாம் அப்படி நினைக்க மாட்டோம். ஆனால் சில கடுமையான விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் திறனை அவர்கள் நிச்சயமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மற்றவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றால் இவர்கள் விரக்தி, கோபம், வஞ்சம் போன்றவற்றை வளர்த்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் மனதில் நினைப்பதை வெளிப்படுத்த ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். இந்த குணம் சிலசமயம் கடுமையான சொற்களின் மூலம் வெளிப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதீத நேர்மையாளர்கள், சிலசமயம் அவர்களின் இந்த நேர்மை மற்றவர்களை கடுமையாக காயப்படுத்தலாம். இவர்கள் ஒரு காரணத்திற்காக மனக்காயம் அடைந்திருந்தால் இவர்கள் மற்றவர்களின் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்குள் பொறாமை, மனக்கசப்பு போன்ற உணர்ச்சிகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் போது இவர்கள் அதனை மனதிற்குள்ளேயே வைத்திருக்க மாட்டார்கள். அதேசமயம் இவர்கள் மிகவும் புத்திசாலிகள் எனவே என்ன சொன்னால் அது அதிக காயத்தை ஏற்படுத்தும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

கடகம்
அதிக உணர்ச்சிவசப்படும், பாசக்கார கடக ராசிக்காரர்கள் உங்களை காயப்படுத்துவார்கள் என்பதை நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் விருச்சிக ராசிக்காரர்களை போலவே இவர்களும் தான் காயப்பட்டால் மற்றவரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்து வரும் கடுமையான சொற்கள் நமக்கு அதிக காயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நாம் அதனை எதிர்பார்த்திருக்க மாட்டோம். அவர்கள் கோபப்படும் அளவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது, ஆனால் நீங்கள் நிச்சயம் ஏதாவது செய்திருப்பீர்கள். இல்லையெனில் கடக ராசிக்காரர்கள் உங்களை காயப்படுத்த தொடங்க மாட்டார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகிழ்ச்சியை பரப்புபவர்களாகவும், வேடிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் சில சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் மீது ஒளிவு மறைவின்றி கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இவர்கள் விரைவில் கோபப்படக்கூடியவர்கள், அதனால் பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் இவர்கள் எளிதில் மற்றவரின் மனதை காயப்படுத்தி விடுவார்கள். இவர்கள் மற்றவர் மனதை காயப்படுத்தும் போது அது அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும், ஏனெனில் இவர்களின் குணம் அதுவல்ல. ஆனால் அவ்வாறு செய்யும்போது அதனை திட்டமிட்டு செய்வார்கள்.



Click it and Unblock the Notifications











