For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Happy Ramadan 2024 Wishes : ரம்ஜான் அன்னைக்கு உங்க இஸ்லாமிய நண்பர்களுக்கு 'இத' சொல்ல மறந்துடாதீங்க...!

|

Happy Ramadan 2024: ரம்ஜான் எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் உலகெங்கிலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.

இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூாண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Happy Ramadan 2024 Eid Mubarak Images Wishes Messages Quotes Whatsapp Status and Greetings in Tamil

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. ரமலான் நோன்பின் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதியோடு ரமலான் நோன்பு நிறைவடைகிறது. இஸ்லாம் நண்பர்களுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்த்து 1

வாழ்த்து 1

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2

வாழ்த்து 2

உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்!

 வாழ்த்து 3

வாழ்த்து 3

பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் உங்கள் வாழ்வு இனி என்றும் வளர்பிறையாக ஒளிர எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4

வாழ்த்து 4

இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ இனிய ரமலான் வாழ்த்த்துக்கள்!

வாழ்த்து 5

வாழ்த்து 5

சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட... இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6

வாழ்த்து 6

உங்களுடைய எல்லா தேவைகளையும் இந்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவாராக... இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7

வாழ்த்து 7

வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்!

வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்!

அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8

வாழ்த்து 8

இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி வளர்பிறையாய் உங்கள் வாழ்க்கை பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9

வாழ்த்து 9

இந்நன்னாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவரும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Ramadan 2024: Eid Mubarak Images, Wishes, Messages, Quotes, Whatsapp Status, and Greetings in Tamil

Happy Ramadan 2024: Eid Mubarak 2024 in Tamil: Here are the Ramadan Wishes, Cards, Images, Messages, Whatsapp Status, Greetings, Quotes, Pictures, GIFs and Wallpapers to share with your loved ones. Take a look.
Desktop Bottom Promotion