Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
Pongal Wishes 2023 in Tamil: இந்த வருட பொங்கல் பண்டிகைய சிறப்பாக்கணுமா? அப்ப பிடிச்சவங்களுக்கு இத அனுப்புங்க!
உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.
Happy Pongal 2023 Wishes, Images, Quotes in Tamil: பொங்கல் பண்டிகை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைக்கட்டுகின்றன. அறுவடை திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் பொங்கல் விழா, நான்கு நாட்களும் கோலாகலமாக நடைபெறும். உழவர், சூரியன், மாடு, ஆடு என விவசாயத்திற்கு பயன்படுபவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி பொங்க பொங்கல் விழாவை குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். போகி பண்டிகை, சூரிய பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் இடம் பெற்றிருக்கும். இந்த பொங்கல் திருநாள், ஜாதி, மத பாகுபாடு அற்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொங்கல் பண்டிகைக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், காதலர் என அனைவருக்கும் வாழ்த்துக்களை நீங்கள் தெரிவிக்க சில வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கிறோம்.

வாழ்த்து 1
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
இந்த பொங்கல் உங்கள் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும். இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
இந்த தைத்திருநாளில் நாம் உண்ண உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும் உழவர்களுக்கும் வாழ்த்துக்கள். சூரிய பொங்கல் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
பொங்கலை போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
எல்லாருடைய வாழ்விலும்
தீமைகள் விலகி
நன்மைகள் பெருகிட
போகி பண்டிகை வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
தைத்திருநாளில் வளமுடன் வாழ, அன்பு பொங்க உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
பழையன கழிந்து
புதியன புகுந்திட
போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்க.. பொங்கல் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
வீரம் போற்றும் ஜல்லிக்கட்டு
தமிழா அதை நீ வென்று காட்டு
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11
அனைவருக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications
