Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
Women's Day Wishes In Tamil: மகளிர் தினத்தில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு இத சொல்ல மறந்துடாதீங்க...!
Happy International Women's Day 2025: உலகமே அன்பால் இயங்குகிறது என்றால், அந்த அன்பிற்கு மறுவடிவம் தான் பெண்கள். இந்த பெண்கள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மிகப்பெரிய சக்தி. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் இருப்பதோடு, பல சாதனைகளையும் புரிந்து வருகிறார்கள்.
சமையலறையில் இருந்து விண்வெளி வரை பெண்களின் திறமையும், வளர்ச்சியும் வளர்ந்துள்ளது. ஒரு பெண் படித்திருந்தால், அந்த குடும்பமே கல்வி கற்றவர்களாகிவிடுகின்றனர். பெண்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கையை கையாளுவதிலும், அதே நேரத்தில் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்வதிலும் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லா துறைகளிலும், பெண்கள் தங்கள் வெற்றியை ஆச்சரியப்படும் வகையில் பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பெண்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலகை வாழ ஒரு சிறந்த இடமாக மாற்றியதற்காக பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை ஒப்புக் கொள்ளும் நாள் இது. பெண்கள் சக்தியைக் கொண்டாடுவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களை பெருமைப்படுத்துவதற்கும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
உங்களைச் சுற்றியுள்ள எல்லா பெண்களையும் நீங்கள் சிறப்புற உணரக்கூடிய நாள் இது. 2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து அற்புதமான பெண்களுக்கும் நீங்கள் இக்கட்டுரையில் உள்ள சில இனிமையான செய்திகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

வாழ்த்து 1
வாழ்க்கை ஒரு வானவில் என்றால், பெண்கள் அதன் நிறங்கள். எங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் பெற நீங்கள் தகுதியானவர். உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
நான் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்த மகளிர் தினத்தன்று எனது வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன். மகளிர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
இந்த மகளிர் தினத்தில் என் வாழ்க்கையில் இவ்வளவு வலிமையான பெண்ணை அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
வலிமையான, அழகான, அன்பான மற்றும் தனித்துவமான நீங்கள், என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி. உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
அன்புள்ள பெண்களே, ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் மனிதகுலத்தை தன்னலமற்ற அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்திருக்கிறீர்கள். கடவுள் உங்களுக்கு அதிக சக்தியையும் அன்பையும் அளிப்பார். மகளிர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
நீங்கள் எனக்கு ஒரு உத்வேகம் மட்டுமல்ல, எனது சிறந்த நண்பரும் கூட. நீங்கள் எனக்கு கிடைத்த பொக்கிஷம். உங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
அன்பே, என் வாழ்க்கையை வண்ணமயமாகவும் அழகாகவும் மாற்றுவதற்காக வந்திருக்கும் தேவதை நீங்கள்... உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
இந்த உலகில் நிபந்தனையற்ற அன்பையும் பாசத்தையும் பரப்பும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
நீங்கள் என் வாழ்க்கையை அழகாக மாற்றியதைப் போலவே உங்களை நேசித்து, உங்கள் வாழ்க்கையை சிறப்புடையதாக உணர விரும்புகிறேன். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications