Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Friendship Day Wishes: நண்பர்கள் தினத்துல உங்க ப்ரண்ஸ் கிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க... அப்புறம் பிரச்சனைதான்.!
பெற்றோரிடமும் துணையுடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாததையும் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும். வேறு எந்த உறவுகளுக்கும் இல்லாத சிறப்பம்சமே நம் நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான்.
'உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு', 'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்று நட்புக்கு இலக்கணமாகத் திகழும் நண்பர்களைப் போற்றும் சிறந்த நாள் நண்பர்கள் தினம். ஆண்டுதோறும் நண்பர்களைப் போற்றும் விதமாக ஆகஸ்ட் மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இரத்தப் பந்தங்களை விட நமக்காக துடிக்கும் ஓர் உறவு நண்பன். பெற்றோரிடமும் துணையுடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாததையும் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும்.

வேறு எந்த உறவுகளுக்கும் இல்லாத சிறப்பம்சமே நம் நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான். நண்பர்கள் எப்போதுமே அற்புதமானவர்கள்தான். அப்படியான நம் நண்பர்களுக்கு 'நண்பர்கள் தினம்' அன்று வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளாகவோ, வாழ்த்து செய்திகளாகவோ பகிர்ந்துக் கொள்ளக்கூடிய சிறந்த வாழ்த்துகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வாழ்த்து 1
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
இவ்வுலகில் இரத்த பந்தம் இல்லாமல் நமக்காக துடிக்கும் ஒரே உறவு நண்பர்கள்தான். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
சாதி, மதம், மொழி, இனம், பாலினம் போன்ற எந்த வேறுபாடும் காட்டாமல் பழகும் நண்பர்கள் இவ்வுலகில் சிறந்தவர்கள். நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
உண்மையான நட்பை விட மதிப்புமிக்கதாக இந்த பூமியில் எதுவும் இல்லை. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
நல்ல நண்பர்கள் கிடைப்பது நமக்கு கிடைத்த வரம். வரமான என் நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
ஆயிரம் பேர் இருந்தாலும் நமக்கு தக்க சமயத்தில் தோள் கொடுப்பது நண்பன் தானே... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
வாழ்க்கை முழுவதும் இந்த பந்தம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது நண்பர்கள் மட்டுமே! நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
உங்கள் தவறை நியாயப்படுத்தும் நண்பனை விட சுட்டிக்காட்டும் நண்பனே சிறந்தவர். நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 11
எதிர்பார்ப்பின்றி
காரணமின்றி நாம் செய்யும் எதுவும்
நண்பர்களுக்கு மட்டுமே!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications