Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
உங்களோட இஸ்லாம் நண்பர்களுக்கு பக்ரீத் பண்டிகை அன்னைக்கு இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே!
Happy Bakrid 2023: உலகளவில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகை பக்ரீத் பண்டிகை. இந்தப் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
இந்தப் பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு அல்லாஹ்விற்கு படையலிடப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முழுவதும் இந்தப் பண்டிகை, தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அழ்ஹா என்றே அழைக்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரீத் (பக்ரித் ஈத்-அல் -தா-பெருநாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது. பக்ரீத் அன்று இஸ்லாமியா்கள் அனைவரும் இறையடியாரான இப்ராஹீம், அல்லாவின் மீது தான் கொண்டிருந்த பக்தியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதை நினைவு கூா்கின்றனா். இந்நன்னாளில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இக்கட்டுரையில் கொடுப்பட்ட பக்ரீத் வாழ்த்துக்களை அனுப்பி மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

வாழ்த்து 1
அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
இந்த தியாக திருநாளில் வேற்றுமை நீங்கி, ஒற்றுமை ஓங்கட்டும். ஈகையும் நட்பும் பெருகட்டும். இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
மனிதநேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் இந்நன்னாளில் நிறைவேறட்டும். இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 6
இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் நாள். அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட அனைத்து இஸ்லாம் மக்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
இந்நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ இனிய பக்ரீத் நல்வாழ்த்த்துக்கள்!

வாழ்த்து 9
உங்களுடைய எல்லா தேவைகளையும் இன்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவராக... இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
இந்த தியாகத் திருநாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications