For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கணுமா? அப்ப குரு பூர்ணிமா அன்னிக்கு இத தானம் பண்ணுங்க..

இந்த ஆண்டு குரு பூர்ணிமா ஜூலை 13 ஆம் தேதி வருகிறது. வேத வியாசர் தான் வேதங்களை ரிக், யஜுர், சாம, அதர்வ என 4 வகுப்புகளாக வகைப்படுத்தினார். இந்த ஆண்டு குரு பூர்ணிமா நாளில் கிரகங்களின் சிறப்பு சேர்க்கை நிகழ்கிறது.

|

இந்தியாவில் குரு பூர்ணிமா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குருக்கள் வணங்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் பழங்காலத்தில் இருந்தே குரு சிஷ்ய பாரம்பரியம் உள்ளது. குரு இல்லாமல், சீடர் தனது இலக்கை அடைய முடியாது என்பது நம்பிக்கை. குருவால் மட்டுமே சீடர்களுக்கு சரியான பாதையை காட்ட முடியும். இப்படிப்பட்ட குருவை வணங்குவதற்கு ஏற்ற நாள் தான் குரு பூர்ணிமா.

Guru Purnima 2022: Donate These Things According To Zodiac Signs In Tamil

புராணங்களின் படி, பராசர முனிவருக்கும், சத்யவதி தேவிக்கும் மகனான மகரிஷி வேத வியாசர், ஆனி மாத பௌர்ணமி திதியில் பிறந்தார். அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத பௌர்ணமி நாள் குரு பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குரு பூர்ணிமா ஜூலை 13 ஆம் தேதி வருகிறது. வேத வியாசர் தான் வேதங்களை ரிக், யஜுர், சாம, அதர்வ என 4 வகுப்புகளாக வகைப்படுத்தினார். இந்த ஆண்டு குரு பூர்ணிமா நாளில் கிரகங்களின் சிறப்பு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த குரு பூர்ணிமாவின் முக்கியத்துவம் இன்னமும் அதிகரித்துள்ளது. இப்போது கிரகங்களின் சிறப்பு சேர்க்கையினால் குரு பூர்ணிமா நாளில் எந்தெந்த பொருட்களை தானம் செய்வது பலன் தரும் என்பதை அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

குரு பூர்ணிமா நாளன்று மேஷ ராசிக்காரர்கள் வெல்லம் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவது நல்லது. இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளன்று கற்கண்டுகளை தானம் செய்வது நல்லது. அதோடு ரிஷப ராசிக்காரர்கள் கடவுளை வழிபடும் போது நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமா நாளில் பசுவிற்கு பசுந்தீவனம் கொடுப்பது நல்லது. அதோடு, பச்சை பயறை தானமாக வழங்குவதும் நல்லது. இப்படி செய்வதால் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளன்று அரிசியை ஏழை எளியோருக்கு தானம் செய்வது நல்லது. இதன் மூலம் மன கஷ்டம் குறைவதோடு, மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமான தினத்தன்று கோதுமை தானம் செய்வது மிகவும் நல்லது. இதனால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளன்று பிராமணருக்கு அவரவர் தகுதிக்கேற்ப தட்சிணை கொடுக்க வேண்டும். இது மட்டுமின்றி, இந்த ராசிக்காரர்கள் பசுவிற்கு பசுந்தீவனம் கொடுப்பதும் நல்லது.

துலாம்

துலாம்

துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமா நாளன்று பெண்களுக்கு பாயாசத்தை தானம் வழங்க வேண்டும். இப்படி செய்வதனால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைப்பதோடு, செழிப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் குரங்குகளுக்கு பருப்பு மற்றும் வெல்லத்தை தானம் செய்ய வேண்டும். இது தவிர, ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், படிக்கும் பொருட்களை வாங்கி கொடுப்பது நல்லது.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் கோவில்களில் பருப்புக்களை தானம் செய்வது நல்லது. இப்படி செய்வதனால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும்.

மகரம்

மகரம்

மகர ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமா நாளில் ஏழை எளியோருக்கு போர்வைகளை வழங்குவது நல்லது. இப்படி செய்வதால், ஒருவரின் வேலை அல்லது வியாபாரத்தில் உள்ள தடைகள் நீங்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் குரு பூர்ணிமா நாளில் முதியோர் ஆசிரமத்தில் உள்ள முதியோர்களுக்கு ஆடை, அன்னதானம் செய்வது நல்லது. இது தவிர கும்ப ராசிக்காரர்கள் கோவிலுக்கு சென்று கருப்பு உளுந்து தானமாக வழங்குவது நல்லது.

மீனம்

மீனம்

மீன ராசியைச் சேர்ந்தவர்கள் குரு பூர்ணிமா நாளில் ஏழை எளியோருக்கு மஞ்சள், கடலை மாவு ஆகியவற்றால் செய்யப்பட்ட இனிப்புகளை தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Guru Purnima 2022: Donate These Things According To Zodiac Signs In Tamil

In this article we are discussing about these things according to zodiac signs on guru purnima in tamil. Take a look.
Desktop Bottom Promotion