Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
குரு பெயர்ச்சி 2019 - 20: துலாம் லக்னகாரர்களுக்கு குரு லாபம் தரும் தைரிய குரு
குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும் இம்முறை கு
Recommended Video
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. விருச்சிகத்தில் இருந்து தனசு லக்னத்தில் அமரப்போகும் குரு பகவான் துலாம் லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் அமர்கிறார். இது தைரிய ஸ்தானம். மூன்றுக்கு அதிபதி மூன்றாம் வீட்டில் அமர்வதால் துலாம் லக்ன காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு மூன்று ஆறுக்கு அதிபதி. உங்க லக்னாதிபதிக்கு குரு பகையானவர். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள் துலாம் லக்னத்திற்கு பகையாளியான குரு தைரிய குருவாக மூன்றாம் இடத்தில் மறைவது நன்மையான அமைப்புதான்.

குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குரு பார்வை தனுசு ராசியில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங்களின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு களத்திரஸ்தானம், பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானங்களின் மீது விழுகிறது.

லாபம் தரும் குருபகவான்
இரண்டு மடங்கு அறம் செய்து ஒரு மடங்கு இன்பத்தை அடைவீர்கள். மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கை அமையும் பாக்யங்கள் நிறைய கிடைக்கும். அப்பா வழி நன்மைகள் நடக்கும். ஒன்பதாம் வீட்டில் ஏற்கனவே ராகு இருக்கிறார். வீரிய காரகன் மீது குரு பார்வை விழுவது யோகம். ராகுவை குரு உற்சாகப்படுத்தி விடுவதால் நிறைய பாக்யங்கள் கிடைக்கும். குருவிற்கு பிடித்த வீடு சிம்மம் அந்த வீட்டினை குரு பார்வையிடுவதால் அரசு தொடர்பான லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு சுய தொழில் மூலம் லாபம் கிடைக்கும்.

திருமணம் நடக்கும்
குரு மூன்று ஆறு வீடுகளுக்கு அதிபதி. உங்க லக்னாதிபதிக்கு நன்மை செய்ய மாட்டார். குரு மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவரது பார்வை குரு பார்வை ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தின் மீது விழுவதால் இதுநாள் வரை தடைபட்ட திருமணம் நடக்கும். மனதிற்கு பிடித்த வரன் அமையும், பாக்ய ஸ்தானம் பார்வை விழுகிறது. அப்பாவிற்கு நன்மை, குடும்பத்தில் சந்தோஷம். வெளிநாடு பயணம் அமையும். தெய்வ கடாட்சமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும்.

லாப ஸ்தானத்தின் மீது பார்வை
லாப ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுவதால் நன்மைகள் நடக்கும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குருவின் தசை நன்றாக இருந்தால் இந்த குரு பெயர்ச்சியினால் நன்மைகள் அதிகம் நடக்கும். குருவினால் குடும்பத்திற்கு சுபிட்சங்கள் நடக்கும். இந்த கால கட்டத்தில் வீடு வாங்குவீர்கள். பொருளாதார வரவு அதி அற்புதமாக இருக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை
குரு உடன் கேது ஆண்டு முழுவதும் பயணிப்பதால் நல்லது நடக்கும். குருவின் பார்வையால் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெற்றிகள் தேடி வரும். வேலை தொழில் அற்புதமாக அமையும். கவுரவ பதவிகள் கிடைக்கும். தொட்டது வெற்றியாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாங்கிய சொத்துக்கள் லாபம் கொடுக்கும். வியாபாரத்தில் நன்மைகள் நடக்கும். வாங்கி வைத்திருந்த பொருட்கள் லாபத்தில் விற்கும். அதே நேரத்தில் உங்க ஆரோக்கியத்தில் கவனம் வையுங்க. இதய நோய், கொழுப்பு தொடர்பான நோய் இருப்பவர்கள் கவனமாக இருங்க. அவசர முடிவுகள் எதையும் எடுக்காதீங்க.



Click it and Unblock the Notifications