Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
குரு பெயர்ச்சி 2019 - 20: கன்னி லக்னகாரர்களுக்கு ஹம்சயோகம் தரும் குருபகவான்
குரு பெயர்ச்சி அடுத்தமாதம் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும
Recommended Video
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. விருச்சிகத்தில் இருந்து தனசு லக்னத்தில் அமரப்போகும் உங்க லக்னத்திற்கு நான்காம் வீட்டில் அமர்கிறார். இது சுகஸ்தானம், சுக ஸ்தானத்தில் அமரப்போகும் குருபகவானால் கன்னி லக்ன காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குருபகவான் உங்க லக்னத்திற்கு நான்கு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி. இந்த குருப்பெயர்ச்சி ஆறுதலும் மன அமைதியும் தரப்போகிறது. வீட்டில் இதுநாள்வரை இருந்த பிரச்சினைகள் தீரப்போகிறது. உங்களுக்கு இருந்த சொத்துக்களை கூட அனுபவிக்க முடியாமல் இருந்தது இனி தீரப்போகிறது.

குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குரு பார்வை தனுசு ராசியில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங்களின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு விரைய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், தொழில் ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த குருப்பெயர்ச்சி மற்றும் குருவின் பார்வையால் நன்மைகள் அதிகம் நடக்கப்போகிறது.

குருவினானல் யோகம்
நான்குக்கு அதிபன் நான்கில் ஆட்சி பெற்று அமர்வது ஹம்ச யோகம். மனதிற்கு தேவையான மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். புதிய வேலை, வெளிநாட்டு யோகம், கல்வியில் முன்னேற்றம் ஆகியவற்றை குரு தருவார். நான்காம் வீட்டில் இருக்கும் சனி கேதுவினால் ஏற்பட்ட தொல்லைகளை முறியடிக்கும். முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தருவார் குருபகவான்.

பொற்கால குரு
கன்னி ராசிக்காரர்களுக்கு இது பொற்காலம். நிறைய சொத்துக்கள் வாங்குவீர்கள், வீடு வாங்குவீர்கள் கார் வாங்கும் யோகம் வருகிறது. நல்ல வாகனம் வாங்கும் நேரம் வருகிறது. குரு ஏழாம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தை பார்க்கிறார். அயன சயன ஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். வெளிநாட்டில் வேலை கிடைக்கப் போகிறது. வெளிநாடுகளில் சில ஆண்டுகள் தங்கி வேலை செய்வீர்கள். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். கடந்த காலங்களில் உங்களை விரும்பியவர்கள் கூட விலகிப்போனார்கள். இனி நல்ல காலம் வரப்போகிறது.

வெற்றி கிடைக்கும் காலம்
வியாபாரத்தில் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஆபத்துக்கள் கண்டங்கள் நீங்கும். காரணம் எட்டாம் வீட்டினை குரு பார்க்கிறார். பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். மாங்கல்ய தோஷம் நீங்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். சிலருக்கு புதையல் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உடல்நலக்கோளாறுகளில் இருந்த ஆபத்துக்கள் நீங்கும். குருபகவான் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்வதால் தொழிலில் ஏற்பட்ட வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்.

வெளிநாடு யோகம்
புதிய தொழில் தொடங்க நல்ல இடம் கிடைக்கும். வீட்டில் இருந்த பிரச்சினைகள் தீரும். வீடு மராமத்து பணிகள் செய்வீர்கள் அழகுபடுத்துவீர்கள். கனவுத்தொல்லை, தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல தூக்கம் வரும். படிக்கும் மாணவர்களுக்கு இது நல்ல காலம். தேர்வுகளை நன்றாக எழுதி பாஸ் செய்வீர்கள். நல்ல முறையில் வேலையும் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நல்லது நடக்கும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

கஷ்டங்கள் தீரும்
சிரமங்கள், கஷ்டங்கள் தீரும் காலம். சுபமான காலம், அவமானங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். எட்டாம் வீட்டில் சுபகிரகம் பார்ப்பது நல்லது. அதேபோல 12ஆம் வீட்டில் குரு பார்வை படுவது பயணங்களில் வெற்றி கிடைக்கும். பயணங்களினால் ஆதாயம் கிடைக்கும். நல்ல நட்புக்கள் கிடைக்கும். இந்த குருபெயர்ச்சி நிறைய யோகத்தை தராவிட்டாலும் நன்மை தரும் பெயர்ச்சியாகவே அமைகிறது.



Click it and Unblock the Notifications