Just In
- 27 min ago
குடியரசு தினத்தன்று வரலாறு படைக்க தயாராக இருக்கும் சிங்கப்பெண் சுவாதி ரத்தோரை பற்றித் தெரியுமா?
- 1 hr ago
உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சாப்பிட வேண்டிய பழங்கள்!
- 2 hrs ago
ரொம்ப குண்டா இருக்கீங்களா? அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...!
- 3 hrs ago
சாப்பிட்டவுடன் மார்பில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதற்கு இதில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் போதும்...!
Don't Miss
- News
மாஸ்க் அணிய மாட்டேன்... ஊரடங்கை அறிவிக்க மாட்டேன்... அடம்பிடித்த மெக்ஸிகோ அதிருபக்கு கொரோனா
- Finance
Budget 2021.. டல்லடிக்கும் ரியல் எஸ்டேட் துறை.. ஊக்குவிக்க சலுகைகள் இருக்குமா?
- Movies
வெட்கக்கேடு.. மசினக்குடியில் யானை உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. சனம் ஷெட்டி கடும் கண்டனம்!
- Automobiles
2020ஐஎன்டிஆர்சி போட்டியின் முடிவுகள்... இரு பிரிவுகளில் தங்கத்தை வென்ற அண்டை மாநில வீரர்.. யார் அவர் தெரியுமா?
- Education
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Sports
பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குரு பெயர்ச்சி 2019 - 20: தனுசு லக்னத்திற்கு பாக்யங்களை அள்ளித் தரும் ஜென்மகுரு
நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. விருச்சிகத்தில் இருந்து தனசு லக்னத்தில் அமரப்போகிறார் குரு பகவான். குரு பகவான் தனுசு லக்னத்திற்கு ஜென்மம் மற்றும் நான்காம் வீட்டு அதிபதி. தனுசு லக்னத்தில் ஆட்சி பெற்று அமரும் குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் வீடுகளின் மீது விழுகிறது. இந்த காலகட்டத்தில் தனுசு லக்னகாரர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி என்று பார்க்கலாம்.
குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குரு பார்வை தனுசு ராசியில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங்களின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் வீடுகளின் மீது விழுகிறது. இந்த கால கட்டங்களில் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலனை தரப்போகிறது.
லக்னாதிபதியே லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்கள் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். குருபகவான் பார்வையால் மிகப்பெரிய யோகங்கள் கிடைக்கப் போகிறது. பெரிய மனிதர்களின் தொடர்பு, மகான்களின் தொடர்பு கிடைக்கும். பாக்யங்கள் தேடி வரும் காலம். புத்திரபாக்கியம் கிடைக்கும். நமக்கு நல்லதே நடக்காது என்று நினைத்திருந்த உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும்.

ஜென்ம குரு
குரு பகவான் ஜென்ம குருவாக தனுசு லக்னத்திற்கு வருகிறார். மூலம் நட்சத்திரம் 4 பாதங்கள், பூராடம் நட்சத்திரம் 4 பாதங்கள் உத்திராடம் நட்சத்திரம் ஒரு பாதம் என மொத்தம் 9 பாதங்கள் தனுசு லக்னத்தில் உள்ளன. லக்னாதிபதியே லக்னத்தில் ஆட்சி பெறுகிறார். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஐந்து, ஏழு ஒன்பதாம் இடங்களை குரு பார்க்கிறார். குருபகவான் பார்வையால் மிகப்பெரிய யோகங்கள் கிடைக்கப் போகிறது. மூலம் நட்சத்திரத்தில் அமர்ந்து ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். குடும்பத்தோடு செல்வீர்கள். குழந்தைகளுடன் தீர்த்த யாத்திரை செல்வீர்கள்.
MOST READ: இதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா?... இந்த அறிகுறி இருக்குமாம்...

திருமண யோகம்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனுசு லக்னகாரர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீர்க்கும் நோய்கள் தீரும். பெரிய மனிதர்களின் தொடர்பு, மகான்களின் தொடர்பு கிடைக்கும். பாக்யங்கள் தேடி வரும் காலம். புத்திரபாக்கியம் கிடைக்கும். நமக்கு நல்லதே நடக்காது என்று நினைத்திருந்த உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நூறு சதவிகித நன்மை நடக்கும். தொழில் ரீதியான வெற்றி கிடைக்கும்.

சொத்து சுகம் கிடைக்கும்
பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு தீரும். குழந்தைகளின் படிப்பு, திருமணத்திற்காக செலவு செய்வீர்கள். குரு தனுசு லக்னத்திற்கு நான்காம் வீட்டு அதிபதியாக இருப்பதால் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சொத்து சுகம் தேடி வரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

நோய்கள் பாதிப்பு
மூல நட்சத்திரத்தில் முதலில் குரு சஞ்சரிக்கிறார். ஜென்ம கேது நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் ஜென்ம குரு சஞ்சரிக்கிறார். முதல் இரண்டு மாதங்கள் குரு மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்க நோய்களுக்கு நீங்கள் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவீர்கள். இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
MOST READ: உடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா?... இதெல்லாம்தான்...

இரவு நேரங்களில் எச்சரிக்கை
ஜனவரி முதல் பூராடம் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் நட்சத்திரத்தில் குரு சஞ்சரிக்கும் போது கடன்கள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே தேவையற்ற கடன்களை வாங்க வேண்டாம். சின்னச் சின்ன நோய்கள் எட்டிப்பார்க்கும் மருந்து மாத்திரை செலவுகள் வரும். உங்க எதிரிகள் மீது கண் வையுங்கள். நீங்க நல்லதே நினையுங்கள் குருவின் பரிபூரண அருள் கிடைக்கும். முக்கியமாக இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

செல்வம் செல்வாக்கு உயரும்
தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சரித்தாலும் 90 நாட்கள் குருபகவான் அதிசாரமாக சஞ்சரிப்பார். குரு உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பெயர் புகழ் அதிகரிக்கும். எது செய்தாலும் நன்மைகள் நடக்கும். குரு அதிசாரமாக மகரத்தில் பயணிக்கும் காலத்தில் அதீத நன்மைகள் நடக்கும். பொருளாதார ரீதியாக பலமடைவீர்கள். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். அந்த காலகட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். குரு மே மாதத்தில் வக்ரமடையும் போது சின்னச் சின்ன தடைகள் ஏற்படும்.

லாபம் தரும் காலம்
தொழில் விருத்தியடையும், அப்பாவின் தொழில் லாபத்தை தரும். கணவன் மனைவி உறவுகள் பலப்படும். கடன்களை சரி செய்வீர்கள். பிரச்சினைகள் தீரும். நண்பர்கள் மூலம் நல்லதே நடக்கும். அதே நேரத்தில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். பணம் விசயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். இந்த குரு பெயர்ச்சி தனுசு லக்னத்திற்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களைத் தருகிறது.
MOST READ: இதயத்துலயும் புற்றுநோய் வருமா? வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...

நெகடிவ் எண்ணங்கள் வேண்டாம்
பொறுமையாக இருந்தால் எத்தனை பிரச்சினைகளையும் எளிதாக எதிர்கொள்வீர்கள். போட்டி, பொறாமை, பயம், வஞ்சகம், கவலை போன்ற நெகடிவ் எண்ணங்களை நீக்கி விடுங்கள். பூஜை அறையில் நெய்தீபம் ஏற்றி வைத்து மகிழ்ச்சியான மனநிலையில் இருங்கள் மனதில் அன்பும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடக்கும்.