Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மீனத்தில் குரு வக்ர நிவர்த்தியடைவதால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு நல்ல காலம் ஆரம்பிக்குது..
மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்ளுக்கு இந்த குரு வக்ர நிவர்த்தியில் இருந்து நல்ல காலம் ஆரம்பிக்கிறது.
மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு, இதுவரை தனது சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில் பயணித்து வந்தார். இந்நிலையில் 2022 நவம்பர் 24 ஆம் தேதி, அதாவது இன்று குரு பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு ஆண்டு காலம் ஆகும். இந்த குரு மீன ராசிக்கு மட்டுமின்றி, தனுசு ராசிக்கும் அதிபதியாவார். ஒருவரது ஜாதகத்தில் குரு சாதகமான நிலையில் இருந்தால், அவர் நிதி, தொண்டு மற்றும் படிப்புக்களில் அற்புதமான முடிவுகளைப் பெறுவார்கள்.

ஜோதிடத்தில் வியாழன்/குரு கல்வி, மூத்த சகோதரர், புனித இடம், பணம், தர்மம் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இன்று மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்ளுக்கு இந்த குரு வக்ர நிவர்த்தியில் இருந்து நல்ல காலம் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் குரு உள்ளார். எனவே இந்த ராசிக்காரர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு லாபம் குறைவாக இருந்தாலும், நல்ல பண ஆதாயத்திற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், இக்காலத்தில் உங்கள் செலவுகள் சற்று அதிகரிக்கும். வாக்குவாதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு உள்ளார். எனவே இந்த ராசிக்காரர்கள் பல அனுகூலமான பலன்களைப் பெறவுள்ளார்கள். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களின் சம்பளமும் அதிகரிக்கலாம். வியாபாரிகளுக்கு சாதகமான மற்றும் லாபகரமான காலமாக இருக்கும். ஆனால் வரவிற்கு ஏற்ப செலவும் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் தொடர்பான சில பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு உள்ளார். இதனால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து, ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் குரு உள்ளார். இதனால் இக்காலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சில பாதகமான பலன்களை அளிக்கக்கூடும். குறிப்பாக நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications