Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
குரு உருவாக்கும் கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
குரு நவம்பர் 24 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் கஜலட்சுமி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள்.
ஜோதிடத்தில் நவகிரகங்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு ஒரு சுப கிரகமாகும் மற்றும் இதை அதிர்ஷ்டத்தின் கிரகம் என்றும் அழைப்பார்கள். ஜாதகத்தில் குரு 9 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியாவார். மேலும் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியும் குரு ஆவார். இந்த குரு ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால், அவர் பணக்காரர், ஞானம், அறிவு மற்றும் அதிகாரம் மிக்கவராக ஆக முடியும்.

இப்படிப்பட்ட குரு தற்போது தனது சொந்த ராசியான மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு நவம்பர் 24 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் கஜலட்சுமி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எம்மாதிரியான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதையும் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகத்தால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். உங்களின் கௌரவம் உயரும். அரசு வேலைக்கு தயாராகி வருபவர்களுக்கு இது அதிர்ஷ்ட காலமாக இருக்கும். குரு 10 ஆவது வீட்டில் இருப்பதால், வியாபாரிகள் நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். புதிய தொழில் தொடங்க சாதகமான காலம். மேலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் இந்த யோக காலத்தில் முடிவுக்கு வரும். அரசியலில் இருப்பவர்கள், ஒரு நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கஜலட்சுமி ராஜயோகத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காணப் போகிறார்கள். வணிகர்கள் நல்ல பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் துறைகளில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். குரு 2 ஆவது வீட்டில் இருப்பதால், திடீர் பண ஆதாயம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் வெற்றி காண்பார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகம் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இக்காலத்தில் நீங்கள் குடும்பத்துடன் புனித ஸ்தலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். குரு 9 ஆவது வீட்டில் இருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்ள். உங்களின் தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வணிகர்கள் தங்கள் வணிகம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications