Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Guru Asta 2022: குரு அஸ்தமனமாவதால் அடுத்த ஒரு மாதம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசிக்கு மாற்றவுள்ளார். அதற்கு முன், குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 மார்ச் 20 ஆம் தேதி இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.
நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக குரு/வியாழன் கருதப்படுகிறது. ஜோதிடத்தில், குரு பகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவானின் இருப்பிடம் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். யாருடைய ஜாதகத்தில் குரு வலுவான நிலையில் உள்ளாரோ, அவர் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியையும் பெறுவார். செல்வம் மற்றும் அறிவு போன்றவற்றிற்கு குருவின் அருள் கிடைக்க வேண்டியது அவசியம்.

2022 குரு அஸ்தமனம்
குரு தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதி. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசிக்கு மாற்றவுள்ளார். இப்படி ராசியை மாற்றுவதற்கு முன், குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 மார்ச் 20 ஆம் தேதி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இப்படி குரு அஸ்தமனமாவதால் ஒரு மாத காலம் ஒருசில ராசிக்காரர்களுக்கு மிகவும் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. அந்த ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு அஸ்தமன காலம் மிகவும் நல்ல காலமாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு நல்ல சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருந்தாலும், பணத்தை சேமிப்பது என்பது இக்காலத்தில் சற்று கடினமாக இருக்கும். கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் மிகவம் சாதகமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். எனவே தனுசு ராசிக்காரர்கள் இந்த குரு அஸ்தமன காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். இதுவரை நிலுவையில் உள்ள உங்களின் வேலைகள் இக்காலத்தில் முழுமையாக முடிக்கப்படும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணம் இனிமையாக இருக்கும். புதிய வேலையை ஆரம்பிக்க சிறந்த காலம். ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். உங்களின் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் அதிபதியும் குரு பகவான் என்பதால், இந்த குரு அஸ்தன காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். பயணங்கள் இனிமையாக இருக்கும். நண்பர்களின் உதவியுடன் புதிய வேலையை தொடங்கத் திட்டமிடுவீர்கள். இக்காலத்தில் உங்களின் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் மிகவும் சாதகமான காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications