Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
மீனத்தில் குரு சுக்கிர சேர்க்கையால் மே 23 வரை அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
12 ஆண்டுகளுக்கு பின் குரு மீன ராசிக்கு செல்கிறார். அதேப் போல் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கு சென்றார். இந்த மீன ராசியில் சுக்கிரனும் குருவுடன் மே 23 ஆம் தேதி வரை ஒன்றாக பயணிப்பார்.

கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். கிரகங்களின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேப் போல் ஒரே ராசியில் இரண்டு கிரகங்களின் சேர்க்கைக்கும் முக்கியத்துவம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு ராசியில் 2 கிரகங்கள் சேர்ந்தால் அது சேர்ககை என்றும், 3 கிரகங்கள் சேர்ந்திருந்தால், திரிகிரஹி யோகம் என்றும், 4 கிரகங்கள் சேர்ந்திருந்தால், அது சதுர்கிரஹி யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் 5 கிரகங்கள் சேர்ந்திருந்தால், அது பஞ்சகிரஹி யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் குருவும், சுக்கிரனும் மீன ராசியில் ஒன்றாக இணைந்து பயணிக்கின்றன.

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை
ஜோதிடத்தின் படி, 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி குரு கும்ப ராசியில் இருந்து தனது சொந்த ராசியான மீன ராசிக்கு சென்றார். 12 ஆண்டுகளுக்கு பின் குரு மீன ராசிக்கு செல்கிறார். அதேப் போல் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கு சென்றார். இந்த மீன ராசியில் சுக்கிரனும் குருவுடன் மே 23 ஆம் தேதி வரை ஒன்றாக பயணிப்பார். அதன் பின் சுக்கிரன் மீனத்தில் தனது பயணத்தை முடித்துவிட்டு மேஷ ராசிக்கு செல்வார். பொதுவாக குரு மற்றும் சுக்கிர சேர்க்கை மிகவும் நல்லதாகும்.

குரு மற்றும் சுக்கிரன் முக்கியத்துவம்
ஜோதிடத்தில் சுக்கிரன் மற்றும் குரு ஆகிய இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் குரு தேவர்களின் குருவாக கருதப்பட்டாலும், சுக்கிரன் அசுரர்களின் குருவாக கூறப்படுகிறது. ஜோதிடத்தில் குரு மகிழ்ச்சி, அறிவு, திருமண வாழ்க்கை, குழந்தைகள், செல்வம், தர்மம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. மறுபுறம், சுக்கிரன் பொருள் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, ஆடம்பரம், புகழ், கலை, திறமை, அழகு, காதல் மற்றும் காமம் போன்றவற்றைக் குறிக்கிறது.
இப்போது மீன ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மீனம்
மீன ராசியில் குருவும், சுக்கிரனும் இணைந்திருப்பதால், மீன ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மீனத்திற்கு செல்கிறார். ஆகவே இச்சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் மீனத்தில் சுக்கிரன் மற்றும் குரு இணைவதால், அதிர்ஷ்டம், மரியாதை மற்றும் மகிழ்ச்சி போன்றவை அதிகரிக்கும்.

கடகம்
குரு சுக்கிர சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறது. அதிர்ஷ்டம் அதிகரிப்பதால் இக்காலத்தில் அனைத்து விதமான ஆடம்பர வசதியும் கிடைக்கும். இக்காலத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு அமையும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு சுக்ர சேர்க்கையால் அனுகூலமான மற்றும் நல்ல பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதால், அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

மகரம்
குரு சுக்ர சேர்க்கையால் மகர ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலைக்கான பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடக்கும். வெளியூருக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும்.



Click it and Unblock the Notifications