Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சனியின் அருளால் தந்தேராஸ் நாளில் இருந்து இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்குது..
தந்தேராஸ் நாளில் இருந்து எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்கிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தந்தேராஸ் என்பது தனதிரயோதசி என்னும் அழைக்கப்படுகிறது. இது தீபாவளி பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த தந்தேராஸ் நாளில் தான் லட்சுமி பூஜை செய்யப்படும். இந்நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது மிகவும் நல்லதாக கூறப்படுகிறது. மேலும் இந்நாளில் தான் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே எம தீபத்தை ஏற்றுவார்கள். இந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

சனி பகவான் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது. சனி பகவான் என்ன தான் அசுப கிரகமாக இருந்தாலும், நற்பலன்களையும் வழங்குவார். அப்படி நற்பலன்களை வழங்கும் போது, ஒருவரின் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். இப்போது தந்தேராஸ் நாளில் இருந்து எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்கிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அனைத்து வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் நற்பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் கௌரவம் உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மொத்தத்தில் இந்த காலம் வரம் போன்றதாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் இருந்து நல்ல பண பலன்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மிகவும் பயனுள்ள காலமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! உங்களின் நிதி நிலைமை வலுவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் பணியிடத்தில் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications