Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஜூன் மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க லட்சுமி தேவியின் அருளால் செழிப்பா இருக்கப் போறாங்க...
லட்சுமி தேவியின் அருளும், ஆசியும் கிடைத்தால், ஒருவரின் உறங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டமும் எழும். ஆகவே 2022 ஜூன் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருளால் வாழ்க்கை செழிப்பாக இருக்கப் போகிறது?
2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் இயக்கத்தால், சில ராசிக்காரர்கள் நற்பலன்களையும், சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் பெறுவார்கள்.

அந்த வகையில் ஜோதிட கணக்கீடுகளின் படி, ஜூன் மாதத்தில் சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெறவுள்ளார்கள். லட்சுமி தேவி செல்வத்தின் அதிபதி என்று அழைக்கப்படுகிறார். லட்சுமி தேவியின் அருளும், ஆசியும் கிடைத்தால், ஒருவரின் உறங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டமும் எழும். ஆகவே 2022 ஜூன் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருளால் வாழ்க்கை செழிப்பாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் விரிவாக்கம் மற்றும் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். நண்பர்களிடன் உதவியால் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆன்மீகம் மற்றும் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்குவதற்கு இது நல்ல நேரம்.

மிதுனம்
லட்சுமி தேவியின் அருளால் மிதுன ராசிக்காரர்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் வருமான ஆதாரமாக மாறும். இம்மாதத்தில் உங்கள் கோபத்தின் உக்கிரம் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரத்திற்கான சில திட்டங்கள் நிறைவேறும். உங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
ஜூன் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்திருப்பார்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். வியாபாரத்தின் நிலை மேம்படும். குடும்பத்தில் சந்தோஷமும், அமைதியும் நிலவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இந்த மாதத்தில் ஆடைகளை பரிசாக பெறுவீர்கள். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்
லட்சுமி தேவியின் அருளால் மீன ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் அதிக நம்பிக்கை நிறைந்திருப்பார்கள். இம்மாதத்தில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இதன் காரணமாக நிதி நிலைமை வலுவாக இருக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் சமூகமான உறவைப் பேணுங்கள். இம்மாதத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
