Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
உடலில் இந்த அடையாளம் இருக்கும் பெண்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்.. இவங்களுக்கு பண கஷ்டமே வராதாம்...
பெண்களின் உடலில் உள்ள சில அடையாளங்கள் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. சாஸ்திரத்தின் படி, பெண்களின் உடலில் இருக்கும் எந்த அறிகுறிகள் நல்லதாக கருதப்படுகிறது என்பது குறித்து தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரின் உடலிலும் வெவ்வேறு அடையாளங்கள் உருவாகின்றன. இப்படி உருவாகும் பல அடையாளங்கள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது வாழ்க்கையில் சந்தோஷத்தையும், செழிப்பையும் அதிகரிக்கிறது. அதுவும் பெண்களின் உடலில் உள்ள சில அடையாளங்கள் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. சாஸ்திரத்தின் படி, பெண்களின் உடலில் இருக்கும் எந்த அறிகுறிகள் நல்லதாக கருதப்படுகிறது என்பது குறித்து தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

சாஸ்திரத்தின் படி, ஒருவரின் உடலில் உருவாகும் அடையாளங்கள் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தின் படி, ஒருவரின் உடலில் வெவ்வேறு அடையாளங்கள் உருவாகின்றன. இவற்றில் பல அடையாளங்கள் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்போது பெண்களின் உடலின் உருவாகும் எந்த அடையாளங்கள் அதிர்ஷ்டமானது என்பதைக் காண்போம் வாருங்கள்.

தொப்புளில் மச்சம்
ஜோதிடத்தின் படி, தொப்புளுக்கு அடியில் அல்லது தொப்புளைச் சுற்றி மச்சம் அல்லது மருவைக் கொண்ட பெண்கள், தங்கள் குடும்பத்திற்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இத்தகைய பெண்ணை திருமணம் செய்யும் ஆண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் செழுமைக்கும் பஞ்சம் இருக்காது.

உள்ளங்காலில் முக்கோண அடையாளம்
சாஸ்திரத்தின் படி, உள்ளங்காலில் முக்கோண அடையாளம் இருக்கும் பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இத்தகைய பெண்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், வாழ்க்கையில் விரைவில் நல்ல நிலைமையில் இருப்பார்கள். மேலும் இந்த பெண்கள் மற்றவர்களுக்கு எப்போதும் உதவ முன் வருவார்கள்.

அகலமான கட்டைவிரல்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, பெண்களில் அகலமான கட்டை விரலைக் கொண்ட பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த வகை பெண்களின் வாழ்க்கை மிகவும் சௌகரியமாகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்.

மூக்கைச் சுற்றி மச்சம்
சாஸ்திரத்தின் படி, மூக்கின் மேல் அல்லது மூக்கைச் சுற்றி மச்சம் கொண்ட பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இந்த பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும், செழுமைக்கும், செல்வத்திற்கும் பஞ்சமிருக்காது.

பாதத்தில் சங்கு, தாமரை, சக்கரம்
ஜோதிடத்தின் படி, உள்ளங்காலில் சங்கு, தாமரை அல்லது சக்கரம் போன்ற அடையாளங்களைக் கொண்ட பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இத்தகைய பெண்கள் வாழ்வில் குறுகிய காலத்தில் சிறப்பான இடத்தை அடைவார்கள். அல்லது இத்தகைய பெண்களை திருமணம் செய்த ஆண்கள் நல்ல நிலையில் இருப்பார்கள்.

பிங்க் நாக்கு
ஜோதிடத்தின் படி, பெண்களில் மென்மையான மற்றும் பிங்க் நிற நாக்கைக் கொண்ட பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் எங்கு வாழ்ந்தாலும் மகிழ்ச்சியைப் பரப்புவார்கள்.

மான் போன்ற கண்கள்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, மான் போன்ற அழகான கண்களைக் கொண்ட பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இத்தகைய பெண்களை திருமணம் செய்யும் ஆண்களும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் எப்போதும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications