Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
Gemini Horoscope 2022: குரு, சனியின் அருளால் மிதுன ராசிக்காரர்களுக்கு 2022 எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
ஜோதிடத்தில் உள்ள கிரக நிலைகளின் படி, புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆண்டு முழுவதும் பொருளாதார வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும்.
2022 ஆம் ஆண்டில் காலடியை எடுத்து வைக்கவுள்ளோம். பலரது மனதிலும் 2022 ஆம் ஆண்டைப் பற்றிய பல கேள்விகள் எழுந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு வருடமும் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. அந்த வகையில் 2022 ஆம் வருடமும் வாழ்வில் மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும். ஜோதிடத்தில் உள்ள கிரக நிலைகளின் படி, புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆண்டு முழுவதும் பொருளாதார வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும்.

மிதுன ராசிக்காரர்களின் 2022 கணிப்புகளின் படி, கடின உழைப்பையும் முயற்சியையும் மேற்கொண்டால், தொழில் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். மிதுன ராசிக்கார மாணவர்களுக்கு 2022 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். இப்போது 2022 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை விரிவாக காண்போம்.

காதல்
2022-இல் மிதுன ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வருடத்தின் ஆரம்பத்தில் குரு பகவான் உணர்ச்சி ரீதியாக தூண்டுவார். இதனால் காதலில் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். காதலர்கள் தங்களின் காதல் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இன்னும் திருமணமாகாதவர்கள் 2022 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

தொழில்
2022-இல் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் கலவையான பலன்களைப் பெறுவார்கள். வெற்றியைப் பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எட்டாம் வீட்டில் சனியின் தாக்கத்தால் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களிடம் உயர் அதிகாரிகள் வேலையின் தரத்தை அதிகரிக்கவும், அதிக முயற்சிகளை மேற்கொள்ளவும் கோரிக்கை வைப்பார்கள்.

கல்வி
2022 ஆம் ஆண்டு மிதுன ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த ஆண்டாக இருக்கும். விடாமுயற்சியும், கடின உழைப்பும் விரும்பிய பலனைத் தரும். உயர் கல்வியைப் படிக்க விரும்பும் மாணவர்கள் புகழ்பெற்ற கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் இடம் பெறலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வெற்றி பெறலாம்.

நிதி
2022 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் நிதி விஷயத்தில் விரும்பிய முடிவுகளைப் பெறுவார்கள். குரு பகவான் உங்கள் தொழில் வீட்டிற்கு இடம் மாறப் போகிறார். இதன் விளைவாக இந்த ஆண்டு தொழிலில் நிச்சயம் நல்ல பலனைப் பெறுவீர்கள். மேலும் குரு உங்கள் நிதி வளர்ச்சிக்கும் உதவுவார். 8 ஆம் வீட்டில் சனி இருப்பதால், கொஞ்சம் உங்களின் முயற்சியும் வேண்டும். ஆனால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உங்களின் முந்தைய வேலையில் இருந்து பெறப்படாத பணத்தை திடீரென்று பெறுவீர்கள்.

குடும்பம்
2022 இல் மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் இந்த ஆண்டில் உங்கள் நேரத்தை உங்கள் குடும்பத்திற்காக ஒதுக்குவீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நீடித்திருக்கும். இந்த ஆண்டில் வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் ஏதேனும் மங்களகரமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது.

குழந்தைகள்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குருவும் சனியும் இணைந்திருப்பதால், ஆண்டின் ஆரம்பம் மிகவும் சாதகமாக இருக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறலாம். வீட்டில் திருமண வயதிஙல் மகன்/மகள் இருந்தால், அவருக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கலாம். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சற்று கடினமான காலமாக இருக்கும். உங்களுக்கு இரண்டாவது குழந்தை இருந்தால், அவருக்கு இந்த ஆண்டு மிதமானதாகவே இருக்கும். சில நேரங்களில் உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகள் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். உங்கள் குழந்தை படிப்பில் கடினமான உழைத்தால், விரும்பிய முடிவுகளைப் பெறுவதோடு, வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

திருமணம்
2022 இல் ஆண்டின் முதல் காலாண்டை கடக்கும் போது, சுக்கிரனால் மிதுன ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். இது தவிர சுக்கிரனின் நிலையால், உங்கள் காதல் வாழ்க்கை இந்த ஆண்டு மேம்படும்.

வியாபாரம்
2022 இல் மிதுன ராசிக்காரர்களின் வியாபாரமானது லாபத்தின் அடிப்படையில் சராசரியாக இருக்கும். வியாபாரிகள் இந்த ஆண்டில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். புதிய வணிகத்தை தொடங்க திட்டம் இருந்தால், ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பணப் பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆண்டின் இரண்டாம் பாதியில் ஏமாற வாய்ப்புள்ளதால், கூட்டு வியாபாரம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சொத்து மற்றும் வாகனம்
2022 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும் என்பதால், பொருளாதார கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மிதமானதாக இருக்கும். சனி 11 ஆவது வீட்டில் இருப்பதால், இந்த ஆண்டு உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, குருவின் பார்வையால் ரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்களுடன் நிலம், கட்டிடம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியம்
2022 ஆம் ஆண்டில் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆண்டின் தொடக்கத்தில் சனி அமர்ந்திருப்பதாலும், 6 ஆம் வீட்டில் கேது இருப்பதாலும், இந்த ஆண்டு சற்று பலவீனமாகவே இருக்கும். இந்த ஆண்டின் உங்களின் உணவுப் பாழக்கம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தம் மற்றும் காற்று தொடர்பான நோய்களால் அவதிப்பட நேரிடும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளால் உடல்நல பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் கண் நோய், அஜீரணக் கோளாறு அல்லது தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே 2022 ஆம் ஆண்டு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவில் கவனத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications