For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நாளின் வழிபாட்டு முறைகளும், அதன் காரணங்களும்...

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 2022 ஆகஸ்ட் 31 புதன்கிழமை தொடங்குகிறது. கொண்டாட்டங்கள் மூன்று முதல் பத்து நாட்கள் வரை நீடிக்கும். விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தின் நிறைவு பகுதியாக கணேஷ் விசர்ஜனத்துடன் முடிவடைகிறது.

|

இந்து பண்டிகைகளில் விநாயகருக்கு என்று கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது விநாயகர் சதுர்த்தி. தென் இந்தியாவை காட்டிலும், வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். சிவன் - பார்வதியின் மூத்த மகனான விநாயகரை வணங்கிய பின்னர் தான் அனைத்து பூஜைகளும், சுப காரியங்களும், வியாபாரம், தொழில் என அனைத்தும் தொடங்கப்படுகிறது. இதனாலேயே அவர் முழு முதற்கடவுளாக கருதப்படுகிறார். காரிய சித்தி, தடைகள் நீங்க, வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு வித்திட விநாயகரை பிரார்த்திக்கின்றனர்.

Ganesh Visarjan: How To Perform Ganesh Visarjan At Home

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமானது 3 முதல் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 2022 ஆகஸ்ட் 31 புதன்கிழமை தொடங்குகிறது. கொண்டாட்டங்கள் மூன்று முதல் பத்து நாட்கள் வரை நீடிக்கும். வீடுகளில் மட்டுமின்றி, வீதிகளிலும் மிகப் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வித்தியாசமாக வடிவங்களில் வைக்கப்பட்டு பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தின் நிறைவு பகுதியாக கணேஷ் விசர்ஜனத்துடன் முடிவடைகிறது. ஒவ்வொரு வீட்டின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் 3, 5, 7 அல்லது 10 நாட்களில் விசர்ஜனம் செய்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணேஷ் விசர்ஜன் என்றால் என்ன?

கணேஷ் விசர்ஜன் என்றால் என்ன?

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு, மக்கள் களிமண், காகிதக் கூழ், சுண்ணாம்பு பேஸ்ட் போன்றவற்றால் செய்யப்பட்ட புதிய விநாயகர் சிலையை வாங்கி வீட்டில் வைத்து வணங்குகிறார்கள். இந்த சிலைகள் வீட்டின் பூஜை அறையில் நிறுவப்பட்டு 3 வேளைகளும் பூஜைகள், நிவேத்யம் செய்யப்படுகிறது. 3 முதல் 10 நாட்கள் வரை பூஜை செய்த பின்னர் பிரியாவிடை கொடுத்து நீர்நிலைகளில் கரைக்கின்றனர். இதையே விசர்ஜனம் சென்று அழைக்கின்றனர். விசர்ஜனத்தின் மிகப்பெரிய தத்துவம் என்னவென்றால், மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பதை உணர்த்தும் வகையிலேயே களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை பூஜை செய்து இறுதியில் நீர்நிலைகளில் கரைக்கின்றனர்.

கணேஷ் விசர்ஜனின் முக்கியத்துவம்:

கணேஷ் விசர்ஜனின் முக்கியத்துவம்:

இந்து பாரம்பரிய முறைப்படி ஒவ்வொரு பூஜையும் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. 1- ஆவாஹன் (அழைப்பு), 2- பூஜை (வழிபாடு) மற்றும் 3- யதஸ்தான் (வழியனுப்புதல்). முதலாம் நிலையான அழைப்பின் போது ​​பூஜையின் முக்கிய தெய்வம் உயர்வான மேடையில் வைக்கப்பட்டு, அதன் மேல் தண்ணீர், வெற்றிலை மற்றும் தேங்காய் நிரப்பப்பட்ட ஒரு கலசத்தை வைக்கவும். அதன்பின்னர் இரண்டாவது நிலையில் பாரம்பரியப்படி பூஜைகள் செய்ய வேண்டும். யதஸ்தான் என்பது பிரார்த்தனைக்குப் பிறகு தெய்வத்திற்கு முழு மரியாதையுடன் வழி அனுப்ப வேண்டும். பின்னர், இறைவனது ஆசீர்வாதங்களுக்காக நன்றி சொல்வது. அதற்காக தான் விநாயகர் சதுர்த்தியின் நிறைவில் கணேஷ் விசர்ஜன் கொண்டாடப்படுகிறது. அந்த கொண்டாட்டங்களை நினைவுகூறும் விதமாக பக்தர்கள் பிரம்மாண்டமான விநாயகப் பெருமானை ஊர்வலமாக எடுத்து சென்று, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வழி அனுப்புகிறார்கள்.

வீடுகளில் கணேஷ் விசர்ஜன் செய்யும் நடைமுறை:

வீடுகளில் கணேஷ் விசர்ஜன் செய்யும் நடைமுறை:

* ஒவ்வொரு வீட்டின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் 3, 5, 7 அல்லது 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. கணேஷ் விசர்ஜன நாளில், குடும்பத்தினர் விநாயகர் முன்பு கூடி நின்று பூக்கள் தூவியும், விளக்கேற்றி தீப ஆராதனை காட்டியும், கொழுக்கட்டை, லட்டுகள் போன்ற வீட்டில் தயாரித்த உணவுப் பொருட்களை படைத்து நிவேத்யம் செய்து ஆராதனையுடன் பூஜை நிறைவடைகிறது.

* இந்த பூஜையில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று வழிபட்டு அக்ஷதை தூவி வழிபட்டு, இறுதியாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.

* இறுதி பூஜைக்கு பின்னர் குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினர் சிலையை தொட்டு விடைபெறும் பயணத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.

* விநாயகப் பெருமான் விடைபெறும் போது அவருக்கு தயிர் மற்றும் இனிப்புகளை வழங்கி வழி அனுப்பி வைக்க வேண்டும். குடும்பத்தினர் சிறிது அரிசி மற்றும் தானியங்களை ஒரு சிவப்பு துணியால் மூட்டையாகக் கட்டி, அவரை மீண்டும் அவரது வசிப்பிடத்திற்குச் செல்லும் போது அவருக்கு துணையாக அதனை உடன் வைத்து அனுப்ப வேண்டும்.

* பின்னர் குடும்பத்தினர் விநாயகர் துதிகளை போற்றி பாடி குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் சிலையை எடுத்துச் சென்று சிலையை வீட்டைச் சுற்றி ஒரு முறை சுற்றி வந்து, எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆறு, ஏரிகளில் கரைப்பது

ஆறு, ஏரிகளில் கரைப்பது

* விசர்ஜனத்திற்காக அதிகளவில் மக்கள் ஒன்று கூடி இறைவனிடம் பிரியாவிடை பெறுகின்றனர். பொதுவாக ஆறு, ஏரி, குளம் அல்லது கடல் போன்ற நீர்நிலைகளை அடைந்தவுடன், விநாயகர் சிலை மரியாதையுடன் கோஷங்கள் எழுப்பி நீர்நிலைகளில் கரைக்கின்றனர்.

* பக்தர்கள் தங்கள் இல்லங்களை ஆசீர்வதிக்கவும் அடுத்த ஆண்டு பூஜைக்கு திரும்பவும் வர வேண்டும் என்பதற்காக விநாயக பெருமானை பிரார்த்திக்கிறார்கள்.

* இந்த ஆண்டு, தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் நட்பு சிலைகளைப் பயன்படுத்தவும், வீட்டிலேயே விசர்ஜனம் செய்யவும் அனைத்து மக்களையும் அரசு வலியுறுத்தியுள்ளது. அது வீட்டில் சாத்தியமில்லை என்றால், சிலைகளை அருகில் உள்ள செயற்கை குளங்களில் கரைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ganesh Visarjan 2022: How To Perform Ganesh Visarjan At Home

Ganesh Visarjan 2022: How to perform Ganesh Visarjan at home? Read on...
Desktop Bottom Promotion