For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் சதுர்த்தி 2021: விநாயகர் உருவம் பற்றிய 5 சூப்பர் தத்துவங்கள்... இதோ...

விநாயகர் சதுர்த்தி 2021 யில் விநாயகர் உருவம் பற்றிய ஐந்து விதமாக தத்துவங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

விநாயகர் முழுமுதற்கடவுள். ஆவணி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து மெய்யியல் தத்துவத்தின் படி, விநாயகர் சதுர்த்தி மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அதில் விநாயகரின் உருவமான யானைத் தலை உருவத்துக்குள் சில வாழ்க்கைத் தத்துவங்களும் அடங்கியிருக்கின்றன.

Ganesh Chaturthi 2020: 5 Moral Lessons Of Lord Ganesha You Can Teach Your Kids

அந்த வாழ்வியல் தத்துவங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். நீங்களும் படித்து உங்களுடைய வீட்டில் உள்ள குழந்தைகளிடமும் அதை அறிவுறுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முழுமுதல் கடவுள்

முழுமுதல் கடவுள்

இந்து தத்துவ மரபில் தெய்வீக வழிபாட்டைப் பொருத்தவரையில், எந்த தெய்வத்தை வணங்குவதற்கு முன்பாகவும் பிள்ளையாரை முதலில் வழிபடுவது என்பது தான் மரபாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு கடவுளாக விநாயகர் இருக்கிறார்.

MOST READ: சபாஷ்!... சட்டப்பிரிவு 377 ஐ சந்தித்து ஒன்றாக சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை தம்பதி...

கற்க வேண்டிய பாடம்

கற்க வேண்டிய பாடம்

விநாயகரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. விநாயகரிடம் இருக்கிற நிறைய நல்ல குணங்களை நாம் நம் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் எடுத்துச் செல்ல வேண்டியது நம்முடைய கடமை. அதனால் நம்முடைய மரபு மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் நம்முடைய இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு அதை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம். அது உங்களுடைய மற்றும் உங்களுடைய குழந்தைகளையும் வாழ்வில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். அதில் அவருடைய உருவத்தின் மூலம் நாம் நிறைய வாழ்க்கைத் தத்துவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அது பற்றி பார்ப்போம்.

சுதந்திரமாக செயல்படுதல்

சுதந்திரமாக செயல்படுதல்

விநாயகர் மற்ற எந்த தெய்வங்களையும் சார்ந்திருக்காமல் தனித்தன்மையோடு சுதந்திரமாகச் செயல்படக் கூடியவர். கணேசர், பிள்ளையார் என்பது போல இவருக்கு விநாயகர் என்றும் ஒரு பெயருண்டு. இந்த பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா? தலைவன் யாருமில்லாத சுதந்திரமானவன் என்று அர்த்தம். இந்த தத்துவத்தைச் சொல்லி, உங்களுடைய குழந்தைகளையும் தனித்துவத்துடன் சுதந்திரமாகச் செயல்படச் சொல்லிக் கொடுங்கள்.

MOST READ: வைரலாகும் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் திருமண புகைப்படம்... இவங்க யார் தெரியுமா?

எளிமையின் வடிவம்

எளிமையின் வடிவம்

இந்து கடவுள்களின் ஒரு மிகப்பரிய தத்துவக் குறியீடாக இருப்பவர் தான் பிள்ளையார். இவருடைய வாகனமாக இருப்பது எலி. இது விநாயகரின் மனிதாபிமானத்தைக் குறிக்கக் கூடியது. எப்போதும் தனக்கு எல்லா வசதிகளும் இருந்தும் எளிமையாக இருப்பவரை இந்த உலகம் அதிகமாகப் போற்றவும் மரியாதையுடன் நடத்தவும் எண்ணும். அதனால் நம்முடைய குழந்தைகளுக்கும் எளிமையான பணத்தின் மீதான அதீத பற்றை தவிர்க்கவும் சொல்லிக் கொடுத்து வளர்க்கப் பாருங்கள்.

பெரிய காது

பெரிய காது

பெரும்பாலும் நம்மில் நிறைய பேர் நிறைய பேசுவோம். ஆனால் மற்றவர்கள் பேசும்போது காது கொடுத்து கேட்க தயாராக இருப்பார்கள். விநாயகருக்கு மிகப்பெரிய காது இருபு்பது நமக்குத் தெரியும். அது எதன் குறியீடு தெரியுமா? எல்லோர் பேசுவதையும் காது கொடுத்துக் கேட்க தயாராக இருக்கிறார் என்பது தான் அர்த்தம். அடுத்தவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருந்தால் தான், அந்த சூழலைப் புரிந்து கொண்டு சிறந்ததொரு முடிவினை எடுக்க முடியும். அதனால் எப்போதும் அடுத்தவர்களுடைய கருத்துக்களுக்குச் செவி சாய்க்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பெரிய தலை

பெரிய தலை

விநாயகரின் பெரிய தலை விசாலமான அறிவைக் குறிக்கிறது. உலகத்தில் நடக்கும் நிறைய விஷயங்களை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளத் தான் பெரிய தலை கொண்டிருக்கிறார். அறிவே ஆற்றல் என்பது தான் அதன் தத்துவம். அதனால் நம்முடைய குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அறிவும் விசாலமான பார்வையும் தான் இந்த உலகத்தை நாம் புரிந்து கொள்ள உதவும்.

MOST READ: உண்ணி கடித்துவிட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

யானை தலை - மனித உடல்

யானை தலை - மனித உடல்

யானை தலை வைத்திருக்கும் விநாயகரின் தத்துவத்தைப் பற்றி பார்த்தோமே! தலை மட்டும் யானைத்தலை. உடல் மட்டும் ஏன் மனித உடல்? அதில் ஏதாவது தத்துவம் இருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்குமு் ஒரு தத்துவம் இருக்கிறது.

மனிதர்களுடைய இதயம் தான் மற்ற உயிர்களை விடவும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளால் நிரம்பியிருக்கும். அதனால் தான் மனித இதயத்தைக் கொண்ட மனித உடல் அவருக்கு. அவர் எப்போதுமே அன்பானவர். யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார். அதனால் நம்முடைய குழந்தைகளுக்கு இந்த தத்துவங்களை எடுத்துக் கொண்டு, மற்றவர்களிடம் எப்போதும் அன்பாகவும் அணுசரணையோடும் இருக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ganesh Chaturthi 2021: 5 Moral Lessons Of Lord Ganesha You Can Teach Your Kids

Ganesh Chaturthi will be celebrated on September 10, 2021 and it is time for you to teach your kids the significance and prominence of Lord Ganesh in Hindu mythology
Desktop Bottom Promotion