For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகருக்கு அவல், பொரி, கரும்பு, மோதகம் படைப்பதன் தத்துவம் தெரியுமா?

கணபதி என்றிட கலங்கும் வல்விணை. தும்பிக்கையான் நம்பிக்கை தருவார். விநாயகர் சதுர்த்தி நாளில் கணபதிக்கு அவல், பொரி, கரும்பு, விளாம்பழம், கொழுக்கட்டை எனப்படும் மோதகம் படைத்து வழிபடுவோம்.

|

Recommended Video

Watch Video : Lord Ganesha has arrived. And the city is abuzz with zeal and enthusiasm

விநாயகர் முழுமுதற்கடவுள். ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி, மோதகம், கொழுக்கட்டை, கரும்பு, விளாம்பழம் படையல் போட்டு அவரை வணங்குவோம். கணபதிக்கு படைக்கும் படையல் பொருட்களுக்கு என சில தத்துவங்கள் உள்ளன. நம் துன்பங்களை தும்பிக்கையில் ஊதி ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் கணபதி. வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்தாலும் கணபதியை வணங்கிட அவற்றை களைந்து இனிப்பாக மாற்றிவிடுவார் என்பதை உணர்த்துகிறது நாம் அவருக்கு படைக்கும் நிவேதனங்கள்.

மோதகத்தை கையில் ஏந்தியிருப்பார் விநாயகர். மெத்து மெத்தென்று வென்மையாக இருக்கும் மோதகம் உள்ளே பூரணம் இருக்கும். வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கும் மோதகம் போல மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

Ganesh Chaturthi

கரும்பு கடிப்பதற்கு கடினமானாலும் அதன் சுவை இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படு கிறது. அதே போல அவல், பொரி படையலின் தத்துவம், அவை இரண்டும் ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணபதி தத்துவம்

கணபதி தத்துவம்

மோட்சம் தரும் கணபதி

கணபதி என்றாலே தன்னை வழிபடுபவர்களுக்கு மோட்சத்தையும் ஞானத்தையும் தருபவர் கணபதி. தான் என்ற அகங்காரத்தை உடைத்தால் கஷ்டங்களையும் கவலைகளையும் சிதறச்செய்வேன் என்று சிதறுகாய் போடும் தத்துவத்தின் மூலம் உணர்த்துகிறார் கணபதி. அதேபோல எளிமையின் சிகரமான கணபதிக்கு எலிதான் வாகனம். அவருக்கு அருகம்புல்லே போதும் அத்தனை கவலைகளையும் தீர்ப்பார் கணபதி.

MOST READ: விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை சூப்பரா சிம்பிளாக செய்வது எப்படி?

கொழுக்கட்டை

கொழுக்கட்டை

மோதகம்

விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது பற்றி தத்துவ ரீதியான விளக்கம் சொல்லப்பட்டாலும், பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை படைப்பதற்குப் பின்னணியில் புராண கதையே உள்ளது. ஞானபாலி என அரசன் கணபதியின் பக்தன். பஞ்சத்தை தீர்க்க யாகம் செய்த போது மேனகையால் மோகத்தில் சிக்கி பாதியில் யாகத்தை நிறுத்தினான். மேனகை எச்சரிக்கவே மீண்டும் வந்து யாகத்தை தொடர்ந்தான். அதை ஏற்காத அஷ்டதிக் பாலகர்கள் சபிக்கவே ஒற்றைக்கண் பூதமாக மாறி அலைந்தான் ஞானபாலி.

கொடிய அரக்கன்

கொடிய அரக்கன்

பசியில் துடித்த அரக்கன்

பசியால் தவித்த ஞானபாலி கண்ணில் கண்டவர்களை எல்லாம் சாப்பிட்டான். அதே நேரத்தில் விநாயகர் வழிபாட்டை தொடர்ந்தான். அதனால் ஞானபாலியை யாராலும் கொல்ல முடியவில்லை. பூமாதேவி உடனே கணபதியை வேண்டினார். பக்தனையும் காக்கவேண்டும், பூமாதேவியின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்த கணபதி, வேடனாக மாறினார்.

கொழுக்கட்டையாக மாற்றிய கணபதி

கொழுக்கட்டையாக மாற்றிய கணபதி

முழுமுதற்கடவுள்

கணபதிக்கும் ஞானபாலிக்கும் போர் நீடித்தது. ஆனால் முடிவுக்கு வரவில்லை. பரம பக்தனான ஞானபாலியை கொல்ல மனது வராத கணபதி தன்னுடனேயே வைத்துக்கொள்ள நினைத்தார். விஸ்வரூப வடிவம் எடுத்த கணபதி தனது பக்தனை கைப்பிடிக்குள் அடக்கி மோதகமாக மாற்றினார். ஞானபாலியும் சந்தோசமாக கொழுக்கட்டையாக விநாயகரின் வயிற்றில் ஜம்மென்று அமர்ந்து கொண்டார். இதனைக்கண்ட அனைவரும் ஆனந்தம் கொண்டனர். விநாயகருக்கு கொழுக்கட்டையை நிவேதனம் செய்கின்றனர்.

MOST READ: எப்பவும் அடிபட்டு முன்னேறுற ரெண்டு ராசிக்காங்க யார் தெரியுமா? இவங்கதான்...

சரணாகதி தத்துவம்

சரணாகதி தத்துவம்

கணபதியை சரணடையுங்கள்

கணபதியை சரணடைய கஷ்டங்கள் தீரும். விநாயகரை நம்பிக்கையோடு கும்பிட்டால் விக்னங்கள் உடைபடும். தடைகள் உடைபடும். தும்பிக்கையால் நம்பிக்கை தருவார் கணபதி. கொடிய அரக்கனாகவே இருந்தாலும் தன்னை சரணடைந்தால் நன்மை செய்வார் கணபதி என்பதை இதன் மூலம் உணரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ganesh Chaturthi 2021: Significance Of Ganesh Chaturthi Prasadam

Lord Ganesha has arrived. And the city is abuzz with zeal and enthusiasm. As the family gets ready for the morning Puja, an irresistibly sweet aroma permeates the home. Modak Ganesha’s favourite delicacy.
Desktop Bottom Promotion