For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாஸ்திரங்களின் படி இந்த தினசரி பழக்கங்கள் உள்ளவர்களின் எதிர்காலம் அவர்களாலேயே நாசமாகுமாம் தெரியுமா?

|

நமது பழக்கங்கள் நம்முடைய ஒழுக்கத்தின் கண்ணாடியாகும். இது சில சமயங்களில் சொற்கள் அல்லாத தகவல்தொடர்பு வடிவமாகவும் உள்ளது. நம்முடைய அன்றாட பழக்கங்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது. இந்த பழக்கங்கள் நம் வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

Future Predictions Based On Daily Habits

பண்டைய காலங்களில் ஒருவரை பற்றி புரிந்து கொள்ள அவர்களின் பழக்கவழக்கங்களே அடையாளமாக இருந்தது. ஆனால் இந்த அன்றாட பழக்கவழக்கங்கள் நம்முடைய பண்பு மட்டுமின்றி நம்முடைய எதிர்காலத்தையும் கணிக்க உதவும் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். இந்த பதிவில் நம்முடைய பழக்கங்கள் எப்படி நம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தரையை தேய்த்துக் கொண்டு நடப்பது

தரையை தேய்த்துக் கொண்டு நடப்பது

பல வேதங்களில் இது ஒரு கெட்ட பழக்கமாகக் கூறப்பட்டுள்ளது. உங்கள் கால்களை இழுத்து கொண்டு நடப்பது உங்கள் விதியில் பிரச்சினைகள் வருவதைக் குறிக்கிறது. இந்த பழக்கம் வாழ்க்கையில் ராகுவின் எதிர்மறையான தாக்கத்தை குறிக்கிறது.

கை மற்றும் முகத்தை கழுவாமல் இருப்பது

கை மற்றும் முகத்தை கழுவாமல் இருப்பது

நாள் முழுவதும் வெளியில் சுற்றி திரிந்த பிறகு, நீங்கள் வீட்டிற்கு திரும்பி வரும்போது, முதலில் உங்கள் கை, கால்கள் மற்றும் முகத்தை கழுவ வேண்டும். இது சுகாதாரமானது மட்டுமல்ல, உங்கள் முகம், கை, கால்களைக் கழுவுவதும் நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்த எதிர்மறை ஆற்றலையும் விரட்டும். மேலும், இது உங்கள் மன அழுத்தத்திற்கும் குழப்பமான மனதுக்கும் நிம்மதியை அளிக்கிறது.

சாப்பிட்ட பாத்திரங்களை மேசையிலேயே வைப்பது

சாப்பிட்ட பாத்திரங்களை மேசையிலேயே வைப்பது

பெரும்பாலும் மக்கள் சாப்பிட்ட பிறகு அவர்கள் சாப்பிட்ட தட்டை அப்படியே வைத்துவிட்டு எழும் பழக்கம் உள்ளது. இந்த பழக்கம் ஒருவருக்கு குறைந்தபட்ச முயற்சிகள் மற்றும் நிலையான வெற்றியைக் கண்டறிவதற்கான போராட்டத்தைக் குறிக்கிறது. நீங்கள் உணவை முடித்தபின் அந்த பகுதியை சுத்தம் செய்வது, அழுக்கு பாத்திரங்களை அப்புறப்படுத்துவது உட்பட, சனி மற்றும் சந்திர தோஷத்தைக் குறிக்கிறது.

MOST READ: இந்த விஷயம் தெரிஞ்சா இனிமே கறிவேப்பிலைய தெரியாம கூட தூக்கி எறியமாட்டிங்க...!

விருந்தினருக்கு குளிர்ந்த நீர் குடிப்பது

விருந்தினருக்கு குளிர்ந்த நீர் குடிப்பது

விருந்தினர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழையும் போது, அவர்கள் உங்கள் ஆற்றல் மண்டலத்திற்குள் குறுக்கிடுகிறார்கள். உங்கள் விருந்தினர்களுக்கு குளிர்ந்த நீரை வழங்குவது அவர்களின் உட்புற வெப்பத்தை அமைதிப்படுத்துவதாக பண்டைய முனிவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பழக்கம் உங்கள் பிறப்பு விளக்கப்படத்தில் ராகு தோஷ் மற்றும் கால்சர்ப் தோஷத்தையும் குறிக்கிறது.

தினமும் பூஜையறையை சுத்தம் செய்வது

தினமும் பூஜையறையை சுத்தம் செய்வது

உங்கள் பூஜை அறை அல்லது உங்கள் வீட்டில் நீங்கள் வணங்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும், ஏனெனில் இது நேர்மறை ஆற்றல்கள் பாயும் இடமாகும். சிலைகளை அழுக்காக வைத்திருப்பதோ அல்லது பூஜையறையை அழுக்கடைந்த நிலையில் வைத்திருப்பது உங்கள் பிறப்பு விளக்கப்படத்தின் கிரகங்களில் ஏற்றத்தாழ்வைத் தொடங்கும். இது உங்கள் குடும்ப வாழ்க்கையில் துரதிர்ஷ்டமான முடிவுகளை குறிக்கும்.

நீண்ட நேரம் விழித்திருப்பது

நீண்ட நேரம் விழித்திருப்பது

சந்திரன் வலுவாகவும் பிரகாசமாகவும் இருக்கும்போது, இரவில் தூங்குவது புத்திசாலித்தனம் என்று பண்டைய கலாச்சாரம் அறிவுறுத்துகிறது. நிலவொளி நம் மனதையும் உடலையும் அமைதிப்படுத்துகிறது, மேலும் தூக்கத்தின் போது நம் உணர்வுகள் அமைதியாக இருக்கும்போது அதை குணப்படுத்த அனுமதிக்கிறது. அதேசமயம், விழித்திருப்பது என்பது நமது புலன்களை வலுக்கட்டாயமாக வேலை செய்வதையும், சந்திரனை அதன் இயல்பான வழியில் செயல்படுவதைத் தவிர்ப்பதையும் குறிக்கும். அவ்வாறு செய்வது, வளர்ந்து வரும் மன அழுத்தம் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. சிலசமயம் இது ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

MOST READ: நீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த உணவுகள் புற்றுநோயுடன் நேரடி தொடர்புடையதாம்... உஷாரா சாப்பிடுங்க...!

பாதணிகளை சிதறடிப்பது

பாதணிகளை சிதறடிப்பது

யாராவது தங்கள் காலணிகளை வீட்டைச் சுற்றி சிதறடிக்கும் பழக்கம் இருந்தால், அது அவர்களுக்கு எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் குறிக்கிறது. உங்கள் பாதணிகளை அவமதிப்பது உங்கள் சமூக நிலையை பாதிக்கிறது என்று சாஸ்திரங்கள் விளக்குகின்றன.

தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடுவது

தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடுவது

தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடும் பழக்கம் உள்ளவர்களுக்கு காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஒருபோதும் பிரச்சினைகள் இருக்காது. மேலும், சாஸ்திரங்களின்படி, சூரியன், சந்திரன், வியாழன் மற்றும் புதன் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு இருப்பதால் இந்த பழக்கம் வாழ்க்கையிலிருந்து எந்த வகையான தோஷங்களையும் வெளியேற்றுகிறது.

படுக்கையை ஒழுங்காக வைக்காமல் இருப்பது

படுக்கையை ஒழுங்காக வைக்காமல் இருப்பது

படுக்கை விரிப்புகளை அடிக்கடி மாற்றாமல் இருப்பது, எழுந்தவுடன் படுக்கையை ஒழுங்கமைக்கமால் இருப்பது பெரும்பாலும் கவனம் தொடர்பான பிரச்சினைகளை அனுபவிப்பார்கள். அவர்கள் ஒழுக்கமற்ற வாழ்க்கை முறையை கொண்டுள்ளனர். சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் அவர்கள் விரும்புவதை ஒருபோதும் பெற மாட்டார்கள். இந்த பழக்கத்தை மாற்றுவது நிச்சயமாக நேரத்தை நல்லதாக மாற்றும்.

MOST READ: எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஆரோக்கியமான பழங்களை சாப்பிடாமல் இருப்பதுதான் நல்லதாம்...!

சத்தமாக பேசுவது

சத்தமாக பேசுவது

வழக்கமான தொனியை விட அதிக சத்தத்தில் பேசுபவர்கள் பெரும்பாலும் சனி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும், உறவுகளை நல்ல நிலையில் வைத்திருக்கவும், குடும்ப வாழ்க்கையில் நல்லுறவைப் பேணவும் போராடுவார்கள்.

பெரியவர்களை மதிக்காமல் நடப்பது

பெரியவர்களை மதிக்காமல் நடப்பது

குடும்பத்தின் பெரியவர்களை புறக்கணிப்பது, அவர்களின் இருப்பை அவமதிப்பது அல்லது அவர்களின் தேவைகளுக்கு காது கேளாதவர்கள் என யாராவது பழக்கத்தை கொண்டிருந்தால், அவர்களின் வீடு ஒருபோதும் முழுமையாக வளராது. இது நீண்ட காலத்திற்கு தொழில், சமூக நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையை பாதிக்க வழிவகுக்கிறது.

MOST READ: தொடையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைத்து அழகான தொடையை பெறுவதற்கான எளிய வழிகள்...!

எச்சில் துப்புவது

எச்சில் துப்புவது

வசிக்கும் இடங்கள், பணி செய்யுமிடம், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள் உண்மையில் அவர்களின் வெற்றி, சமூக மரியாதை மற்றும் செல்வத்தை தூக்கி எறிகிறார்கள். இந்த பழக்கம் லக்ஷ்மி தேவியின் கோபத்திற்கு வழிவகுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Future Predictions Based On Daily Habits

Check out the daily habits that tell how good or bad your future will be.
Desktop Bottom Promotion