For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது? வேறு பழம் இல்லை? காரணம் இதுதான்...

By Mahibala
|

ஆதாமை அந்த தோட்டத்தில் இருக்கிற ஆப்பிளை பறித்து நாம் சாப்பிடுவோம். இப்போது தான் நம்முடைய காதலுக்கான பலனை அடைய முடியும் எனத் தூண்டிவிட்டு, பின் ஆப்பிளைப் பறித்து இருவரும் சாப்பிட்டார்கள். அதன்பின் இருவருக்கும் கசமுசா நடந்தது என்று நாம் பல கதைகளில் படித்திருக்கிறோம். ஆனால் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?... ஆதியாகமத்தில் ஆப்பிள் என்ன பெயரே கிடையாது. அதில் பெரி என்ற பொதுவான பெயர் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Fun Facts You Never Knew About Apples

அப்படி பெரி என்னும் பெயரை நாம் ஏன் பொதுப்பெயராக இருக்கிற பேரிக்காய், அத்தி, திராட்சை, மாதுளை, மாம்பழம் ஆகியவற்றில் ஒன்றாக எடுத்துக் கொள்ளாமல், குறிப்பாக ஆப்பிள் என்று கதை கட்டிவிடப்பட்டது என்பதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அப்படி என்ன ஆப்பிளில் இருக்கிறது என்று ஆப்பிளைப் பற்றி இதுவரைக்கும் நீங்கள் அறிந்திருக்காத சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பைபிள் வசனம்

பைபிள் வசனம்

பைபிளில் 17 ஆம் சங்கீதத்தில் உன் கண்ணின் ஆப்பிள் (கருவிழி) என்றொரு வசனம் வருகிறது. தாவீது இறைவனிடம் பேசிகிற வசனம் அது. மற்றொரு ஆப்பிள் மையப்படுத்தப்பட்ட விவிலிய குறிப்பு: உங்கள் கண்ணின் ஆப்பிள் என்ற சொற்றொடர். அதாவது உங்களுடைய கண்ணின் ஆப்பிளாக என்னை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துவிடுங்கள் என்று. கண்ணுக்கு கருவிழி எவ்வளவு முக்கியம். அதன் வடிவம் வட்டம், ஆப்பிளும் வட்டம் என்பதால் அந்த இடத்தில் ஆப்பிள் என்பது ஒரு கவித்துவமான பொருளாகக் குறிப்பிடப்பட்டது.

MOST READ: நைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா? இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...

ஆப்பிள் தோளில் கணவர் பெயர் தெரியுமா?

ஆப்பிள் தோளில் கணவர் பெயர் தெரியுமா?

ஆப்பிள் பொதுவாக கருவுருதலுடன் நீண்ட காலமாகத் தொடர்புபடுத்தப்படுகிறது. பாரிஸ் தனது தங்க ஆப்பிள் டிராய் ஹெலனை வெல்லும் என்று நம்பினார். காலனித்துவ புதிய இங்கிலாந்தில் சுவாரஸ்யமான ஒரு ஆப்பிள் சீவும் போட்டி நடத்தப்படும். அதில் திருமணத்துக்குத் தகுதிவாய்ந்த இளம் பெண், ஆப்பிளை உடைக்காமல், முழு ஆப்பிளின் தோலையும் கத்தியால் இடையில் கட் ஆகாமல் சீவ வேண்டும். அப்படி சீவப்பட்ட ஆப்பிளின் தோலை தூக்கி வீசுவார்கள். அந்த தோல் என்ன வடிவத்தில் இருக்கிறது என்ற பார்ப்பார்கள். அது என்ன எழுத்து வடிவில் இருக்கிறதோ அதுதான் அந்த இளம்பெண் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆண்மகனின் பெயரின் முதல் எழுத்தாம்.

ஜானி ஆப்பிள் சீடும் டிஸ்னி படங்களும்

ஜானி ஆப்பிள் சீடும் டிஸ்னி படங்களும்

ப்ரூக்ளின் தாவரவியல் பூங்காவின் வரலாற்றில், "19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பென்சில்வேனியா, ஓஹியோ மற்றும் இந்தியானா வழியாக ஒரு சாக்லட் அழுக்கு சட்டை அணிந்து கொண்டு வெறுங்காலுடன் மலையேறி, நல்ல சிறந்த ஆப்பிள் விதைகளை பரப்பி, அதன்மூலம் பரலோக ராஜ்யத்தை புதிதாக ஜான் மிஷன் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் 1920 களில், அவரது மரங்கள் பெரும்பாலானவை எஃப்.பி.ஐ.யால் தடைசெய்யப்பட்டு வெட்டப்பட்டன. இதனால் மக்கள் ஸ்டிராங்கான சைடர்கள் தயாரிக்க ஆப்பிள்களைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என்று அந்த வரலாறு சொல்கிறது. நிஜத்தில் அப்படி இருந்தாலும் அவரது மரபு 1948 களில் வந்த டிஸ்னி திரைப்படத்தில் அழியாத சித்திரங்களாகவே இருக்கின்றன.

14 ஆயிரம் வகையா?

14 ஆயிரம் வகையா?

சிவப்பு ஆப்பிளை மட்டும் சாப்பிட்டு வந்த நாம், அதிழல் மாவு ஆப்பிள், பேரிக்கா ஆப்பிள், க்ரீன் ஆப்பிள் என சில வகைகள் கடைகளில் இருப்பதைப் பார்த்து தேடித் தேடி தேர்வு செய்கிறோம். ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சுற்றிலும் மட்டுமே கிட்டதட்ட 14 ஆயிரம் வகை ஆப்பிள்கள் கிட்டதட்ட 19 ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்ததாம். ஆனால் இப்போதோ 100 வகை ஆப்பிள்கள் மட்டுமே கமர்ஷியலாகப் பயிரப்படுகின்றனவாம்.

சைடர் முதல் டீ, காபி வரை

சைடர் முதல் டீ, காபி வரை

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் தான் அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் ஆப்பிள்கள் விளைந்து கிடந்தது. விளைகின்ற ஆப்பிளை வெறுமனே ஒயின், பீர் தயாரிக்க மட்டுமல்ல, அதிலிருந்து எடுக்கப்பட்ட சைடர் அந்த மக்களில், ஏன் கிராமப்புறங்களில் கூட டீ, காபி, ஜூஸ் மட்டுமல்ல, சாதாரண தண்ணீர்க்கு பதிலாகவும் கூட இந்த சைடர் பருகி வந்திருக்கிறார்கள் என்று வரலாற்று ஆசிரியர் ஒருவர் பாட்டனி ஆஃப் டிசையர் என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

MOST READ: வெங்காயத்தாள் சாப்பிடலாமா கூடாதா?... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்?

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டு வந்தால், மருத்துவரைச் சந்திக்க வேண்டிய தேவையே இருக்காது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்த சொல் வெறும் சொல் அல்ல. அந்த சொல்லுக்குப் பின்னால் ஈயிரம் அர்த்தங்கள் உண்டு. ஒரு பெரிய ஆப்பிளில் சுமார் 115 கலோரிகளும் ஐந்து கிராம் அளவுக்கு ஃபைபரும் இருக்கிறது. அதோடு நம்முடைய குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் சமப்படுத்த உதவுகின்றது.

ஆப்பிளை சாப்பிடும்போது, தோலை சீவாதீர்கள். அதில்தான் ஆப்பிளின் ஆக்சிஜனேற்றிகளில் மூன்றில் இரண்டு பங்கு நார்ச்சத்து அந்த தோலில் தான் இருக்கிறது.

ஸ்னோ ஒயிட்

ஸ்னோ ஒயிட்

ஆப்பிள் விதைகளில் பழத்தின் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியான அமிக்டலின் என்ற கலவை உள்ளது. நீங்கள் ஆப்பிள் விதைகளை நசுக்கினால் அல்லது மென்று சாப்பிட்டால், அமிக்டாலின் ஹைட்ரஜன் சயனைடாக சிதைந்துவிடும், இது அதிக அளவுகளில் ஆபத்தானது. ஆனால் ஒரு வயதுவந்தவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த குறைந்தபட்சம் 160 ஆப்பிள் விதைகளை எடுக்கும்.

ஃபிரிட்ஜில் வைக்கலாமா?

ஃபிரிட்ஜில் வைக்கலாமா?

பொதுவாக மற்ற பழங்களைப் போல ஆப்பிளை நாம் பெரிதாக ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பதில்லை. ஏனென்றா்ல அது அவ்வளவு எளிதாகக் கெட்டுப் போவதில்லை என்பதால் வெளியில் மேஜை மீதே வைத்துவிடுவோம். ஆனால் அதை ரொம்ப நாளைக்கு வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் கட்டாயம் ஃபிரிட்ஜில் சேமித்து வையுங்கள். மாதக்கணக்கில் கூடு வைத்திருக்க முடியும்.

நிறம் மாறுதல்

நிறம் மாறுதல்

ஆப்பளை வெட்டிய பிறகு வேகமாக பிளைன் கலரில் நிறம் மாறிவிடும். அப்படி மாறுவதற்குக் காரணமாகிந நொதிக்கும் தன்மை உடலுக்கு மோசமானது அப்படி வெட்டி வைத்து சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அது அப்படியல்ல.

MOST READ: ராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...

ஆப்பிள் பிராண்டு

ஆப்பிள் பிராண்டு

மண்ணில் இருந்து இயற்கையாக விளையக்கூடிய ஒரு உணவுப்பொருள் எப்படி உலகின் பல முன்னிணி பிராண்டு நிறுவனங்களின் சிம்பிளாக உருமாறியது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்கள். அப்படி யோசித்திருந்தால் ஆப்பிளின் அற்புதம் பற்றி நமக்குத் தெரிந்திருக்குமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fun Facts You Never Knew About Apples

The book of Genesis does not explicitly say what fruit Eve persuaded Adam to share with her. The Hebrew Bible uses the generic term peri, which rabbinic scholars have said could be used to describe a fig, a grape, a pomegranate, an apricot, or even wheat.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more