Just In
- 2 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 4 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
- 5 hrs ago உங்க மூக்கு மேல கருப்பா சொரசொரன்னு இருக்கா? அப்ப தினமும் நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
- 8 hrs ago சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு சிறப்பா இருக்கப்போகுது...
Don't Miss
- Automobiles ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- News விஜய் பயணித்த கார் கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது.. ரொம்ப டேஞ்சரா இருக்கே.. என்ன நடந்தது
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Finance அடுத்த 5 ஆண்டில் லாபத்தை அள்ளித்தரும் 11 பங்குகள்.. ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் பரிந்துரை..!
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
Friendship Day Wishes: நண்பர்கள் தினத்துல உங்க ப்ரண்ஸ் கிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க... அப்புறம் பிரச்சனைதான்.!
பெற்றோரிடமும் துணையுடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாததையும் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும். வேறு எந்த உறவுகளுக்கும் இல்லாத சிறப்பம்சமே நம் நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான்.
'உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு', 'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்று நட்புக்கு இலக்கணமாகத் திகழும் நண்பர்களைப் போற்றும் சிறந்த நாள் நண்பர்கள் தினம். ஆண்டுதோறும் நண்பர்களைப் போற்றும் விதமாக ஆகஸ்ட் மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இரத்தப் பந்தங்களை விட நமக்காக துடிக்கும் ஓர் உறவு நண்பன். பெற்றோரிடமும் துணையுடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாததையும் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும்.
வேறு எந்த உறவுகளுக்கும் இல்லாத சிறப்பம்சமே நம் நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான். நண்பர்கள் எப்போதுமே அற்புதமானவர்கள்தான். அப்படியான நம் நண்பர்களுக்கு 'நண்பர்கள் தினம்' அன்று வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளாகவோ, வாழ்த்து செய்திகளாகவோ பகிர்ந்துக் கொள்ளக்கூடிய சிறந்த வாழ்த்துகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
வாழ்த்து 1
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 2
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 3
இவ்வுலகில் இரத்த பந்தம் இல்லாமல் நமக்காக துடிக்கும் ஒரே உறவு நண்பர்கள்தான். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 4
சாதி, மதம், மொழி, இனம், பாலினம் போன்ற எந்த வேறுபாடும் காட்டாமல் பழகும் நண்பர்கள் இவ்வுலகில் சிறந்தவர்கள். நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 5
உண்மையான நட்பை விட மதிப்புமிக்கதாக இந்த பூமியில் எதுவும் இல்லை. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 6
நல்ல நண்பர்கள் கிடைப்பது நமக்கு கிடைத்த வரம். வரமான என் நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 7
ஆயிரம் பேர் இருந்தாலும் நமக்கு தக்க சமயத்தில் தோள் கொடுப்பது நண்பன் தானே... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 8
வாழ்க்கை முழுவதும் இந்த பந்தம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது நண்பர்கள் மட்டுமே! நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 9
உங்கள் தவறை நியாயப்படுத்தும் நண்பனை விட சுட்டிக்காட்டும் நண்பனே சிறந்தவர். நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 10
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வாழ்த்து 11
எதிர்பார்ப்பின்றி
காரணமின்றி நாம் செய்யும் எதுவும்
நண்பர்களுக்கு மட்டுமே!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!