For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019-நண்பர்கள் தினம், ஞாபகங்கள் தாலாட்டும் 'நட்புனா என்னனு தெரியுமா' என் நண்பனுக்காக

|

நண்பர்களுடன் எப்போதும் இருப்பவர்களுக்கு தினமும் நண்பர்கள் தினம் தான். இருப்பினும் நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி அன்று நண்பர்கள் தினம்.

Friendship Day

நட்பு என்பது சாதி, மதம், பேதங்களை கடந்து வந்த ஒன்று. இந்த நட்புக்கு ஆண், பெண் தெரியாது. இரத்தத்தையும், பணத்தையும் பார்க்கத் தெரியாது. சொந்தங்களுக்கு கொடுக்கும் மதிப்பை விட நட்புக்கு கிடைக்கும் மதிப்பு மிக பெரியது. நட்பு என்பது நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ளும் ஒரு உறவாகும். இப்படிப்பட்ட நட்பு உங்களுக்கும் கிடைத்து இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்பு தினம்

நட்பு தினம்

முதன் முதலில் யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ், 1935 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை அளித்து தேசிய நட்பு தினமாக அறிவித்தது. பின்னர் அன்று முதல் தேசிய நண்பர்கள் தினம் வருடத்தொரும் கொண்டாடப்பட்டு வருகிறது.

MOST READ: மொபைல் அதிகமா யூஸ் பண்ணதால வெறிபிடித்து சுவரில் போய் முட்டிக்கொள்ளும் இளைஞன்...

நட்புனா என்னனு தெரியுமா

நட்புனா என்னனு தெரியுமா

"நட்புனா என்னனு தெரியுமா" இந்த டயலாக் நம்ம நட்புக்கிட்ட சொல்லியே பல விஷயங்களை சாதிச்சு இருப்போம். "தேவைப்படும் நண்பன் உண்மையில் ஒரு நண்பன்" அதாவது இப்போது சோசியல் மீடியாக்கள் வளர்ந்து விட்ட நிலையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் மோசமான நிலையிலும் கஷ்ட காலத்திலும் துணை நிற்க உண்மையாக ஒரு நண்பனாவது இருக்க வேண்டும் என்பது தான் இந்த பழமொழி. நட்பின் அருமையை அக்காலத்திலேயே புரிந்த திருவள்ளுவர் தனது திருக்குறளில் நட்புக்கென்றே ஒரு அதிகாரத்தை படைத்ததுள்ளார்.

நமது வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் நம்முடைய சில பிரச்சனைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் நாம் நண்பர்களிடம் அவற்றை கூற முடியும். எத்தகைய சோகமா இருந்தாலும் நமது நண்பர்களை பார்த்ததும் அத்தனை சோகமும் மறந்து விடும். நீங்க நல்ல இருக்குறது பார்த்து சந்தோஷம் படுறதும் நட்பு தான். கஷ்டத்துல இருக்குற அப்போ முதலில் ஓடி வந்து உதவி செய்றதும் நட்பு தான். காசு இல்லாத அப்போ சோறு வாங்கி தருவதும் நட்பு தான். காசு இருக்க அப்போ அத எடுத்துட்டு போறதும் நட்பு தான். உங்கள கலாய்க்கிறதும் நட்பு தான், மத்தவர்கள் முன்னாடி விட்டு குடுக்காததும் நட்பு தான்.

நட்பில் நாம்

நட்பில் நாம்

நட்பு என்பது அறியாத வயதில் பள்ளியில் தொடங்கி கல்லூரி, அலுவலகம் மற்றும் வெளி உலகம் முதல் தற்போது சோஷியல் மீடியாக்கள் வரை வளர்ந்து வருகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி நட்பு அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவம் தான். வெகு நாட்கள் கழித்து பள்ளி நட்பை சந்திக்கப் போறோம் என்றால் அதை விட மகிழ்ச்சி ஏதுமில்லை. அறியாத வயதில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகளும், சேட்டைகளும் விலைமதிப்பு அற்றது. இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் விளையாட்டுகளும் சேட்டைகளும் மறைந்து விட்டன. ஆனால், இதுயெல்லாம் நாம் தலைமுறைக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷ வரலாறு ஆகும்.

MOST READ: 24 மணிநேரம் வேலை செஞ்சாலும் கையில காசு நிக்கவே மாட்டேங்குதா? அது ஏன்னு காரணம் தெரியுமா?

கல்லூரி நட்பு

கல்லூரி நட்பு

யாரும் அறியாமல் சென்றேன்

யாரென்று உன்னை பார்த்தேன்

என்னை அறிமுகப்படுத்தி

உன்னை அறிந்துக் கொண்டேன்

உணவுகளை பரிமாறி

ஊட்டியும் கொண்டோம்

கேலி கிண்டல்களில்

மூழ்கி விளையாடினோம்

வாசலில் நின்றாலும்

தோள்தட்டி சிரித்தோம்

கஷ்டங்களை உன்னைக் கண்ட

நொடியில் மறக்கச் செய்தாய்

நீ தோல்வியைக் கண்டபோதும்

என் வெற்றியில் மகிழ்ந்தாய்

பிரிவினை என்ற புயல் வந்தும்

இன்றும் தொடருகிறது

எங்கள் "நட்பு "

என்றும் தொடர

"நண்பர்கள் தின வாழ்த்துக்கள்"

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: friendship relationship
English summary

Friendship Day Celebration 2019 - Date, History and Importance

Friendship Day is celebrated on the first sunday of August. This year in 2019, it is celebrated on 4 August. As we all know that a “Friend in need is a friend indeed” which means that whenever you are in need, a friend is there for you. Let us read more about Friendship Day, its history, how it is celebrated and significance.
Story first published: Saturday, August 3, 2019, 16:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more