Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
நண்பர்கள் தினம் 2019: இதெல்லாம் பிரண்ட்ஷிப் பத்தின சூப்பர்ஹிட் பாடல்கள்... உங்களுக்கு பிடிக்குமா?
நட்புக்கு உதாரணமாக இருக்கின்ற சில சூப்பர் திரைப்படங்கள் பற்றித் தான் இந்த தொகுப்பில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை தான் நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாடித் தீர்க்க வேண்டிய விஷயம் இல்லை. அதனால் அவ்வப்போது திரைப்படங்கள் மற்ற விஷயங்களில் திரும்பத் திரும்ப பார்க்கும் போது, நம்முடைய நண்பர்கள் நமக்கு நினைவுக் வருகிறார்கள். நாம் செய்த விஷயங்கள் மனதுக்குள் வந்து போகும்.

காதலும் நட்பும் உண்மையாகவே திரைப்படங்களில் மற்ற உணர்ச்சிகளை விட எப்போதும் மேலோங்கியே இருப்பதற்குக் காரணம் அந்த உறவுகளின் உண்மைத்தன்மை தான். அதனால் தான் காதல் கதைகளும் நட்பு பற்றிய விஷயங்களும் காலகாலத்திற்கும் நம் மனதில் நச்சென்று அப்படியே பதிந்துவிடுகின்றன.
அதில் நட்பைப் பற்றிய சூப்பரான நட்பைப் பற்றிய சூப்பர்ஹிட் பாடல்கள் பற்றிய தொகுப்பைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முஸ்தபா முஸ்தபா
ஆண் நண்பர்கள் என்றாலும் ஃபேர்வெல் டே என்றாலும் முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது இந்த பாடல் தான். முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒரி முஸ்தபா என்று சொல்லும்போதே நண்பர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையும் உற்சாகமும் உண்டாகும். கல்லூரி நாட்கள் என்றாலே ஆண்டு விழா பாட்டாக இந்த பாட்டு மாறிவிட்டது.

நண்பனை பார்த்த தேதி
நண்பனைப் பார்த்த தேதி மட்டும் ஒட்டிக் கொண்டதென் நியாபகத்தில்... என்ற பாடலும் அழகான நட்பை கல்லூரி இறுதி நாட்களில் பாடப்படுகிற பாடல் தான் இந்த பாடல். நினைத்தாலே இனிக்கும் படத்தில் ப்ருத்விராஜ் பாடும் பாடல்.

பசுமை நிறைந்த நினைவுகள்
பசுமை நினைந்த நினைவுகளே! பாடிப் பறந்த பறவைகளே பறந்து செல்கின்றோம் என்ற பாடல் தான் நம்முடைய அப்பா, தாத்தாக்களின் நட்புப் பாடல். எதற்கெடுத்தாலும் அந்த பாடல் தான். ஆனால் 90 களுக்குப் பிறகு, நட்புக்கான பாடல்கள் ஏராளம்.

காட்டுக்குயிலே மனசுக்குயிலே
நட்புன்னாலே அது தளபதி படம் தான் என்று சொல்லுகின்ற பொழுது, அதில் நட்புக்கான பாடல் என்று ஒன்று இல்லாமலா போய்விடும். ஆம். அதில் உள்ள காட்டுக்குயிலே மனசுக்குயிலே என்ற பாடல் எப்போது கேட்டாலும் நம்மையும் நம்முடைய உடலையும் ஒரு குத்தாட்டம் போட வைக்கும்.

மனசே மனசே மனசில் பாரம்
மனசே மனசே மனசில் பாரம் என்ற பாடலும் கல்லூரி கால நட்பைப் பற்றிய நெகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல் தான் இது. இந்த பாடல் ஹீகாந்த், சோனியா அகர்வால் இருவரும் கல்லூரி ஆண்டுவிழாவில் பாடலாக அமைந்திருக்கும்.

என் ஃபிரண்ட போல யாரு மச்சான்
என் ஃபிரண்ட போல யாரு மச்சான் பாட்டு சமீபத்திய இளைஞர்கள் வாயில் முணுமுணுக்க முடியாமல் இருக்க முடியாது. அளைய தளபதி விஜய், ஹகாந்த, ஜீவா ஆகியோர் இணைந்து நடித்த, 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் வெர்சன் தான் இந்த நண்பன் படம். இந்த தலைமுறை இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் சூப்பர் ஹிட் பாடல் இது.



Click it and Unblock the Notifications