For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவர் ஜெட் வேகத்தில் செல்லும் ஹோவர்பேர்டை கண்டுபிடிச்சிருக்காரு... எவ்ளோ வேகம் தெரியுமா?

ஹோவர்போர்டில் மத்திய தரைக்கடலை கடந்த பிரஞ்சைக் கண்டுபிடித்த பிரான்கி சபாதா என்பவர் பற்றித் தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

|

பிரெஞ்சு கண்டுபிடிப்பாளரான பிரான்கி சபாதா என்பவர் கடந்த மாதம் பல தோல்விகளுக்கு பிறகு முதல் முறையாக ஜெட் வேகத்தில் இயங்கும் ஹோவர்போர்டை கண்டுபிடித்துள்ளார்.

Hoverboard

அதுமட்டுமல்லாமல் அந்த போர்டில் மத்திய தரைக்கடலை கடந்து ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடல் வழி பயணம்

கடல் வழி பயணம்

அவர் கண்டறிந்த அந்த விமான பலகையின் மூலம் வடக்கு கடற்கரையில் உள்ள சங்கட்டேவிலிருந்து இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் டோவரில் உள்ள செயின்ட் மார்கரெட் விரிகுடா வரை பறந்தே சென்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். 35 கி. மீ தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் கடந்ததோடு மட்டுமில்லாமல் மணிக்கு சராசரியாக 140 கி. மீ வேகத்தில் 15 - 20 மீ உயர்த்தில் பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: மும்பை-புணேவுக்கு வெறும் 30 நிமிடத்துல போற ஹைப்பர்லூப் ரயில் திட்டம்... இதுதாங்க ஃபர்ஸ்ட்

சாதனை

சாதனை

அதிகாலையிலேயே ஜபாடா சாதனைக்கு தயாராகி விட்டார். மூன்று ஹெலிகாப்டர் மூலம் சென்று வளைகுடாவில் தண்ணீருக்கு நடுவே தன் பயணத்தை தொடங்கலானார். அவரது சாதனையை கண்டு களிக்க அங்கே ஏராளமான மக்களும் டஜன் கணக்கில் பத்திரிக்கைக்காரர்களும், பார்வையாளர்களும் காத்திருந்தனர்.

MOST READ: கலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? எத்தனைக்கு மேல் சாப்பிடக்கூடாது?

சாதனைக்கு ஊனம் ஒரு குறையல்ல

சாதனைக்கு ஊனம் ஒரு குறையல்ல

அவர் தனது இரண்டு விரல்களை இழந்த போதிலும், கடந்த மூன்று வருடங்களாக விடாமுயற்சியுடன் இந்த ஹோவர்போர்டை உருவாக்கி வந்துள்ளார். ஏப்ரல் 2016 இல் மத்தியதரைக் கடலில் 2.2 கி.மீ பயணம் கொண்ட தொலைதூர ஹோவர் போர்டு விமானத்திற்கான கின்னஸ் சாதனையை அவர் ஏற்கனவே தட்டிச் சென்றுள்ளார்.

இதுவரை மத்திய தரைக்கடலை பலூன், மோனோஸ்கி, கோண்டோலா, ஹோவர்க்ராப்ட், கிளைடர், பாராசூட் மற்றும் பெடலோ கொண்டு தான் கடக்கப்பட்டது. ஹோவர்போர்டை கொண்டு பறப்பது இதுவே முதல் முறை.

இதுபோன்ற சாதனை மனிதர்களுக்கு நாம் உறுதுணையாக இருந்தாலே போதும் உலகம் வளர்ச்சி பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

In A First, French Inventor Crosses English Channel On A Hoverboard

French inventor Franky Zapata succeeded in crossing the English Channel on a jet-powered hoverboard for the first time, after a failed attempt last month.
Desktop Bottom Promotion