Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா? ஏன் ?எப்போது கொடுக்கலாம்?
குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் பெற்றோர்கள் கண்டிப்பாக அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குழந்தைகள் பிறந்து முதல் ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்ன உணவுகள் க
குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் பெற்றோர்கள் கண்டிப்பாக அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குழந்தைகள் பிறந்து முதல் ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்ன உணவுகள் கொடுக்கக் கூடாது என்பதைப் பெற்றோர்கள் அறிந்து இருக்க வேண்டும். குழந்தைகளின் இந்த பருவம் அவர்கள் வளர்வதற்கான பருவம் இந்த நேரத்தில் அவர்களுக்கு எந்தெந்த உணவுகளை எல்லாம் கொடுக்கக் கூடாது என்பதைத் தெரிந்து அவற்றை எல்லாம் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.

குழந்தைகள் மிகவும் மென்மையான செரிமான அமைப்புகளைக் கொண்டுள்ளார்கள் எனவே அவர்களுக்குப் பொருந்தாத உணவுகள் மற்றும் சேராத உணவுகளைக் கொடுக்கும் போது குழந்தைகளின் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி ஒவ்வாமை மற்றும் உடல் நலக் கோளாறுகளைத் தூண்டும். எனவே எந்த உணவுகளை எல்லாம் கொடுக்கக் கூடாது என்று பார்ப்போம்.

தேன்
தேனில் க்ளோஸ்ட்ரிடியம் போட்லினம் என்ற பாக்டீரியாக்கள் உள்ளதால் இவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து மலச்சிக்கல் மற்றும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே ஒரு வயதிற்குக் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்குத் தேனைக் கொடுக்கக் கூடாது.

தானியங்கள்
தானியங்கள் குழந்தைகளின் உடலுக்கு நன்மை என்று எண்ணி அவர்களுக்கு எல்லா வகையான தானியங்களையும் கொடுக்க முயல வேண்டாம். சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்கள் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் மெக்னீசியம், ஃபைபர், கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. ஆனால் முழு தானியங்களில் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பால்
ஒரு ஆய்வின்படி பசுவின் பால் குழந்தைகளுக்குக் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று கூறுகின்றனர். அதாவது பசுவின் பாலில் குறைந்த அளவு மட்டுமே இரும்புச்சத்து இருப்பதால் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான இருபுச்சத்தினை பசும் பாலில் இருந்து பெற முடியாது. அதனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்தது. குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்திற்கு பின்பு பசும் பால் கொடுக்கலாம்.

பழச்சாறுகள்
குழந்தைகள் பிறந்து 6 மாதங்களுக்கு அவர்களுக்குப் பழச்சாறுகளைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் பழச்சாறுகளில் 6 மாத குழந்தைகளுக்குத் தேவையான எந்த ஊட்டச்சத்தும் இல்லை. எனவே அதனை விட அதிக சத்துக்கள் நிறைந்த தாய்ப்பாலைக் கொடுக்கலாம்.

சாக்லேட்
குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு வருடத்திற்கு சாக்லேட்களை கொடுக்கக் கூடாது. ஏனெனில் சாக்லெட்களில் பால்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் குழந்தைக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு ஒரு வயது முடியும் வரை பால் அடங்கிய உணவுகளைக் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.

நட்ஸ்
நட்ஸ் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை அழற்சியை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது எனவே குழந்தைகளுக்குக் கடலை மற்றும் கடலை வெண்ணெய் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. மேலும் குழந்தைகளுக்கு முட்டை ஒவ்வாமை மற்றும் கடுமையான அரிக்கும் தோலழற்சி போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

கடல் உணவு
குழந்தைகளுக்குச் சிலவகையான குறிப்பிட்ட மீன்களாகிய மெர்கூரி, ஷெல் பிஷ் போன்றவற்றைக் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக சால்மன், டிலாபியா, டூனா, மற்றும் கேட்ஃபிஷ் போன்ற மீன்களைக் கொடுக்கலாம்.

முட்டை
குழந்தைகள் பிறந்து கண்டிப்பாக ஒரு வருடத்திற்கு முட்டை கொடுப்பதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதாவது 100யி ல் 2 சதவீத குழந்தைகளுக்கு முட்டையினால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே ஒரு வயது முடியும் வரை குழந்தைகளுக்கு முட்டைகளைத் தவிர்ப்பதே நல்லது.

இறைச்சி
குழந்தைகளின் செரிமான மண்டலம் மிகவும் மென்மையானதாக இருப்பதால் அவர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாது. மேலும் இறைச்சிகளில் அதிக அளவில் கொழுப்புகள் உள்ள காரணத்தினாலும் இறைச்சிகளை குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

பெர்ரி
பெர்ரி அதாவது ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி மற்றும் பிற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மையைக் கொண்டுள்ளதால் குழந்தைகளில் வயிற்றைப் பாதிக்கும் ஆதலால் பெர்ரி போன்றவற்றைத் தவிருங்கள்.



Click it and Unblock the Notifications