Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த படத்துல முதலில் உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
கீழே ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படம் 7 விலங்குகளைக் கொண்டுள்ளது. இந்த படத்தைப் பார்த்ததும், முதலில் உங்கள் பார்வைக்கு எந்த விலங்கு தென்படுகிறதோ, அது உங்களின் மறைக்கப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது.
தற்போது ஆப்டிக்கல் இல்யூஷன் டெஸ்ட் இணையத்தில் வைரலாக உள்ளது. எப்போதுமே ஒருவருக்கு தங்களைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்தும் விஷயங்களை செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன் டெஸ்ட். இதில் ஒரு படம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு படத்தில் பல வகையான உருவங்கள் இருக்கும். இந்த படத்தைப் பார்த்ததும் முதலில் எந்த உருவம் தெரிகிறதோ, அது ஒருவரின் மறைக்கப்பட்ட குணாதியங்களை வெளிப்படுத்தும்.

அந்த வகையில் கீழே ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படம் 7 விலங்குகளைக் கொண்டுள்ளது. இந்த படத்தைப் பார்த்ததும், முதலில் உங்கள் பார்வைக்கு எந்த விலங்கு தென்படுகிறதோ, அது உங்களின் மறைக்கப்பட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது.

ஓநாய்
ஓநாய் பாதுகாப்பைக் குறிக்கிறது. இந்த விலங்கை முதலில் பார்ப்பவர்கள், விசுவாசத்தையும், பக்தியையும் அடிக்கடி மறைப்பவர்களாக இருப்பர். மேலும் மற்றவர்களுடன் மிக விரைவில் ஒன்றிணையக் கூடியவர்களாக இருப்பர். இருப்பினும், எப்போதும் இவர்கள் தங்களின் மென்மையான தன்மையை மறைத்து வைத்திருப்பார்கள்.

புலி
இந்த விலங்கை பார்த்தவர்கள், வாழ்வில் பெரிய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். இவர்கள் அவர்கள் நினைப்பதை விட வலிமையானவர்கள். இதை இவர்கள் உணர்ந்தாக வேண்டும். எனவே அடுத்த முறை பலவீனமாக உணர்ந்தால், உங்களின் ஆன்மா விலங்கான புலியை நினைவில் கொள்ளுங்கள்.

குட்டி ஆந்தை
குட்டி ஆந்தையை முதலில் கண்டவர்கள், தங்களின் உண்மையான ஆர்வத்தை மறைத்து வைத்திருப்பார்கள். இவர்கள் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புத்திசாலி. மற்றவர்கள் இவர்களை வேடிக்கையானவராக மற்றும் கத்தி பேசுபவராக நினைக்கலாம். ஆனால் இவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

நாய்க்குட்டி
நீங்கள் நாய்க்குட்டியை முதலில் கண்டிருந்தால், நீங்கள் நன்கு காதலிக்கக்கூடியவர் என்பதை மறைத்து வைத்திருக்கிறீர்கள். மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்வது கடினம் என்று நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் வெறும் அன்பு மட்டும் தான்.

நாகப்பாம்பு
இந்த விலங்கைக் கண்டவர்களிடம் உள்ள ரகசியமான குணம் என்றால், அது உயர்ந்த நம்பிக்கை மற்றும் சுய மதிப்பு தான். ஆனால் இது தெரியாமல், இவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்கள் மீதான நம்பிக்கையில் சந்தேகம் கொண்டிருப்பார்கள். இனிமேல் அவ்வாறு இல்லாமல், உங்கள் மீது நம்பிக்கை கொண்டு, உங்களுக்கான சிறந்த வழக்கறிஞராக இருக்க முயலுங்கள்.

சிங்கம்
சிங்கத்தைக் கண்டவர்கள் தங்களின் கோப உணர்வை மறைத்து வைத்திருப்பார்கள். சிங்கங்கள் வலிமையானவை, ஆபத்தானவை மற்றும் இதயங்களை கர்ஜிக்கும் தன்மை கொண்டவை. பலரும் கோபத்தை கெட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் கோபம் கொள்வது எப்போதும் கெட்டதாக இருக்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவரும் எப்போதும் தங்களின் உண்மையான குணத்தை மறைத்து இருக்க வேண்டியதில்லை. வெளிக்காட்ட வேண்டிய இடத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

வௌவால்
வெளவால்கள் மிகவும் இருண்ட சூழ்நிலைகளிலும் கிட்டத்தட்ட குருடாக பறக்கக்கூடியது. வௌவால் எப்படி மறைந்து இருந்து சுற்றி நடக்கும் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறதோ, அதேப் போல் இந்த விலங்கை முதலில் கண்டவர்கள் தங்களின் புலன்களைப் பயன்படுத்தி சுற்றியிருப்பவர்களை அறிந்திருப்பார்கள்.



Click it and Unblock the Notifications