2023-ல் உங்களோட நிதி நிலை எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க..

ஒருவருக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்குமா இல்லையா, நிதி நிலைமை சிறப்பாக இருக்குமா என்பதையும் கிரகங்களின் இயக்கம் கூறும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலை எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

2023 புத்தாண்டில் நுழைய இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. புதிய கனவுகள் மற்றும் புதிய இலக்குகளுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம். பொதுவாக ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டில் வேலை, வியாபாரம், செல்வம், கல்வி, காதல், ஆரோக்கியம் போன்றவை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைவருமே ஆவலாக இருப்போம். இந்த கேள்விகளுக்கான பதில் ஜோதிடத்தில் உள்ளது.

Financial Horoscope 2023 Predictions For All 12 Zodiac Signs In Tamil

ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகளைக் கொண்டு 2023 ஆம் ஆண்டில் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என கணித்து கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவருக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்குமா இல்லையா, நிதி நிலைமை சிறப்பாக இருக்குமா என்பதையும் கிரகங்களின் இயக்கம் கூறும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலை எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

2023-ல் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் இருக்கும் மற்றும் நிதியில் நிலைத்தன்மை இருக்கும். இருப்பினும், உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். 11 ஆவது வீட்டில் சனி இருப்பதால், வருமானத்தை அதிகரிக்கும்.12 ஆவது வீட்டில் குரு ஏப்ரல் மாதம் வரை இருப்பதால், நிறைய செலவுகளை சந்திக்க வைப்பார். தொண்டு, தானம் போன்ற பணிகளில் ஈடுபடுவீர்கள். அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ராகு 12 ஆவது வீட்டிற்கு செல்லும் போது தேவையற்ற செலவுகள் ஏற்படும். இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த செலவுகள் நிதி வாழ்க்கையை சீர்குலைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

2023-ல் ரிஷப ராசிக்காரர்கள் நிதி நிலையில் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பார்கள். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், நிதி நிலைமை வலுவாக இருக்கும். பல்வேறு வழிகளில் நிதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை செலவுகள் உயரும். சுப காரியங்களுக்காக நிறைய செலவுகளை செய்வீர்கள். தேவையற்ற செலவுகள் நிறைய இருக்கும். அக்டோபர் மற்றும் டிசம்பருக்கு இடையில், செலவுகள் குறையத் தொடங்கும் மற்றும் உங்கள் வருமானம் உயரத் தொடங்கும்.

மிதுனம்

மிதுனம்

2023-ல் மிதுன ராசிக்காரர்கள் நல்ல நிதி நிலையைப் பெறுவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் 8 ஆவது வீட்டில் சனி, சுக்கிரன் இணைவதால், நிதி நிதி பலவீனமாக இருக்கும். செவ்வாய் 12 ஆவது வீட்டில் வக்ரமாக இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். ஆனால் சனி ஜனவரி மாதம் 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சூழ்நிலையில் மாற்றம் இருக்கும். ஏப்ரல் மாதத்தில் குரு 11 ஆவது வீட்டிற்கு செல்லும் போது, பொருளாதார ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆண்டின் நடுப்பகுதியில் நீங்கள் சில பெரிய நிதி இலாபங்களைப் பெறுவீர்கள். அரசு துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. செப்டம்பர் முதல் நவம்பர் வரை, நீங்கள் சில நிதிச் சேமிப்புகளைச் செய்ய முடியும் மற்றும் டிசம்பர் மாதம் நல்ல நிதிப் பலன்களைப் பெறுவீர்கள்.

கடகம்

கடகம்

2023-ல் கடக ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதே வேளையில் எப்போதாவது வெற்றியை அனுபவிப்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் 11 ஆவது வீட்டில் வக்ரமாக இருப்பதால் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும். குரு பகவான் உங்கள் நிதி நிலையை மேம்படுத்த செய்வார் மற்றும் அதிர்ஷ்டத்தை ஊக்குவிப்பார். ஏப்ரல் வரை நிதி நிலைமை சாதகமாக இருக்கும். முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவை நிதி இழப்பிற்கு வழிவகுக்கும். மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் சற்று பதற்றம் அதிகரிக்கும். பணம் சம்பந்தமான கவலைகள் அவ்வப்போது வந்து போகும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் சில நிதி சிக்கல்கள் இருப்பதால், செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீட்டிற்கான செலவுகள் அதிகரிக்கும். ஆனால் டிசம்பரில் வருமானம் கணிசமாக உயரும்.

சிம்மம்

சிம்மம்

2023 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதியைப் பொறுத்தவரை வெற்றிகரமக இருக்கும். சூரியனின் அருளால் ஆண்டின் தொடக்கம் அற்புதமாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும். சூரியனின் நிலையால் உங்கள் முயற்சிகள் குறிப்பிடத்தக்க நிதி வெகுமதிகளை வழங்கும். 7 ஆவது வீட்டில் சனி இருப்பதால், வணிக லாபம் அதிகரிக்கும். குரு 9 ஆவது வீட்டிற்கு செல்லும் போது, முன்னேற்றங்களைக் காணத் தொடங்குவீர்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அக்டோபரில் ராகு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது, நீங்கள் பணத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். இந்த காலத்தில் நீங்கள் யோசிக்காமல் ஏதேனும் முதலீடு செய்தால் உங்களுக்கு பண இழப்பு ஏற்படலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆண்டின் முதல் பாதி சாதகமாக இருக்கும். ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரை நிலைமைகள் நன்றாக இருக்கும், இந்த நேரத்தில் உங்கள் நிதி விஷயங்களில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யலாம். ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். குரு ராகுவுடன் 8 ஆவது வீட்டில் இருக்கும் போது, அக்டோபர் இறுதி வரையிலான நேரம் சவாலாக இருக்கும். நிதி விஷயங்களில் சிக்கலைச் சந்திப்பீர்கள். பொருளாதார ரீதியாக பலவீனமாக உணரலாம். ஆனால் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நவம்பர் - டிசம்பர் மாதங்கள் உங்களுக்கு நல்ல வெற்றியைக் கொடுக்கும் மற்றும் நிதி விஷயங்களில் லாபம் பெறுவீர்கள்.

துலாம்

துலாம்

2023-ல் துலாம் ராசிக்காரர்களுக்கு நிதியைப் பொறுத்தவரை வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் நிதி நிலையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பார். கிரகங்களின் நிலையால் உங்கள் நிதி நிலைமை சீராக இருக்கும். ஆனால் அதை அப்படியே வைத்திருக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அக்டோபர் மாத இறுதியில் ராகு உங்கள் ஆறாவது வீட்டில் நுழையும் போது உங்கள் செலவுகள் எதிர்பாராத விதமாக உயரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் நிதி நிலைமை மோசமடையலாம் மற்றும் நீங்கள் நிதி சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் 2023-ல் நிதி நிலையை சமநிலையில் வைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது செலவுகள் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும். ஏப்ரலில் இருந்து குரு 12 ஆவது வீட்டைப் பார்ப்பதால் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நீங்கள் சற்று நிம்மதி அடைவீர்கள். இந்த ஆண்டில் கடினமாக உழைத்தால் நல்ல வருமானத்தால் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு

2023 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் உள்ள நிதி சிக்கல்களைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். ஒன்று அல்லது வேறு வழிகளில் பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாலும், பிப்ரவரி முதல் ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இருப்பிகும் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

மகரம்

மகரம்

2023-ல் மகர ராசிக்காரர்களின் நிதி நிலையைப் பற்றி கூற வேண்டுமானால், ஆண்டின் தொடக்கத்தில் நிதிச் செலவுகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஏனெனில் சூரியன்-புதன் 12 ஆவது வீட்டில் இருப்பதால் நிதி சமநிலையை பராமரிக்க முயற்சித்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அக்டோபர் 30 வரை ராகுவும் கேதுவும் முறையே 4 ஆவது மற்றும் 10 ஆவது வீட்டில் இருப்பதால் நிதிச் சமநிலை பாதிக்கப்படும். இதன் காரணமாக உங்களின் வேலையில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இந்த ஆண்டு நிதி ஏற்றத்தாழ்வுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் நிதி நிலையில் ஏற்ற இறக்கங்களைக் காண்பார்கள். ஜனவரியில் 12 ஆவது வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில் செலவு அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் 2 ஆவது வீட்டில் குரு இருப்பதால் நிதி நிலைமை சாதகமாக இருக்கும். சனி உங்கள் ராசியில் சஞ்சரித்தவுடன் நிலைமைகள் மேம்படும் மற்றும் உங்கள் நிதியை நீங்கள் சிறப்பாக நிர்வகிக்க முடியும். பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க விரும்பினால், அந்தத் துறையிலும் நீங்கள் நிறைய வெற்றியைக் காணலாம். ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் நிதி ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். ஆனால் 17 ஜனவரி 2023 அன்று சனி உங்கள் 12 ஆம் வீட்டில் நுழையும் போது செலவுகளுக்கான சூழ்நிலைகள் எழும். அத்தகைய சூழ்நிலையில் நிதி சமநிலையை பராமரிப்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் அவசியமான செலவுகள் அதிகம் இருக்கும். ஏப்ரல் இறுதி முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் நீங்கள் சரியாக திட்டமிட்டு செலவுகளை செய்ய வேண்டும். அதன் பிறகு நிலைமைகள் சாதகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion