செப்டம்பர் மாசம் இந்த ராசிக்காரங்களோட நிதி நிலை சூப்பரா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?

கிரக மாற்றங்களால் பல ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இப்போது செப்டம்பர் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலை மற்றும் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

செப்டம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளது. அதில் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கும், புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னியில் வக்ரமாகவும் மாறுகிறார். அதன் பின் செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்கிறார். அதற்கு முன் செப்டம்பர் 15 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் அஸ்தமிப்பார்.

Finance And Career Horoscope For September 2022 In Tamil

இப்படிப்பட்ட கிரக மாற்றங்களால் பல ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருப்பதோடு, இம்மாதத்தில் செய்யப்படும் முதலீடுகள் நன்மை பயப்பனவாக இருக்கும். இப்போது செப்டம்பர் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் நிதி நிலை மற்றும் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

பணிபுரியும் மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். வேலையில் நீங்கள் திட்டமிடும் அனைத்தும் நிறைவேறும். மாதத்தின் முதல் வாரத்தில் உங்களுக்கு வெற்றிப் பாதை திறக்கும். நிதி முன்னேற்றத்திற்கான விஷயங்கள் நடக்கும். இம்மாதத்தில் செய்யும் முதலீடுகள் வெற்றியைத் தரும். இம்மாதம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கும். இம்மாதத்தில் பயணங்களை மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் நிறைய உதவுவார்கள். நிதி ரீதியாக, இம்மாதம் சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாதத்தின் ஆரம்பத்தில் நிதியைப் பற்றிய நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இம்மாதத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை தள்ளிப் போடுவது நல்லது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் நிதியைப் பொறுத்தவரை, நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் நல்ல செயல்களால் உங்களைத் தேடி செல்வம் வரும். நல்ல வருமானம் கிடைக்கும். பயணம் மேற்கொள்வதனால் வெற்றி பெறுவீர்கள். மாத இறுதியில் திடீரென்று சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரத் தொடங்கும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் இருக்காது.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்காது. வேலையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் செலவுகளும் அதிகமாக இருக்கும். ஆனாலும், மாத இறுதியில் நிதி நிலைமையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் உங்களை தோற்கடிக்க முடியாது. நிதி ரீதியாக, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கடன் வாங்குவதையும், முதலீடுகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையை மாற்ற நினைத்தால், இம்மாதத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவார்கள். அதிக பணத்தை வேகமாக சம்பாதிக்க ஆசைப்பட்டால், பிரச்சனையை சந்திப்பீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் கலவையானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இம்மாதம் சாதகமற்றதாக இருக்கும். வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும். பல சவால்களை சந்திக்க நேரிடும். நிதியைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் நிறைய செலவுகளை செய்ய நேரிடும். இம்மாதத்தில் முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமான மாதமாக இருக்கும். பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்கள் பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் அதிக லாபம் கிடைக்கும். மாதத்தின் முதல் பாதியில் நல்ல லாபத்தை பெறுவார்கள். மாதத்தின் இரண்டாம் பாதியில் புதாதித்ய யோகத்தால் வருமானம் அதிகரிக்கும். நிதி ரீதியாக, சில நிதி சவால்களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறையால் சிரமப்படுவீர்கள். அதிகப்படியான செலவால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். ஆனால் வியாபாரம் செய்புவர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கு. வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றமும், எதிர்பார்த்த முடிவுகளும் கிடைக்கும். இம்மாதத்தில் திமிருடன் இருப்பதைத் தவிர்த்திருங்கள். இல்லாவிட்டால் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வேலையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், உங்கள் உத்திகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். அபரிமிதமான பண ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் கடின உழைப்பின் மூலம் தங்கள் வருமானத்தில் அதிகரிப்பைப் பெறலாம்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக செப்டம்பர் மாதம் கலவையானதாக இருக்கும். பணியிடத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள். சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் உற்பத்தித்திறன் குறையாமல் இருக்க வேண்டும். மாதத்தின் இரண்டாம் பாதியில் புதாதித்ய யோகத்தால் பணியிடத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடித்து, உங்கள் எல்லா உத்திகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தும் காலகட்டமாக இது இருக்கும். பணிபுரிபவர்கள் மற்றும் வணிகர்கள் இருவரும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் இந்த மாதத்தில் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் இருக்க வேண்டும். நிதி ரீதியாக இம்மாதம் சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள் வருமான உயர்வைப் பெறலாம். மாதத்தின் இரண்டாம் பகுதியில் வருமான ஆதாரங்கள் வளரும். புதாத்திய யோகத்தால் பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக செப்டம்பர் மாதத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் வேகமாக வளரும். மேலும் பணியிடத்தில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலையை மாற்ற விரும்பினால் அல்லது வேலை தொடர்பான முக்கியமான முடிவை எடுக்க விரும்பினால், அதற்கு இது நல்ல நேரமாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, நல்ல பண பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். இம்மாதத்தில் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, உங்கள் பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இது வங்கி இருப்பை மேம்படுத்த உதவும். இருப்பினும் அவ்வப்போது சில நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால் சேமிப்பினால் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது தொழில் ரீதியாக சாதகமான பலன்களைத் தரும். பணிபுரிபவர்களின் நிலை வலுபெறும். முன்னேற்றத்திற்கான நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். மொத்தத்தில் சிறு முயற்சியிலும் நல்ல பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, கலவையானதாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற அதிக பணத்தை செலவிடுவீர்கள். குடும்ப பொறுப்புக்களையும் நிறைவேற்ற அதிக பணத்தை செலவிடலாம். இதனால் மாதத்தின் இரண்டாம் பாதியில் பணப் பற்றாக்குறையால் நீங்கள் நிதி நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனவே செலவுகளை பார்த்து செய்யுங்கள். இம்மாதத்தில் மூதாதையர் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, September 2, 2022, 12:30 [IST]
Desktop Bottom Promotion