Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நவம்பர் மாசம் உங்க நிதி நிலை மற்றும் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க..
நவம்பர் மாதத்தில் நாம் நுழையவுள்ளோம். இந்த நவம்பர் மாதம் தொழில் மற்றும் நிதி ரீதியாக பல ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. கையில் நிறைய பணம் சேரப் போகிறது. தொழிலில் பல வெற்றிகள் கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்விலும் மாற்றங்களை உண்டாக்கும். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் நாம் நுழையவுள்ளோம். இந்த நவம்பர் மாதம் தொழில் மற்றும் நிதி ரீதியாக பல ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. கையில் நிறைய பணம் சேரப் போகிறது. தொழிலில் பல வெற்றிகள் கிடைக்கும் மற்றும் லாபகரமான மாதமாக இருக்கும். நீங்கள் உங்கள் ராசிக்கு 2022 நவம்பர் மாதம் தொழில் மற்றும் நிதி ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நல்ல பொருளாதார பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல பணப் பலன்கள் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த வாய்ப்பு இம்மாதத்தில் கிடைக்கும். பணிபுரிவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக இம்மாதம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பயணங்களால் நன்மை கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் பயணங்களால் நன்மைகளைப் பெறுவீர்கள். சில நிதி அபாயங்களை எடுக்க வேண்டியிருக்கும். வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். மாத இறுதியில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாகவும், உற்சாகம் நிறைந்தும் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது நிதி ரீதியாக நன்றாக இருக்கும். இம்மாதத்தில் நிறைய பணம் கையில் சேரும். சில நிதி அபாயங்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். வேலையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்கினால், சிக்கல்களை சந்திப்பீர்கள். மாத இறுதியில் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் நிறைய மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். நல்ல பண ஆதாயத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில இழப்புக்களை சந்திக்க நேரிடும். மாதத்தின் தொடக்கத்தில் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இம்மாதத்தில் பயணத்தை தள்ளிப் போடுவது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் துறைகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீங்கள் போடும் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். இம்மாதத்தில் தொழிலில் விரும்பிய இடமாற்றத்துடன், முன்னேற்றத்தையும் காண்பீர்கள். நிதி முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புக்களும் உள்ளன.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் நிதி நிதி வலுவாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சில விஷயங்களைப் புறக்கணித்தால், இம்மாதம் முழுவதும் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது உங்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. நெருக்கமானவர்களிடம் இருந்து உதவி கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் பயணம் மேற்கொள்வதை தள்ளிப் போடுவது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதமானது முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். பணியிடத்தில் இந்த ராசிக்காரர்களின் திட்டங்கள் வெகுவாக பாராட்டப்படும். புதிய வேலைகளைத் தொடங்க சிறந்த மாதம். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய ஆதாரங்களில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். பயணங்களால் நற்செய்தி கிடைப்பதோடு, செல்வம் பெருகும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலையில் வெற்றி கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். பணியிடத்தில் பாராட்டைப் பெறுவதோடு, பதவி உயர்வும் கிடைக்கும். செலவுகள் இருந்தாலும், வருமானமும் நன்றாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலுக்கு சாதகமான மாதமாகும். காதல் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் பெரியோர்களின் ஆசியால் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். இம்மாதத்தில் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! நவம்பர் மாதத்தில் பணியிட மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த மாதத்தில் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு சிந்தித்து முடிவெடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications