For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயக சதுர்த்தி உள்ளிட்ட எத்தனை இந்து பண்டிகைகள் இந்த மாதம் வருகிறது... அதை எப்படி கொண்டாடணும்?

அனந்த சதுர்த்தசி என்பது விஷ்ணுவின் அனந்த (நித்திய) வடிவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். இந்த நாளில், பக்தர்கள் ஒரு நாள் விரதத்தை கடைப்பிடித்து, விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

|

பண்டிகை என்றாலே நமக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில், பண்டிகை காலங்களில் உறவுகளோடு மகிழ்ச்சியாக இருப்பது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். மகிழ்ச்சியாக எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகைகள் மிகவும் கோலாகலமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இறைவனை வழிபட்டு, இறைவனுக்கு உகந்த பொருட்களை வைத்து வணங்குவார்கள். மேலும், விரதம் மேற்கொண்டு வேண்டிய வழிபாடுகளை செய்வார்கள். இது இந்து மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே, செப்டம்பர் மாதத்தில் மக்கள் கொண்டாட பல்வேறு பண்டிகைகள் மற்றும் காரணங்கள் இருக்கும்.

festivals and vrats in the month of september 2021 in tamil

பாரம்பரிய இந்து நாட்காட்டியில் ஆண்டு முழுவதும் எண்ணற்ற பண்டிகைகள் உள்ளன. கடந்த ஆண்டைப் போலல்லாமல், சாரதிய நவராத்திரி செப்டம்பரில் வராது. இருப்பினும், இந்த மாதத்தில் மற்ற முக்கிய பண்டிகைகள் உள்ளன. மாதாந்திர ஏகாதசி மற்றும் பிரதோஷ விரதம், சங்கஷ்டி சதுர்த்தி முதல் விநாயக சதுர்த்தி வரை, பக்தர்கள் கொண்டாட பல காரணங்கள் இருக்கும். செப்டம்பர் 2021 இல் முக்கியமான தேதிகள் மற்றும் பண்டிகைகளின் பட்டியலைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஜ ஏகாதசி மற்றும் ஸர்வ ஏகாதசி - செப்டம்பர் 3 மற்றும் செப்டம்பர் 17

அஜ ஏகாதசி மற்றும் ஸர்வ ஏகாதசி - செப்டம்பர் 3 மற்றும் செப்டம்பர் 17

பத்ரபாத ஏகாதசி, கிருஷ்ண பக்ஷம் (பூர்ணிமந்த் நாட்காட்டியின்படி), அஜ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது, அதே நேரத்தில் பத்ரபாத சுக்ல பக்ஷத்தில் அனுசரிக்கப்படுவது பார்ச ஏகாதசி ஆகும். பகவான் விஷ்ணு பக்தர்கள் ஒரு நாள் விரதத்தை கடைப்பிடித்து, பூஜை செய்து, கீர்த்தனைகள் பாடி, மற்றும் கடவுளை வணங்கி கீர்த்தனைகளை ஓதுகின்றனர்.

பிரதோஷ விரதம் - செப்டம்பர் 4 மற்றும் செப்டம்பர் 18 பிரதோஷ விரதம் சிவபெருமானுக்கு

பிரதோஷ விரதம் - செப்டம்பர் 4 மற்றும் செப்டம்பர் 18 பிரதோஷ விரதம் சிவபெருமானுக்கு

அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். சந்திரன் பதினைந்தாவது நாளில் மகாதேவருக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் ஒரு விரதம் மேற்கொள்கிறார்கள்.

 ஹர்தாலிகா தீஜ் மற்றும் கெளரி ஹப்பா - செப்டம்பர் 9 கஜாரி தீஜ் போலவே, ஹர்தாலிகா தீஜ் மற்றும் கெளரி ஹப்பாவும் பெண்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பெண்கள் இந்த நாளில் ஒரு விரதத்தை மேற்கொண்டு தங்கள் கணவரின் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஹர்தாலிகா தீஜ் மற்றும் கெளரி ஹப்பா - செப்டம்பர் 9 கஜாரி தீஜ் போலவே, ஹர்தாலிகா தீஜ் மற்றும் கெளரி ஹப்பாவும் பெண்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பெண்கள் இந்த நாளில் ஒரு விரதத்தை மேற்கொண்டு தங்கள் கணவரின் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஹர்தாலிகா தீஜ் மற்றும் கெளரி ஹப்பா - செப்டம்பர் 9

கஜாரி தீஜ் போலவே, ஹர்தாலிகா தீஜ் மற்றும் கெளரி ஹப்பாவும் பெண்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். பெண்கள் இந்த நாளில் ஒரு விரதத்தை மேற்கொண்டு தங்கள் கணவரின் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

விநாயக சதுர்த்தி - செப்டம்பர் 10

விநாயக சதுர்த்தி - செப்டம்பர் 10

விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இது இந்து பண்டிகையின் மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சுமார் பத்து நாட்கள் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை செய்து விரதம் மேற்கொண்டு விநாயகர் சிலையை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

விஸ்வகர்மா ஜெயந்தி - செப்டம்பர் 17

விஸ்வகர்மா ஜெயந்தி - செப்டம்பர் 17

சுயம்புவாக உருவானதாக கருதப்படும் விஸ்வகர்மா, பகவான் கிருஷ்ணன் ஆண்ட துவாரகையை வடிவமைத்தவர் எனவும் கூறப்படுகின்றது. இவர் மிகச்சிறந்த கட்டிட வடிவமைப்பாளர் என்றும், நகரை வடிவமைப்பவர் என்றும் வணங்கப்படுவதால், இவரை பொதுவாக தெய்வீக தச்சன் என அழைக்கப்பார்க்கள்.

இந்நாளில், மக்கள் கடவுளின் கட்டிடக் கலைஞர் விஸ்வகர்மாவுக்கு பூஜை செய்து அஞ்சலி செலுத்துகிறார்கள். சூரிய நாட்காட்டியின் படி தீர்மானிக்கப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும்.

அனந்த சதுர்த்தசி - செப்டம்பர் 19

அனந்த சதுர்த்தசி - செப்டம்பர் 19

அனந்த சதுர்த்தசி என்பது விஷ்ணுவின் அனந்த (நித்திய) வடிவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். இந்த நாளில், பக்தர்கள் ஒரு நாள் விரதத்தை கடைப்பிடித்து, விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர் சாய்ந்த நிலையில் காணப்படுகிறார் மற்றும் ஆதி சேஷா என்ற ஐந்து தலைகொண்ட பாம்பின் சுருள் உடலில் ஓய்வெடுக்கிறார். விஷ்ணுவின் இந்த வடிவம் அனந்த பத்மநாபசுவாமி என்றும் அழைக்கப்படுகிறது, இதன் பொருள் பிரம்மம் தாமரையில் அமர்ந்த இறைவன் என்பதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Festivals and Vrats in the Month of September 2021 in Tamil

Here are the list of festivals and vrats in the month of september 2021 in tamil.
Desktop Bottom Promotion