For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசம்பர்ல வரப்போற முக்கியமான பண்டிகைகள் & விரதங்கள் என்னென்ன தெரியுமா? நீங்க ஏன் அத பண்ணனும்?

இந்துக்களின் புனித நூலாக பகவத் கீதை உள்ளது. போர்க்களத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு கூறப்பட்ட போதனைகளே பகவத் கீதையாக வெளிவந்ததாக நம்பப்படுகிறது. இதில் உலகத்திற்கு தேவையான பல்வேறு அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

|

இந்தியாவில் பல்வேறு காலச்சாரங்கள் மற்றும் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு. டிசம்பர் ஆண்டின் கடைசி மாதம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இந்து நாட்காட்டியின்படி, டிசம்பர் மாதம் பல்வேறு முக்கிய விழாக்களை கொண்டுள்ளது. இந்த நேரத்தில் பல திருவிழாக்கள் மற்றும் மத விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்தியா கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் நிறைந்தது. இந்து மாதமான மார்கசிர்ஷா டிசம்பர் மாதத்துடன் ஒத்துப்போகிறது. மேலும் இது விவா பஞ்சமி, வைகுண்ட ஏகாதசி, கீதா ஜெயந்தி போன்ற மங்களகரமான நாட்கள் இம்மாதத்தில் வருகின்றன.

Festivals and vrats in the month of december 2021

டிசம்பர் மாதம் வரக்கூடிய திருவிழாக்கள் மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இக்கட்டுரையில் டிசம்பர் மாதம் வரப்போகும் முக்கியமான விழாக்கள் மற்றும் பண்டிகைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரதோஷ விரதம் - டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 17

பிரதோஷ விரதம் - டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 17

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் திரயோதசி நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் உள்ள காலத்தை பிரதோஷ காலம் என்று முன்னோர்கள் கணித்துள்ளனர். ஒவ்வொரு பதினைந்து நாட்களின் திரயோதசி திதியும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடித்து, மாலையில் பூஜை செய்த பின்னரே விரதத்தை முடிப்பார்கள். டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் பக்தர்கள் பிரதோஷ விரதத்தை கடைபிடிப்பார்கள்.

விநாயக சதுர்த்தி - டிசம்பர் 7

விநாயக சதுர்த்தி - டிசம்பர் 7

சந்திர சுழற்சியின் (சுக்ல பக்ஷ) வளர்பிறை கட்டத்தின் சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து, விநாயகருக்கு பூஜை செய்வார்கள். இந்நாளில் விநாயகரின் ஸ்லோகங்களைக் கூறி விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்கின்றனர்.

திருமண பஞ்சமி - டிசம்பர் 8

திருமண பஞ்சமி - டிசம்பர் 8

மார்கசிர்ஷா மாதத்தின் பஞ்சமி திதி, சுக்ல பக்ஷம், ராமர், சீதா தேவியை மணந்த நாளாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாள் திருமண பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை இந்துக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

கீதா ஜெயந்தி - டிசம்பர் 14

கீதா ஜெயந்தி - டிசம்பர் 14

இந்துக்களின் புனித நூலாக பகவத் கீதை உள்ளது. போர்க்களத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு கூறப்பட்ட போதனைகளே பகவத் கீதையாக வெளிவந்ததாக நம்பப்படுகிறது. இதில் உலகத்திற்கு தேவையான பல்வேறு அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. பகவத் கீதை, மார்கழி மாதம் ஏகாதசி திதியான சுக்ல பக்ஷத்தில் உருவானது. இந்த ஆண்டு கீதையின் 5158வது ஆண்டு விழாவாக கொண்டாடப்படவுள்ளது. பகவத் கீதை பிறந்த நாள்தான் கீதா ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது.

மார்கசிர்ஷா பூர்ணிமா விரதம் - டிசம்பர் 18

மார்கசிர்ஷா பூர்ணிமா விரதம் - டிசம்பர் 18

இந்து நாட்காட்டியில் பூர்ணிமா திதி அல்லது பௌர்ணமி நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்கசிர்ஷ பூர்ணிமா பட்டிசி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இது சத்யநாராயண பூஜைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள். இந்த நாளில், பக்தர்கள் விரதம் இருந்து இறைவனை வணங்குவார்கள். இந்நாளில் விரதம் இருந்து வணங்குவதால் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் மக்கள் பெறுவார்கள்.

தத்தாத்ரேய ஜெயந்தி - டிசம்பர் 18

தத்தாத்ரேய ஜெயந்தி - டிசம்பர் 18

தத்த ஜெயந்தி (Datta Jayanti) தத்தாத்ரேய ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இது ஒரு இந்துப் பண்டிகையாகும். இது இந்துக் கடவுளான தத்தாத்ரேயரின் பிறந்த நாளை நினைவுகூர்கிறது. தத்தாத்ரேயர் இந்து ஆண் தெய்வீக மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் ஒருங்கிணைந்த வடிவமாகும். இது நாடு முழுவதும், குறிப்பாக மகாராட்டிராவில் இந்து நாட்காட்டியின்படி (டிசம்பர்) மார்கழி மாதத்தின் முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. மார்கசிர்ஷா மாதத்தின் பூர்ணிமா திதி, பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய இந்து மும்மூர்த்திகளின் அவதாரமாக நம்பப்படும் தத்தாத்ரேயாவின் பிறந்த நாள் டிசம்பர் 18ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

அன்னபூர்ணா ஜெயந்தி மற்றும் பைரவி ஜெயந்தி - டிசம்பர் 19

அன்னபூர்ணா ஜெயந்தி மற்றும் பைரவி ஜெயந்தி - டிசம்பர் 19

மார்கசிர்ஷ பூர்ணிமா நாளில் அன்னை தேவியின் அன்னபூரணி ரூபம் வழிபடப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் செய்யும் தேவி என்று போற்றப்படுகிறாள். அதனால் அன்னபூர்ணா என்று அழைக்கப்படுகிறாள். இந்த நாளில், தசா மகாவித்யா - காளி, தாரா, ஷோடஷி, புவனேஷ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகல்முகி, மாதங்கி மற்றும் கமலா ஆகியோரும் வழிபடப்படுகிறார்கள். இந்நாளில் பக்தர்களுக்கு அன்னம் வழங்கப்படுவதால், இது ஒரு தனித்துவமான இந்து விழாவாகும்.

சங்கடஹர சதுர்த்தி- டிசம்பர் 22

சங்கடஹர சதுர்த்தி- டிசம்பர் 22

சங்கடஹர சதுர்த்தி சதுர்த்தி திதியில் அனுசரிக்கப்படும். பெளர்ணமியை அடுத்து நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி அனுசரிக்கப்படுகிறது, இந்நாளில், விநாயகப் பெருமானுக்கு பூஜை செய்து பக்தர்கள் பகல் முழுவதும் விரதம் இருந்து, இரவில் சந்திரனை தரிசனம் செய்த பின்னரே விரதத்தை முடிக்க வேண்டும். இந்நாளில் தேவாலயங்களுக்கு சென்று இயேசுவை வணங்கி, புத்தாடைகள் அணிந்து, பரிசுகளை பரிமாறிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

கிறிஸ்துமஸ் டிசம்பர் 25

கிறிஸ்துமஸ் டிசம்பர் 25

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் கிறிஸ்துமஸும் ஒன்று. கிறிஸ்துமஸ் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஒரு வருடாந்திர கொண்டாட்டமாகும். இது முதன்மையாக டிசம்பர் 25 அன்று உலகெங்கிலும் உள்ள பில்லியன்கணக்கான மக்களிடையே ஒரு மத மற்றும் கலாச்சார கொண்டாட்டமாக அனுசரிக்கப்பட்டது.

சபல ஏகாதசி - டிசம்பர் 30

சபல ஏகாதசி - டிசம்பர் 30

விஷ்ணுவின் பக்தர்கள் டிசம்பர் 30 அன்று சபல ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். தசமி திதியில் மதிய உணவுக்குப் பிறகு விரதம் தொடங்கி சூரிய உதயத்திற்குப் பிறகு துவாதசி திதியில் முடிவடைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Festivals and vrats in the month of december 2021

December 2021 Festivals and Vrats Calendar : Here are the list of festivals and vrats in the month of december 2021 in tamil.
Story first published: Tuesday, November 30, 2021, 17:04 [IST]
Desktop Bottom Promotion