Latest Updates
-
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
பிப்ரவரி மாதத்தில் கிரக நிலைகளின் படி, சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக அந்த ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நிறைய வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகள் மாறுவதால், 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்களிலும் மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் சில முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் விளைவாக அந்த கிரகங்களின் நிலைகளால் 12 ராசிகளிலுமே பலன்கள் வேறுபடும். மேலும் ஒவ்வொருவருக்குமே ஒரு மாதம் பிறக்கும் போது, அந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒரு ஆவல் இருக்கும்.

பொதுவாக ஒருவருக்கு நடக்கவிருக்கும் நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதை விட, மோசமான விஷயங்களை தெரிந்து கொண்டால், அந்த மோசமான விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்பளிக்காமல் இருக்கலாம் அல்லவா? அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் கிரக நிலைகளின் படி, சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக அந்த ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நிறைய வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
பிப்ரவரி மாத கிரக நிலைகளின் படி, ரிஷப ராசிக்காரர்கள் இம்மாதத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். குறிப்பாக இந்த மாதத்தில் வருமானம் வருவதில் சில தடைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. இருப்பினும், இம்மாதத்தின் தொடக்கம் நன்றாக இருக்கும் மற்றும் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு மற்றும் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு சாதகமாக இருக்கும்.

மிதுனம்
பிப்ரவரி மாதமானது மிதுன ராசிக்காரர்களுக்கு சற்று தீங்கு விளைவிப்பதாக இருக்கும். இம்மாதத்தில் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், திட்டமிட்டு வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பின் நற்பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ஆயினும், இம்மாதத்தின் தொடக்கத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இம்மாதத்தில் வருமானத்தில் தடைகள் ஏற்படும். செலவுகளும் அதிகரிக்கும். இம்மாதத்தில் பணத்தை சேமிப்பது சிரமமாக இருக்கும். ஏனெனில் சூரியன் 7 ஆவது வீட்டில் சனியுடன் இணைந்திருப்பதால், உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். முக்கியமாக இம்மாதத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பண பரிவர்த்தனைகளை செய்யாதீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பிப்ரவரி மாதத்தில் பண பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். மாதத்தின் முதல் வாரத்தில் பங்கு சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதே வேளையில் திடீர் பண ஆதாயமும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications