Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இந்த ராசிக்காரங்களுக்கு 2020 இல் வேலை போக வாய்ப்பிருக்கு... எச்சரிக்கையா இருங்க...
2020 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்களா? இந்த ஆண்டு மாணவர்களுக்கு வெற்றி கிடைக்குமா? உங்கள் கல்வி மற்றும் தொழில் தொடர்பான ஜாதகத்தைப் படி
2020 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்களா? இந்த ஆண்டு மாணவர்களுக்கு வெற்றி கிடைக்குமா? இங்கு 12 ராசிக்காரர்களுக்கும் 2020 ஆம் ஆண்டு கல்வி மற்றும் தொழில் எப்படி இருக்கும் என வருட ராசிப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் தற்போதைய பணியில் இருந்து மாற நினைத்தால், இந்த வருடம் ஒரு நல்ல கம்பெனியில் உயர் பதவியைப் பெறலாம். இருப்பினும், அதற்கு நீங்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கல்வித் துறையிலும், இந்த ஆண்டு திருப்திகரமான முடிவுகளைப் பெறுவீர்கள். உயர் கல்விக்கு முயற்சி செய்பவராக இருந்தால், இந்த ஆண்டு வெளிநாடு செல்ல நினைக்கும் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, 2020 ஆம் ஆண்டு தொழில் அடிப்படையில் மிகவும் முக்கியமான ஆண்டாகும். தொழிலில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அந்த மாற்றங்கள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களுக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் வலுவாக உள்ளது. நீங்கள் புதிதாக வியாபாரம் ஆரம்பிக்க நினைத்தால், அது வெற்றிகரமாக நடக்கும். இந்த வருடத்தின் மையப் பகுதியில் சற்று ஏற்ற இறக்கங்களைக் காணலாம். இருப்பினும் கடினமாக உழைக்க வேண்டும். இந்த வருடம் மாணவர்களுக்கு நல்லது. பலமுறை உங்கள் படிப்பில் கவனத்தை இழக்க நேரிடும். ஆனால் அனைத்து தடைகளையும் நீங்கள் கடந்துவிடுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, 2020 ஆம் ஆண்டு தொழில் அடிப்படையில் சவாலானதாக இருக்கும். நீங்கள் பணியாளராக இருந்தால், இந்த வருடம் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாது. இருப்பினும் தைரியத்துடனும், பொறுமையுடனும் வேலையை செய்யுங்கள். இந்த வருடத்தின் மையப் பகுதி வணிகர்களுக்கு மிகவும் நல்லது என்பதை நிரூபிக்கும். இந்த வருடம் மாணவர்கள், கடினமாக உழைத்தால் தான் வெற்றியைப் பெற முடியும். நீங்கள் விருப்பப்பட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும்.

கடகம்
கடந்த வருடம் முழுமையடையமல் இருந்த முக்கியமான பணிகள் இந்த வருடம் நல்ல வருமானத்துடன் முழுமையடையும். மேலும் நீங்கள் புதிய வேலையை ஆரம்பிக்கலாம். ஊழியர்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றப்படுவாற்கான வலுவான வாய்ப்புள்ளது. வர்த்தகர்கள் இந்த வருடம் பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அது பயனுள்ளதாக இருக்கும். இந்த வருடம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது. போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் இலக்கை அடையலாம். ஆனால் அதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, 2020 ஆம் ஆண்டு தொழில் அடிப்படையில் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த வருடத்தின் ஆரம்பம் நன்றாக இருக்கும். உயர் பதவியுடன், வருமான உயர்வும் கிடைக்கும். உங்களது செயல்திறனுக்கு பாராட்டு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த வருடம் வர்த்தகர்களுக்கு லாபகரமாக இருக்கும். இந்த வருடம் உங்களைத் தேடி பல நல்ல வாய்ப்புக்கள் வரும் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி கிட்டும். இந்த வருடம் புதிய பணியைத் தொடங்கலாம். மாணவர்களுக்கு இந்த வருடம் அற்புதமாக இருக்கும். உங்கள் எல்லா முயற்சிகளிலும் கிடைக்கும் வெற்றி, உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, 2020 ஆம் ஆண்டு நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும் மற்றும் பல புதிய மாற்றங்கள் வரும். இந்த வருடம் ஒரு புதிய கம்பெனியில், நல்ல பதவி மற்றும் சம்பளத்தில் சேரலாம். இந்த வருடம், இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இந்த வருடம் நல்ல வருமானம் சாத்தியம் என்பதால் வர்த்தகர்களுக்கு நன்றாக இருக்கும். புதிய வியாபாரத்திலும் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம். நீங்கள் சரியாக திட்டம் போட்டு வேலை செய்தால், வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வருடம் அற்புதமாக இருக்கும். பட்டதாரிகளுக்கு, இந்த வருடம் ஒரு நல்ல வேலை கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள், 2020 ஆம் ஆண்டு முன்னேற்றத்தைக் காண கடினமாக உழைக்க வேண்டும். வருடத்தின் ஆரம்பத்தில், அதிகப்படியான வேலைப்பளு இருக்கும். ஆனால் அது தான் உங்கள் முன்னேற்றத்திற்கான பாதை என்பதை நினைவில் கொள்ளுங்கள். புத்திசாலித்தனமாக வேலை செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள், அதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு இந்த வருடம் கலவையாக இருக்கும். மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பீர்கள். உங்கள் இலக்கில் கவனத்தை செலுத்தி கடினமாக உழைத்தால், அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றி அடைவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, 2020 ஆம் ஆண்டு தொழில் அடிப்படையில் நன்றாக இருக்கும். கடினமாக உழைத்தால் எதிர்காலத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வருடத்தின் ஆரம்பத்தில், புதிய வேலையை ஆரம்பிக்கலாம். வேலை தேடுபவர்கள் சற்று சிரமத்தை சந்திப்பார்கள். தங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கவில்லையே என உணர்வார்கள். தற்போதைய வேலையில் நீங்கள் திருப்தியடையாமல் இருக்கலாம். வர்த்தகர்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும். இருப்பினும் சில ரிஸ்க்குகளை எடுக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு இந்த வருடம் அற்புதமாக இருக்கும். தொழில்நுட்ப துறையில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு தொழில் அடிப்படையில் நன்றாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலுமே நல்ல பலன் கிடைக்கும். புதிய புராஜெக்ட்டுகளில் வேலை செய்து, வெளிநாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தத்தில், இந்த வருடம் தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான முன்னேற்றத்தை தரும். வர்த்தகர்களுக்கு லாபத்தை ஈட்டும் வகையில் பல வாய்ப்புக்கள் கிடைக்கும். போதுமான பணத்தை சம்பாதிக்கக்கூடும் மற்றும் தொழிலும் விரிவடையும். இந்த வருடம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் என்பதால், உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மாணவர்களுக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். ஆனால் நடுப்பகுதியில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, 2020 ஆம் ஆண்டு தொழிலானது மிகவும் மெதுவாக முன்னேற்றம் அடையும். வேலை இல்லாதவர்களுக்கு இந்த வருடம் நல்ல வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வேலை விஷயமாக இந்த வருடம் பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், எப்போதும் பிஸியாக இருப்பீர்கள். உங்களது கடின உழைப்புக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என ஏமாற்றமடையக்கூடும். இருப்பினும் கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் முன்னேறி செல்லப் பாருங்கள். நீங்கள் வியாபாரம் செய்பவராயின், இந்த வருடம் எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுங்கள். வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். 2020 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு, தொழில் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு மோசமாக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் எப்போதும் இருக்கும். எனவே இந்த வருடத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் கவனமாக முடிவெடுங்கள். வேலையை மாற்ற நினைத்தால், அவசரமாக எதையும் செய்யாதீர்கள். அலுவலகத்தில், நீங்கள் வேலையை விட்டு வெளியேறும் படியான சில பாதகமான சூழ்நிலைகளை சந்திக்கலாம். அம்மாதிரியான சூழ்நிலைகளில் புத்திசாலித்தனமாக வேலை செய்ய வேண்டும். புதிய தொழிலில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். இந்த வருடம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்காது. கல்வியில் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே, 2020 ஆம் ஆண்டு தொழில் அடிப்படையில் உங்கள் வளர்ச்சி வேகமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு விரைவில் நல்ல பலனைப் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கு அனைத்து முடிவுகளும் நன்மையளிக்கும். நீங்கள் வேலை செய்பவராக இருந்தால், உங்களின் செயல்திறன் பாராட்டப்படும் மற்றும் உங்களின் உயர் அதிகாரிகள் உங்கது வேலையால் திருப்தியடைவார்கள். இந்த வருடம் உங்களின் வருமானம் நீங்கள் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கும். இந்த வருடம் வர்த்தகர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிட்டும். ஆனால் உங்கள் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறீர்கள். மாணவர்களுக்கு இந்த வருடம் சாதனைகள் நிறைந்ததாக இருக்கும். இந்த வருடம் ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். பொறியியல் மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வருடம் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











