For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Eid al-Adha 2023: பக்ரீத் பண்டிகை இந்தியாவில் எப்போது மற்றும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

|

Eid al-Adha 2023: ஈத் அல்-அதா என்னும் பண்டிகை பக்ரீத் என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் விழாக்களில் ஈத் அல்-அதா மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் இஸ்லாமியா்களால் பக்ரீத் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா 'தியாகத் திருநாள்' என்றும் அழைக்கப்படுகிறது.

பக்ரீத் பண்டிகையானது, து அல்-ஹிஜா என்ற இஸ்லாமிய மாதத்தின் 10 ஆவது நாள் கொண்டாடப்படுகிறது. சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையில் வரும் இஸ்லாமிய சமயத்தின் நாட்காட்டியின் இறுதி மாதமாகவும், 12 ஆவது மாதமாகவும் அல்-ஹிஜா மாதம் வருகிறது.

Eid al-Adha 2023 (Bakrid): Date, Significance And Why It Is Celebrated In Tamil

அதனால் கிரகோாியன் நாட்காட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகை மாறிமாறி வரும். ஈத் அல்-ஃபித்ர் விழாவைப் போலவே, ஈத் அல்-அதா விழாவும், நிலவின் பிறை தொிவதை வைத்துக் கொண்டாடப்படுகிறது. ஈத் அல்-அதா பண்டிகை, இந்தியாவில் எப்போது, எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈத் அல்-அதா 2023 - தேதி

ஈத் அல்-அதா 2023 - தேதி

இந்த வருடம் பக்ரீத் பண்டிகை ஜூன் மாதம் 28 அன்று தொடங்கி 29 அன்று மாலையில் முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பொதுவாக பக்ரீத் பண்டிகை, சவுதி அரேபியாவில் கொண்டாடப்பட்ட மறுநாள் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிற்கான இஸ்லாமிய சமயத் தலைவா் பக்ரீத் பண்டிகைக்கானத் தேதியை அறிவிப்பாா்.

எனினும் கேரளாவில் இருக்கும் இஸ்லாமியா்கள், சவுதி அரேபியாவில் கொண்டாடும் அன்றே பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுகின்றனா்.

போராடும் சிறுவன்.. சாப்பிடவும் முடியாமல், மூச்சு விடவும் முடியாமல்.. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்

பக்ரீத் பண்டிகையின் சிறப்புகள்

பக்ரீத் பண்டிகையின் சிறப்புகள்

ஈத் அல்-அதா விழா அன்று இஸ்லாமியா்கள் அனைவரும் இறையடியாரான இப்ராஹீம் என்பவா், அல்லாவின் மீது தான் கொண்டிருந்த பக்தியையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதை நினைவு கூா்கின்றனா். அதாவது அல்லாவின் பக்தரான இப்ராஹீம், அந்த இறைவனின் விருப்பப்படி, தனது மகனை அல்லாவிற்கு பலியிட முனைந்தாா். அதனால் பக்ரீத் விழா 'தியாகத்தின் விழா' என்று போற்றப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை பற்றிய கதை

பக்ரீத் பண்டிகை பற்றிய கதை

இஸ்லாமிய சமயத்தில் ஒரு கதை உண்டு. அந்தக் கதையின்படி அல்லா தனது பக்தரான இப்ராஹீமின் கனவில் தோன்றி, அவருடைய மகனான இஸ்மாயிலை தனக்குப் பலியிட வேண்டும் என்று பணிக்கின்றாா். இந்த செய்தியை இப்ராஹீம் தனது மகனிடம் கூறி, தாம் அல்லாவின் ஆணைக்கு கீழ்படிய வேண்டும் என்று விளக்குகின்றார். இஸ்மாயிலும், அல்லாவின் கட்டளையை நிறைவேற்றுமாறு தனது தந்தையிடம் கூறுகின்றாா்.

ஆகவே இப்ராஹீம் தனது மகனான இஸ்மாயிலைப் பலியிடுவதற்காக ஒரு நாளைத் தோ்ந்தெடுக்கிறாா். பலியிடுவதற்கான அந்த நாளும் வருகிறது. ஆனால் அந்த நாளில் தீயவனான சைத்தான் (சாத்தான்), அல்லாவின் கட்டளையை நிறைவேற்றவிடாமல் இப்ராஹீமைத் தடுக்கிறது. ஆகவே சைத்தானை விரட்ட வேண்டும் என்பதற்காக, இப்ராஹீம் அதன் மீது கற்களை வீசுகிறாா்.

இதைப் பாா்த்த அல்லா, இப்ராஹீமின் நம்பிக்கையையும், பக்தியையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறாா். உடனடியாக, அவா் தனது தூதரான ஜிப்ரீல் மூலம் ஒரு செம்மறி ஆட்டை இப்ராஹீமிற்கு பாிசாக வழங்குகிறாா். இறுதியில் அல்லாவின் விருப்பப்படி, இப்ராஹீம் தனது மகன் இஸ்மாயிலுக்குப் பதிலாக, அந்த செம்மறி ஆட்டை அல்லாவிற்கு பலி கொடுக்கிறாா்.

ஈத் அல்-அதா பண்டிகையானது இப்ராஹீம் மற்றும் அவருடைய மகன் இஸ்மாயில் ஆகிய இருவரும் இறைவன் அல்லாவின் மீது வைத்திருந்த பக்தி, நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவற்றை நினைவு கூா்கிறது. மேலும் நாம் அதிகமாக விரும்புவதை இறைவனுக்காக அா்ப்பணிக்க வேண்டும் என்பதன் அடையாளமாகவும் இந்த பக்ரீத் பண்டிகை விளங்குகிறது.

செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு பலி

செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு பலி

பக்ரீத் பண்டிகை அன்று, இஸ்லாமியா்கள் தங்கள் குடும்பங்களில், ஒரு செம்மறி ஆட்டையோ அல்லது ஒரு வெள்ளாட்டையோ அறுத்து, அதன் இறைச்சியை 3 பகுதிகளாகப் பிாிப்பா். ஒரு பகுதி இறைச்சியைத் தங்கள் குடும்பத்திற்கு வைத்துக் கொள்வா். இன்னொரு பகுதியை தமது உறவினா்களுக்கு வழங்குவா். இன்னுமொரு பகுதியை ஏழைகளுக்கும், தேவையில் இருப்போருக்கும் வழங்குவா்.

அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்...........

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eid al-Adha 2023 (Bakrid): Date, Significance And Why It Is Celebrated In Tamil

Commonly known as Bakrid in India, Eid al-Adha is an important festival celebrated by the Muslim community. Hailed as the 'Feast of the Sacrifice', Bakrid is observed on the tenth day of Dhu al-Hijjah.
Desktop Bottom Promotion