Just In
- 27 min ago
காபி குடிப்பது உங்க இதயத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் பாதுகாக்குமாம் தெரியுமா?
- 1 hr ago
கொரோனா உங்கள் உடல் உறுப்புகளில் ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்புகள்... கொரோனா போனாலும் ஆபத்துதான் போல!
- 7 hrs ago
இன்றைய ராசிப்பலன் (25.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…
- 19 hrs ago
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
Don't Miss
- Sports
கோபமாக கெட்டவார்த்தையில் கத்திய கோலி.. பச்சை மண்ணு.. அவரை போய் இப்படி நடத்தலாமா?.. பெரும் சர்ச்சை
- News
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்த மம்தா பானர்ஜி!
- Automobiles
வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்
- Movies
ஓ இதுக்குப் பேரு தான் சீன் பேப்பரா.. லோகேஷ் கனகராஜ் ரியாக்ஷனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
- Finance
சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஜயதசமி பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்!
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் ஒரு விழா நவராத்திரி விழா. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்பது நாட்கள் இந்த விழா விமரிசையாக நடைபெறும். இந்த நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.
'சாரதா நவராத்திரி' என்பது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் சுக்ல பக்ஷத்தில் கொண்டாடப்படும். தேவி துர்கையை போற்றும் விதமாக இந்த பண்டிகை 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பிரதமையில் தொடங்கி நவமி வரை ஒன்பது நாட்கள் விரதமிருந்து வழிபடும் இந்த விழா தசமி திதியில் 'விஜயதசமி' என்ற பெயருடன் நிறைவடைகிறது.
MOST READ: ஆயுத பூஜை எதனால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
தீமையை நன்மை அழிக்கும் ஒரு நாளாக இந்த நாள் கொண்டாடப்படுவதால் ஸ்ரீ ராமருடன் இந்த நாளை ஒருங்கிணைக்க முடியும். தசரதரின் மகனான ஸ்ரீ ராமர், ராவணனை வீழ்த்தியதும் இதே நாளில் தான் என்று கூறப்படுகிறது. விஜயதசமி நாள் இந்த 2020 ஆம் ஆண்டில் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது மற்றும் அந்த நாளில் சுப முகூர்த்தம் மற்றும் இதர தகவல்களை இந்த பதிவில் நாம் அறிந்து கொள்வோம்.

தசரா மற்றும் விஜயதசமி
தமிழகத்தில் மகிஷாசுரனை துர்கை வதம் செய்த திருநாளை விஜயதசமி தினமாக கொண்டாடப்படுகிறது. அதேப்போல், ராமர் இராவணனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக வட இந்தியாவில் தசரா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

விஜயதசமி 2020 தேதி:
புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியின் தசமி நாளன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் காலண்டரின் படி, இந்த ஆண்டு அக்டோபர் 25ம் நாள் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இறைவனின் திருவுருவ சிலையை கரைப்பதற்கான நிகழ்வும் இந்த நாளில் நடைபெறும்.

தசரா 2020 - தசமி திதி மற்றும் பூஜைக்கான சுப முகூர்த்தம் :
இந்த ஆண்டில் தசமி திதி அக்டோபர் 25 ஆம் நாள் காலை 7.41 தொடங்கி மறுநாள் அக்டோபர் 26 ஆம் தேதி காலை 9 மணி வரை உள்ளது.
தீர்க்க பஞ்சாங்கம் அடிப்படையில் பூஜைக்கான நேரம் பின்பவருமாறு:
பூஜைக்கான நேரம் - 01:12 மதியம் முதல் 03:27 மதியம் வரை
விஜய முகூர்த்தம் - 1:57 மதியம் முதல் 2:42 மதியம் வரை

தசராவின் சிறப்பம்சம்:
தசரா பண்டிகை புராணங்களின் படி இரண்டு முக்கிய நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் தீமையை அழித்து நன்மை வெற்றி பெறும் என்ற கருத்தையே இரண்டு நிகழ்வுகளும் முன்வைக்கிறது.
இந்த நாளில் தேவி துர்க்கை, அரக்கன் மகிஷாசுரனை அழித்து தொடர்ந்து 9 நாட்கள் நடந்த போரில் வெற்றியடைந்தார். இலங்கை அரசன் ராவணனும் மகிஷாசுரன் துர்கா தேவியிடம் தோற்றது போலவே ஸ்ரீ ராமரிடம் தோற்றுவிட்டான். இந்த விதத்தில் தேவி துர்க்கை மற்றும் ஸ்ரீ ராமர் ஆகிய இருவரும் அழிவு மற்றும் துன்பத்தை போக்கி தர்மத்தை நிலைநாட்டினர்.

ராம்லீலா
ராவணனை தோற்கடித்த ஸ்ரீ ராமரின் வெற்றியை நாட்டின் பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பாரம்பரியம் ‘ராவண தஹன்' என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ராவணன், அவன் மகன் மேகநாத் (இந்திரஜித்) மற்றும் அவன் தம்பி கும்பகர்ணன் ஆகியோரின் உருவ சிலையை எரிப்பதைக் காண மக்கள் கூட்டம் குவியும். ஸ்ரீ ராமர் வேடமணிந்த ஒருவர் ராவணன் மற்றும் மற்ற உருவச்சிலைகள் மீது அம்பு தொடுத்து அவற்றை எரித்து சாம்பலாக்கி விடுவது இந்நாளில் வழக்கம். தீமையை அழிக்கும் ஒரு சடங்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
துளசிதாசரின் ராமசரிதமானஸ் இதிகாசத்தை அடிப்படை கொண்ட நாடகம் நடத்தப்பட்டு நடிகர்கள் அதில் பங்கேற்று நடிப்பார்கள். ராம்லீலா போல் இதுவும் ஒரு பிரபல நிகழ்வாகும். யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் ராம்லீலாவும் ஒன்று என்பது ஒரு சுவாரஸ்யமான தகவலாகும்.