For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 2வது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு பற்றி பலரும் அறியாத விஷயங்கள்!

இந்தியாவின் புதிய மற்றும் இரண்டாவது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைக் காண்போம்.

|

இந்திய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின பெண் தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரௌபதி முர்மு வெற்றி பெற்று, இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவரானார்.

Droupadi Murmu: Facts About India’s First Tribal And Second Woman President In Tamil

இந்த தேர்தலில் முர்மு எதிர்கட்சி வேட்பாளாராக நின்ற முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை எதிர்கொண்டு 3,78,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இப்போது இந்தியாவின் புதிய மற்றும் இரண்டாவது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு

பிறப்பு

திரௌபதி முர்மு 1958 ஜூன் 20 ஆம் தேதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. முர்மு சந்தல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சியாம் சரண் முர்முவை திருமணம் செய்து கொண்டார்.

படிப்பு

படிப்பு

திரௌபதி முர்மு தற்போது பல்கலைகழகமாக இருக்கும் ரமா தேதி மகளிர் கல்லூரியில் டிப்ளமோ பெற்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு முர்மு ஒடிசா நீர்ப்பாசனத் துறையில் மூன்றாம் வகுப்பு ஊழியராகப் பணிபுரிந்தார்.

ஆசிரியர்

ஆசிரியர்

திரௌபதி முர்மு அரசியலுக்கு வரும் முன்பு ஆசிரியராக பணியாற்றினார். இவர் ரைரங்பூர் ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

வலிமையான பெண்

வலிமையான பெண்

திரௌபதி முர்மு வலிமையான பெண்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஆனால் இது அவரை பல துயரங்களை சந்திக்க வைத்தது. 2009 ஆம் ஆண்டு திடீர் மரணத்தால் இவர் தனது ஒரு மகனை இழந்தார். அதன் பின் 2012 இல் இரண்டாவது மகனை சாலை விபத்தில் இழந்தார். 2014 ஆம் ஆண்டு இவரது கணவன் மாரடைப்பால் இறந்தார். 2009-2015-க்கு இடையே, இவர் தனது தாயையும், சகோதனையும் இழந்தார். இருப்பினும், மனம் தளராமல் மற்றவர்களின் வலியைக் குறைக்க அரசியலில் தனது கவனத்தை செலுத்தி மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

பதவிகள்

பதவிகள்

64 வயதான திரௌபதி முர்மு மயூர்பஞ்சில் உள்ள ராய்ராங்பூரில் இரண்டு முறை பாஜக எம்எல்ஏவாகவும், முன்னாள் ஒடிசா அமைச்சராகவும் உள்ளார். அவர் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார் மற்றும் அந்த பதவியில் 2021 வரை பணியாற்றினார். மேலும் இவர் அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார். அவர் மே 2015 முதல் ஜூலை 2021 வரை ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தார். 2000 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலம் தொடங்கப்பட்டதில் இருந்து, அந்த மாநிலத்தில் நீண்ட காலம் கவர்னராக இருந்தவர் திரௌபதி முர்மு.

நீலகாந்த் விருது

நீலகாந்த் விருது

2007 ஆம் ஆண்டில் ஒடிசா சட்டமன்றம் திரௌபதி முர்முவுக்கு இந்த ஆண்டின் சிறந்த எம்.எல்.ஏ-வுக்கான நீலகாந்த் விருதை வழங்கியது.

கண் தானம்

கண் தானம்

திரௌபதி முர்மு 2016 ஆம் ஆண்டில் ராஞ்சியில் உள்ள காஷ்யப் நினைவு கண் மருத்துவமனைக்கு தான் இறந்த பிறகு தனது கண்களை தானம் செய்வதாக கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Droupadi Murmu: Facts About India’s First Tribal And Second Woman President In Tamil

Droupadi Murmu: Here are some lesser-known facts about India’s first tribal and second woman President. Read on to know more...
Story first published: Friday, July 22, 2022, 10:52 [IST]
Desktop Bottom Promotion