For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கரப்பான்பூச்சி மட்டும் ஏன் சாகடிக்கவே முடியல தெரியுமா? இதுதான் காரணம்...

கரப்பான்பூச்சிகள் அந்த வரத்தை வாங்கி வந்துள்ளன என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

|

'கரப்பான்பூச்சி' - இந்த வார்த்தையை கேட்டாலே பலர் அருவருப்பாக உணர்வார்கள். பார்த்தால் கேட்கவே வேண்டாம்! 'எனக்கு யார் கையாலும் மரணம் நேரக்கூடாது' என்று வரம் கேட்கும் கதைகளை கேட்டிருப்போம். ஆனால், கரப்பான்பூச்சிகள் அந்த வரத்தை வாங்கி வந்துள்ளன என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

Cockroaches

கூடுமானவரை அனைத்து வகை பூச்சிக்கொல்லிகளையும் எதிர்க்கும் திறனை கரப்பான்பூச்சிகள் பெற்றுக் கொள்கின்றன என்று ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்க பல்கலைக்கழகம்

அமெரிக்க பல்கலைக்கழகம்

'என்ன, கரப்பான்பூச்சிக்கு சாவே கிடையாதா?' என்று அலறுகிறீர்களா? ஆம்! பூச்சிக்கொல்லிகளை எதிர்க்குத் திறன் அவற்றில் பெருகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இண்டியானாவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. கூடுமானவரை அனைத்து வகை பூச்சிக்கொல்லிகளையும் எதிர்க்கும் திறனை கரப்பான்பூச்சிகள் பெற்றுக் கொள்கின்றன என்று ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

MOST READ: இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா? அரசு என்ன சொல்லுது?

 கிருமிகளின் வாகனம்

கிருமிகளின் வாகனம்

ஜெர்மன் கரப்பான்பூச்சி என்ற வகை பூச்சிகள் மனிதர்கள் வாழுமிடத்தில் வசிப்பவை. அவை எதிர்ப்பு மருந்துகளை தாங்கும் திறன் கொண்ட சல்மோனெல்லா மற்றும் ஈகோலி உள்ளிட்ட பல நுண்ணுயிர்களை கரப்பான்பூச்சிகள் சுமந்து வருவதால் சுகாதார கேட்டை உருவாக்கும் அபாயம் கொண்டவை. விஞ்ஞானிகள் பல்வேறு வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பார்த்து, கரப்பான்பூச்சிகள் இவற்றை தாங்கக்கூடிய திறனை வளர்த்துக்கொள்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். கரப்பான்பூச்சியின் ஆயுள்காலம் 100 நாள்கள். ஆகவே, அவை வேகமாக வளருகின்றன. இதன் காரணமாக தாங்கும் திறனும் மேம்படுகிறது.

பூச்சிக்கொல்லி ஆராய்ச்சி

பூச்சிக்கொல்லி ஆராய்ச்சி

மூன்று கரப்பான்பூச்சி கூட்டங்கள்மேல் மூன்று பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி இந்த ஆய்வு செய்யப்பட்டது. கடைகளில் கிடைக்கின்ற மூன்றுவித பூச்சிக்கொல்லிகள் ஆராய்ச்சிக்காக வாங்கப்பட்டன. ஆறு மாத காலம் இந்த ஆராய்ச்சிக்கான காலமாக நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு கரப்பான்பூச்சி கூட்டத்தின்மேல் ஒரே நேரத்தில் மூன்று பூச்சிக்கொல்லிகளும் தெளிக்கப்பட்டன. அடுத்தக் கூட்டத்தின்மேல் மூன்று பூச்சிக்கொல்லிகளையும் கலந்த கலவை தெளிக்கப்பட்டது. மூன்றாவது கரப்பான்பூச்சி கூட்டத்தின்மேல் ஒரே ஒரு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.

MOST READ: சந்திராயன் 2 சக்ஸஸ் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இதோ... எத்தனை நாள் நிலவில் இருக்கும் தெரியுமா?

குறையாத எண்ணிக்கை

குறையாத எண்ணிக்கை

குறிப்பிட்ட காலம் சென்ற பின்னர் அநேகமாக எந்தக் கரப்பான்பூச்சிக் கூட்டமும் அளவில் குறைந்தததாக தெரியவில்லை. மாறாக, அவற்றின் பூச்சிக்கொல்லி மருந்து எதிர்ப்புத் திறன் அதிகரித்ததுபோன்று காணப்பட்டது. எல்லா வேதிப்பொருள்களையும் தாங்கும் திறன் கரப்பான்பூச்சிகளுக்குள் வளர்ந்தது தெரிய வந்தது.

பூச்சிக்கொல்லி மருந்துகளை கொண்டு கொல்ல இயலலாதால், கரப்பான்பூச்சிகளை பார்த்ததும் எதைக்கொண்டாது அவற்றை நசுக்கிக் கொல்வதை தவிர வேறு வழி இல்லை போலும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Know That Cockroaches Are Now ‘Almost Impossible’ To Kill?

'Cockroach' is a word that instigates fear or disgust. But what happens when you realise that now it is impossible to kill them? Scary right? The thought of cockroaches never dying can give goosebumps to many but the fact is that cockroaches do not die an easy death anymore!
Story first published: Tuesday, July 23, 2019, 17:07 [IST]
Desktop Bottom Promotion