For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி பகவானின் முழு அருளும் கிடைக்க எந்த ராசிக்காரர்கள் என்ன செய்யணும் தெரியுமா?

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து விடுபட சனி ஜெயந்தி ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

|

நவகிரகங்களில் ஒருவரான சனிபகவான் பிறந்த தினம் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சனி ஜெயந்தி ஜெயேஷ்ட மாத அமாவாசை தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் சனி ஜெயந்தி மே 22 ஆம் நாள் ஆகும். இந்த நாளில் அனைத்து பக்தர்களும் சனி பகவானை சந்தோஷப்படுத்த முயற்சித்து, அவரது முழு ஆசீர்வாதத்தையும் பெற விரும்புவார்கள்.

Do This Remedy According To The Zodiac Sign On Shani Jayanti

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து விடுபட சனி ஜெயந்தி ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்நாளில் சனி பகவானின் விருப்பமான பக்தராக விரும்பினால், உங்கள் ராசிக்கேற்ப ஒருசில நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டால் போதும். இவற்றை தவறாமல் பின்பற்றினால், சனி பகவானின் உதவியுடன், அவரது முழு அருளையும் பெறலாம். இப்போது சனி ஜெயந்தி அன்று சனி தோஷம் நீங்க ஒவ்வொரு ராசிக்காரரும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எந்த ஏழை மற்றும் உதவியற்ற மக்களையும் தொந்தரவு செய்யக்கூடாது. சனி ஜெயந்தி அன்று சுந்தரகாண்டம் அல்லது ஹனுமான் சாலிசாவை ஓதுவது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி அன்று ஏழை மக்களுக்கு நன்கொடை அளிப்பது நல்லது. முடிந்தால் நோயுற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள். அதோடு சனி பகவானின் பெயர்களை இன்று முழுவதும் உச்சரியுங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் மூத்தவர்கள் மற்றும் பெற்றோர்களை மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தவும். சனி பகவானுக்கு கருப்பு உளுத்தை படைப்பதன் மூலம், சனி தோஷத்தில் இருந்து விலக வாய்ப்புள்ளது.

கடகம்

கடகம்

சனி ஜெயந்தி அன்று கடக ராசிக்காரர்கள் தசரத மன்னரின் சனி மூலத்தை ஓதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்படி செய்வதன் மூலம், சனி பகவானின் பரிபூர்ண ஆசீர்வாதம் மற்றும் அருளும் கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள், சனி ஜெயந்தியான இன்று எந்த ஒரு வேலையை செய்யும் முன்பும் அனுமனுக்கு பூஜை செய்த பின்னரே ஆரம்பிக்க வேண்டும். இப்படி செய்வதால், உங்களின் முக்கிய காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக சனி பகவானின் ஆசீவாதத்துடன் நடைபெறும். அதோடு சனி பகவானின் முழு அருளும் கிடைக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள், சனி ஜெயந்தி நாளில் விரதம் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். மேலும் இன்று முழுவதும் சனி பகவானின் மந்திரங்களை உச்சரிப்பது நன்மை பயக்கும். அதோடு சனி தோஷம் இருந்தாலும் விலகும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி அன்று வாதைகளில் சிக்கியுள்ள ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மேலும் சனி பகவானின் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு எள்ளு பொட்டலம் கொண்டு எண்ணெய் விளக்கு போடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள், காலையில் எழுந்ததும் மாடு அல்லது நாய்க்கு மறவாமல் உணவளிக்க வேண்டும் மற்றும் அனுமன் சாலிசாவை சொல்ல வேண்டும். இதனால் சனி பகவானின் அருள் கிட்டும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் அரச மரத்திற்கு கீழே ஒரு விளக்கு ஏற்றி சனி பகவானை வணங்கினால், சனி பகவானின் முழு அருள் கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் வீட்டை தேடி வரும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவானை சந்தோஷப்படுத்தலாம். அதோடு இவர்கள் சனி பகவான் பிறந்த நாளான இன்று சனி பகவானின் மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள், சனி பகவான் பிறந்த நாளான சனி ஜெயந்தி அன்று அனுமனை வழிபடுவதன் மூலம், சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள், சனி பகவானின் முழு அருளும் கிடைக்க, அவர் பிறந்த நாளான சனி ஜெயந்தி அன்று பஜ்ரங் பானை பாராயணம் செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do This Remedy According To The Zodiac Sign On Shani Jayanti

Shani Jayanti is celebrated every year on the new moon day of Jyeshtha month, which is on May 22 this time. Do this remedy according to the zodiac sign on Shani Jayanti, you will get the blessings of Shani Dev.
Story first published: Friday, May 22, 2020, 12:55 [IST]
Desktop Bottom Promotion