Just In
- 4 hrs ago
உங்க குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை 50% தள்ளுபடி விலையில் இப்போதே அமேசானில் வாங்குங்கள்!
- 4 hrs ago
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...
- 4 hrs ago
உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்...!
- 5 hrs ago
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
Don't Miss
- Movies
விரைவில் ஓய்வுபெற போகிறேன்..பொன்னியின் செல்வன் விழாவில் விக்ரம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- News
செல்போனில் ‘100’ போட்டோ! தோழிகளை ‘அந்த’ வேலைக்கு அழைத்த குயின் ‘ஸ்வேதா’! திடுக்கிட்ட திருப்பூர்..!
- Sports
பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து
- Finance
870 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம்.. கவலையில் வேஃபேர் ஊழியர்கள்..!
- Automobiles
நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல் இப்பவே வெளியானது!.. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!
- Technology
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Xiaomi நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்.!
- Travel
உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
பணப் பிரச்சனை நீங்கணுமா? அப்ப வெள்ளிக்கிழமை இந்த விஷயங்களை செய்யுங்க...
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாகும். அதில் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்குரிய நாளாகும். ஒருவர் தனது வாழ்க்கையில் நல்ல நிதி நிலைமையில் இருக்க வேண்டுமானால், லட்சுமி தேவியின் அருளைப் பெற்றிருக்க வேண்டும். லட்சுமி தேவியின் அருளைப் பெற வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை பூஜித்து வணங்க வேண்டும். லட்சுமி தேவி செல்வத்திற்கு மட்டுமின்றி, மகிழ்ச்சியின் அதிபதியாகவும் கருதப்படுகிறார். ஒருவரின் பூஜையால் லட்சுமி தேவி மகிழ்ந்தால், வீட்டில் செல்வம் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இருக்காது மற்றும் வாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
நீங்கள் சமீப நாட்களாக நிதி நெருக்கடி அல்லது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம். கீழே நிதி பிரச்சனைகள் நீங்குவதற்கு வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மண் விளக்கில் கற்பூரம்
யாரோ ஒருவரின் தீய பார்வை உங்கள் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்து, அதனால் திருமண உறவு மோசமாக இருந்தால், வெள்ளிக்கிழமை அன்று ஒரு மண் விளக்கை எடுத்து, அதில் 2 கற்பூரத்தை வைத்து ஏற்றி, அதை வீடு முழுவதும் சுற்றி காட்டுங்கள். இப்படி செய்வதால் திருமண வாழ்வில் இனிமை அதிகரிக்கும்.

108 முறை சுக்கிரனுக்குரிய மந்திரம்
ஒருவரது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் இனிமையை பேணுவதற்கு, சுக்கிர கிரகத்தை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுக்கிரனை வலிமையாக்க வெள்ளிக்கிழமையில் 'கிராம் க்ரேம் க்ரூம் ஸஹ சுக்ரே நமஹ்' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் கணவன்-மனைவி இடையேயான உறவு வலுவடையும்.

இனிப்பு தானம்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலைத்திருக்க வேண்டுமானால், வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை வணங்குங்கள். அதுவும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று இனிப்புக்களை தானம் செய்யுங்கள். அதோடு சிவப்பு நிற ஆடைகள், சிவப்பு நிற வளையல்கள், குங்குமம் போன்றவற்றையும் வழங்க வேண்டும்.

சிவப்பு நிற அரிசி மூட்டை
பணப் பிரச்சனையை எதிர்கொள்கிறீர்களா? அப்படியானால் வெள்ளிக்கிழமையில் சிவப்பு நிற துணியை எடுத்து, அதில் 1 1/2 கிலோ அரிசியை வைக்க வேண்டும். முக்கியமாக இந்த அரிசியானது உடைக்கப்படாமல் இருக்க வேண்டும். பின் அதை மூட்டையாக கட்டி, கையில் எடுத்து, 'ஓம் ஸ்ரீம் ஸ்ரீயே நம' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். அதன் பின்னர் அந்த அரிசி மூட்டையை பாதுகாப்பாக வைத்திருங்கள். இப்படி செய்வதால் பண பிரச்சனை நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.