Just In
- 5 hrs ago
இந்த படத்துல முதலில் உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
- 5 hrs ago
தினமும் 10000 அடிகள் நடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது உண்மையா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன?
- 6 hrs ago
கொரிய பெண்கள் அழகாக பொலிவாக இருக்க இந்த ஒரு விஷயம் தான் காரணமாம்... அது என்ன தெரியுமா?
- 7 hrs ago
கத்திரிக்காய் பொடி கறி
Don't Miss
- News
12 ஆயிரத்துக்கு சீன போன்! திவாலாகும் இந்திய கம்பெனிகள்? தடை போட முடிவெடுத்த மத்திய அரசு? பரபர தகவல்!
- Movies
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சிநேகன் மீது நடவடிக்கை எடுக்கனும்...ஜெயலட்சுமி பதில் புகார்
- Sports
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..பும்ரா காயத்தால் விலகல்..அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்கள்
- Finance
10 வருடத்தில் ரூ.50 லட்சம் சேமிக்கணும்.. எதில் எவ்வளவு முதலீடு..எது பெஸ்ட்..!
- Automobiles
ஹார்னட் மாதிரி பைக் விடச் சொன்னா ஹார்னட்டயே அப்டேட் பண்ணி பெயரை மாற்றி விட்டுருக்காங்க....
- Technology
50எம்பி கேமராவுடன் களமிறங்கும் Moto G62 போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?
- Education
கால்நடை ஆலோசகர் ஆகனும்?
- Travel
"ஜுவல் ஆஃப் பே ஆஃப் பெங்கால்" என்றழைக்கப்படும் கடற்கரை எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
இந்த ஒரு பொருளை இப்படி யூஸ் பண்ணுனா.. கடன் மற்றும் பணப் பிரச்சனை விரைவில் நீங்குமாம்..
நாம் அனைவருமே சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்காக தான் அல்லும் பகலும் அயராது உழைத்து பணம் சம்பாதிக்கிறோம். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும், பணம் போதாமல் கடன் வாங்க வேண்டியுள்ளது. இப்படி கடனாக வாங்கும் பணத்தை பலரால் அடைக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். ஆனால் படிகாரம் என்னும் ஒரு பொருள் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுகிறது. அதில் பற்கள் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கவும், முகச்சுருக்கம் போன்ற சரும பிரச்சனைகளைப் போக்கவும் பயன்படுவதோடு மட்டுமின்றி, வாழ்க்கை தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் படிகாரம் உதவுகிறது.
பொதுவாக படிகாரத்தைக் கொண்டு வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு பரிகாரங்களை செய்யலாம். குறிப்பாக இந்த படிகாரம் எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை உருவாக்க உதவுகிறது. மேலும் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது. வாஸ்து தோஷத்தை நீக்குகிறது. இப்போது படிகாரத்தைக் கொண்டு என்னென்ன பரிகாரங்களை செய்யலாம் என்பதைக் காண்போம்.

கடனில் இருந்து விடுபட...
வெற்றிலையில் படிகாரம் மற்றும் குங்குமத்தை வைத்து, நூலால் கட்ட வேண்டும். இதை புதன்கிழமை காலை அரச மரத்தின் கீழ் புதைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தை 3 புதன்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும்.

வாஸ்து தோஷம் நீங்க..
வீட்டின் வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கு, வீட்டின் ஒவ்வொரு அறையிலும் படிகாரத்தை வைக்க வேண்டும். இதனால் வாஸ்து குறைபாடுகள் நீங்குவதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.

எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற...
வீட்டில் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்திருப்பது போன்று நீங்கள் உணர்ந்தால், படிகாரத்தைக் கொண்டு எதிர்மறை ஆற்றலை அகற்றுஙக்ள். அதற்கு குளியலறையில் ஒரு பாத்திரத்தில் படிகாரத்தைப் போட்டு வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாத்திரத்தை யாருடைய கண்ணிலும் படாத வகையில் வைக்க வேண்டும். இதனால் எதிர்மறை ஆற்றல் வெளியேறும்.

திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்க...
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டால், ஒரு துணியில் படிகாரத்தைக் கட்டி, படுக்கை அறையில் உள்ள ஜன்னலில் தொடங்க விட வேண்டும். இதனால் எதிர்மறை ஆற்றல் நீங்கி, திருமண வாழ்வில் அமைதி உண்டாகும்.

கெட்ட கனவுகளை போக்க...
உங்களுக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கிறதா? இந்த பிரச்சனையைப் போக்க ஒரு கருப்பு அல்லது நீல நிற துணியில் படிகாரத்தை வைத்து கட்ட வேண்டும். இந்த மூட்டையை இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் கனவுகள் எதுவும் வராது.

நிதி நிலையை மேம்படுத்த...
வீட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு, ஒரு சிவப்பு துணியில் ஒரு துண்டு படிகாரத்தை வைத்து கட்டி, அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பணம் அதிகம் சேரும். மேலும் இது வியாபாரத்தில் வெற்றிக்கு வழிவகுப்பதோடு, சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும்.